காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -16

கா ர்த்திகை திங்கட்கிழமைக்காக உஜ்ஜெயின் செல்கிறோம். வழியில் குவாலியர் வந்துள்ளோம். பெரியவர்களும் வருவதாக இருந்தது. வேறு காரணத்தால் இயலவ்லிலை. மகான்களின் ஆசீர்வாதம் ஏதாவது ஒரு வகையில் ஏற்படுகிறது. தேவதைகட்கு சக்தி அளிக்கவும், பூமியைக் காப்பதற்காகவும், ஒவ்வொரு காரணத்திற்காகத் தான் எங்கும் இருப்பதைக் காட்ட, மனிதனின் வாழ்வினை உயர்த்த என பல வகை அவதாரங்கள் ஏற்பட்டன. கலியுகத்தில் தர்மத்தினை உபதேசிக்க ஏற்பட்ட அவதாரம் சங்கராசார்யர். பக்தி ஞான மார்க்கத்தை நிலைநாட்ட இந்த பாரத தேசத்தை தனது 32 வயதிற்குள் மும்முறை பாத யாத்திரை செய்தார்கள். கேரளத்தில் குருவாயூரக்கு அருகில் உள்ள காலடியில் பிறந்து எட்டு வயதில் ஸன்யாஸம் பெற்றார்கள். பிறந்தது கேரளாவாக இருந்தாலும் ஸன்னியாஸம் பெற மத்தியபிரதேசத்திற்கு வந்தார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற ஸப்த நதிகளையும், அயோத்யா, மதுரா, மாயா என்ற ஸப்த மோக்ஷ புரிகளையும் தரிசித்தார்கள். பன்னிரெண்டு ஜ்யோதிர் லிங்கங்களையும் தரிசித்தார்கள். இந்த ஜ்யோதி லிங்கங்கள் தமிழ்நாட்டில், குஜராத்தில், ஆந்திராவில், உத்தர பிரதேசத்தில், மத்திய பிரதேசத்தில், மஹாராஷ்டிரத்தில் உள்ளன. ஓம் முக்கியமானது அந்தப் பெயரில் ஏற்பட்டது ஓங்காரேஸ்வரர் கோயில். எட்டு வயதில் நர்மதா நதிக்கரையில் கோவிந்தபகவத்பாதரிடம் ஸன்யாஸம் பெற்று காசி சென்று இந்தியா முழுவதும் வழிகாட்டினார்கள். ஆதிசங்கரரின் குருவின் இடம் மத்திய பிரதேசம். எங்கு பக்தி மான்கள் அதிகமாக உள்ளனரோ அங்கே பகவான் அவதரிக்கிறார். பக்தி பூரண நம்பிக்கை ஆகியவற்றிற்க்கு எடுத்துக்காட்டு உஜ்ஜெனியில் உள்ள மாதா காளியின் கோயில். மத்திய பிரதேசத்தில் உள்ள நீங்கள் பாக்கியசாலிகள். '' நர் '' என்பதற்கு '' மங்களம் '' என்று பொருள். அதனை அளிப்பதால் அதற்கு நர்மதா என பெயர். நர் ததாதி இதி நர்மதா தங்கள் வாழ்வில் செய்த புண்ணியத்தால் மனித பிறவி கிடைத்துள்ளது. பஹ¨னாம் ஜன்மனாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யந்தேஎன்பது கீதாவாக்கு எத்தனையோ பிறவிகட்கு பின் ஞானிகள் என்னை அடைகினறனர் என்பது இதன் பொருள். பகவானின் நாமத்தை ஒரு தடவை அல்ல பல தடவை மீண்டும் மீண்டும் சொல்லி பயிற்சி செய்ய வேண்டும். பகவானின் பக்தியும், ஆசியும், நன்மைகள் யாவும் உங்களுக்கு கிட்ட ஆசீர்வதிக்கிறோம்.

(20-11-97 அன்று குவாலியரில் ஆற்றிய இந்தி உரையின் தமிழாக்கம்)

க்தர்கட்கு சில தினங்களாக தர்ம சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் வேத கோஷம். யாகத்தின் தரிசனம். மறுபுறம் சிவ பூஜை. வித்யாரண்ய ஸரஸ்வதியின் சிவபுராண பிரவசனம். மனிதனை மேலே எழுப்புவது பக்தி. தேவர்களை நாம் பூஜை செய்தால் அவர்கள் நமக்கு நன்மை செய்வார்கள். '' பரஸ்பரம் பாவயந்த '' இது கீதா வாக்கு. பாரதம் பவித்ரமான நாடு சிவ சக்தி பூமி. ராமேஸ்வரம், ஸ்ரீசைலம், விஸ்வநாதர் வசிக்கும் காசி, கேதாரம், சோமநாதம், பீம சங்கர், நாகநாத், வைத்யநாத், ஓம்காரேஸ்வரம், மஹாகாளேஸ்வரம் ஆகிய பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்ளைக் கொண்டது பாரத பூமி. உஜ்ஜெயினி, காஞ்சி போன்ற அநேக சக்தி பீடங்கள் கொணடது பாரத பூமி. நேபாளத்தில், பங்களாதேஷில், பாகிஸ்தானில் கூட சக்தி பீடங்கள் உள்ளன. மகான்களின் பூமி இது. கல்வி பணம் முதலியவற்றினை மனிதர்கள் சம்பாதித்துக் கொள்கின்றனர். அதே போல் புண்ணியத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இது மஹான்களின் அனுக்ரஹத்தினாலும், சத்ஸங்கத்தினாலும் தான் கிட்டும். சிவ பூஜை ஆதிகாலத்திலேயிருந்து வந்துள்ளது. காஞ்சிபுரம் சிவ «க்ஷத்திரம். அங்கு மண்ணால் சிவலிங்கம் செய்து ஸ்தாபித்து பூஜை செய்த இடம். அது ப்ருத்வி «க்ஷத்திரம். கோதாவரியினை தக்ஷிண கங்கா என்பர். கோதாவரி நதிக்கரையில் வசிக்கும் பக்தர்கள் சிவ பூஜை செய்கின்றனர். புண்ணியம் கிட்டுகிறது. உங்களுக்கும் புண்ணியம் கிட்டியுள்ளது. பகவானின் நாமத்தினை காலை மாலைகளில் ஜபித்து நெற்றியில் அவரவர் குல தர்மப்படி மத சின்னங்களை அணிந்து, மகான்களின் கிரந்தகளைப் படித்து வர நன்மையாவும் கிட்டும். இது உங்களுக்கு கிட்ட ஆசீர்வதிக்கிறோம்.

(20-11-97 குவாலியரில் ரிக், ஸாம, அதர்வ வேத ஸம்ஹிதை ஹோமம் நடந்ததையும் கண்டு வித்யானந்த ஸரஸ்வதியின் பிரவசனத்தையும் கேட்டு இந்தியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 15
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 17
Next