காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -17

மது தேசம் பாரதம். இது மிகவும் புனிதமானது. மகான்கள், மஹரிஷிகள், தவசிகள் ஆகியோர் நிறைந்த பூமி. தீரத்தங்களுக்கு இங்கு விசேஷம். இத்தகைய மேன்மை வேற எந்த நாட்டிலும் இல்லை. வெளிநாட்டவர் இங்கு வருவதற்கு இது ஒரு புண்ணிய பூமி என்பதே காரணம். மனிதப் பிறவி கிடைப்பதே கடினம். ஆயிரம் மனிதர்களில் யாராவது ஒருவர் பகவானிடம் பக்தி செலுத்த முயற்சிக்கின்றான். யாரோ ஒருவற்கு பல பிறவிகட்குப் பின் முக்தி கிடைக்கிறது. இதனைத் தான் சங்கராசார்யார் ''புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜடரே சயனம்''என்கிறார். சிலருக்கு இளவயதிலேயே ஞானம் கிட்டுகிறது. உதாரணத்திற்கு வாம தேவர், ப்ரஹ்லாதர், மனித வாழ்வில் கிட்டியதில் என்ன செய்யவேண்டும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம் விவேகம் இதனால் தான் நல்ல பயன் கிட்டுகிறது. எதனை கடைபிடிப்பதால், பழக்கத்தில் கொள்வதால் நன்மை கிடைக்கிறதோ அது தான் புண்ணியம். இந்த புண்ணிய செயலை செய்வதற்கு இறைவன் அருள் தேவை. சிரத்தை மிகவும் தேவை. பலர் தவம் செய்தனர். பார்வதி தேவியும் தவம் செய்தார்கள். அவர்கட்கு ஒரு பெயர் அபர்ணா. அரசனின் மகளானாலும் தவம் செய்தார்கள். அர்ச்சுனன் பாசு பதத்திற்காக தவம் செய்தான். இருக்கும் நதிகளில் புண்ணியமானது கங்கை. இதனை நினைத்தால், இதில் குளிததால் புண்ணியும் கிட்டுகிறது. இது பூமிக்கு தவத்தினால் வருகிறது. தவம் பல வகை. சுயநலத்திற்காகவும், உலக நன்மைக்காகவும் செய்யப்படுகிறது. பகீரதன் செய்த தவம் சுயநலத்திற்காக அல்ல. அவனின் முன்னோர்கள் நற்கதி அடைய தவம் செய்தான். கபில முனிவரின் சாபத்தினால் பஸ்மம் ஆன தனது முன்னோர்கள் கடை தேற கங்கையினை தவமியற்றி பகீரதன் பூமிக்கு கொணர்ந்தான்.

கங்கா கல்மஷ நாசினி பாவனி பாகீரதி என்றார் ஆதிசங்கரர். துருவன் சிறுவயதிலேயே தவம் செய்தான். இது தவ பூமி. மனித வாழ்வு கிட்டியுள்ளது. இதில் என்ன செய்ய வேண்டும். இதனை நமக்கு எவர் காட்டி கொடுப்பார்;தர்ம சாஸ்திர புத்தகங்கள் தான் காட்டி கொடுக்கும். மனிதனின் மேன்மைக்காக ஏற்பட்டவையே தர்ம சாஸ்திர புத்தகங்கள். இவற்றில் சொல்லியுள்ளது போன்று உலகில் வேறு எங்கும் விரிவாக சொல்லப்படவில்லை. சரீர ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதம். விஞ்ஞானத்திற்காக கணிதம். அமைதியுடன் இறைவனை அடைய சங்கீதம். சரீரத்தை நனறாக வைத்துக் கொள்ள யோகம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ ச்ரத்தையோ தேயம். அசிரத்தயா ந தேயம் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகில் நேரிடையாக பார்க்கக் கூடிய தேவதை யார் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு தாய் என பதில் அளிக்கிறார் ஆதிசங்கரர். இந்த தாய்க்கு தொண்டு செய்வதுதான் முதல் பணி. தகப்பனாரையும் கடவுளாக பார்க்க வேண்டும். தாய் தந்தையருக்கு தொண்டு செய்ய வேண்டும். ராமாயணத்தில் சிரவண குமார் என ஒரு வருகிறது. அவன் தாய் தந்தையருக்கு மிகவும் தொண்டு செய்தவன். மஹாஷ்டிரத்தில் பண்டரி புரத்தில் புண்டலீகன் என்ற பக்தன் தாய் தந்தையருக்கு மிகவும் தொண்டு செய்து வந்தான். இவனுக்கு காட்சி அளிக்க பகவான் நேரில் வந்தார். புண்டலீகன் சேவை செய்யும் போது பகவானுக்கு இரண்டு செங்கல்களை போட்டு அதில் நிற்கச் சொல்லி, பின் சிறிது நேரத்தில் வருவதாகச் சொன்னான், பகவான் அவனிடம் நான் உனக்கு வரம் அளிக்க வந்தேன் கேள் என்றார். தாங்கள் எங்ஙனம் மகிழ்ந்து சேவை அளிக்கிறீர்களோ அதே போல் இதே வடிவில் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும் என புண்டலீகன் கேட்டுக் கொண்டான். இன்றும் விட்டலர் அதே கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். கிருஷ்ணன் சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் சுதாமாவுடன் படித்தார். ஆசார்யாள் என்பவர் யார் எவர் நமது ஸந்தேகத்தைப் போக்கி, தானும் கடைபிடித்து வழிகாட்டி வாழ்பவரே ஆசார்யர்.

நம் வீட்டிற்கு முன் அறிவிப்பு இன்றி வருபவரே அதிதி. இவர்களை உபசரிக்க

வேண்டும். மிகவும் சிரத்தையுடன் அளிக்க வேண்டும். கர்வம் இல்லாமல் அளிக்க வேண்டும்.தேயம் தீன ஜனாய ச வித்தம்என்பது சங்கராசார்யர்களின் வாக்கு அகங்காரம் இன்றி அளிக்க வேண்டும். அகங்காரத்தால் தாழ்வு தான் ஏற்படும். இதற்கு

உதாரணம் நகுஷன். பல வாக்கியங்கள் உள்ளன. இவற்றின் விரிவுரை தான் புராணங்கள். மனிதர்கட்கு சாந்தி ஏற்பட தர்மத்தினை கடைபிடிக்க வேண்டும். முன்னாளில் தர்மத்தினை கடைபிடிப்பதற்காக அதிகமான முக்கியத்துவம் அளித்தார்கள். நமக்காக பகவான் கீழே இரங்கி வருவதுதான் அவதாரம். வேதங்களை காக்க ஏற்றது மத்ஸ்ய அவதாரம். தேவதைகளின் அனுக்கிரத்திற்காக கூர்ம அவதாரம். பூமியினை காக்க வராஹ அவதாரம். எங்கும் இருப்பவன் இறைவன் என்பதைக் காட்ட நரஸிம்ம அவதாரம். அகங்காரம் இன்றி, பயமின்றி சஞ்சலம் இன்றி அமைதியாக அசூயை கோபம் இன்றி இருக்க உருவ வழிபாடு தேவை இல்லை. எங்கு பரோபகாரம், அகங்காரம் இன்மை இருக்கிறதோ அதுவே பகவானின் இருப்பிடம். மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பகவான் நரஸிம்மமாக வந்தார். ஸத்யம் விதாதும் நிஜ ப்ருத்ய பாஷிதம்நம்பிக்கைக் கொண்டு சொன்ன வார்த்தையினை உண்மையாக்க பகவான் அவரித்தான். மனிதன் எங்ஙனம் வாழவேண்டும் என்பதைக் காட்ட ஏற்பட்டது ராமாவதாரம். இதனை பலர் படித்து, பேசி, எழுதி வருவது புண்ணியம் மிகுந்த பிரேமையுடன் இதனைச் செய்ய வேண்டும்.

ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் எல்லா வகையானவர்கட்காகவும் சொல்லப்பட்டது. முன்பெல்லாம் கோயில்களில் இவை பிரசாரம் செய்யப்பட்டு வந்தன. இதனைக்கேட்டு யாவரும் நல்லவர்களாக இருந்தார்கள்.

கலியுகத்தில் சிவபெருமானின் அவதாரம் சங்கராசார்யார். அஞ்ஞானத்தை அழித்து ஞான தானம் அளிக்க ஏற்பட்ட அவதாரம். கோயில்கள் இல்லை. வேதங்கள் என்ற நிலை இந்த காலத்தில் சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியருக்கு காலடியில் அவதரித்து எட்டு வயதில் பி¬க்ஷ கேட்ட இடத்தில் ஒரு பெண்மணி, நெல்லிக்கனி அளிக்க, அவளின் ஏழ்மையைக் கண்டு செய்த பிரார்த்தனை ஸ்லோகம் '' கனகதாராஸ்தவம் '' அத்தகைய சங்கரரின் குருவின் இடம் மத்திய பிரதேசம். குருவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நர்மதைக் கரையில் ஓங்கார «க்ஷத்திரம் உள்ளது. சங்கரார்சார்யாருக்கும் மத்திய பிரதேசக்கும் ஸம்பந்தம் உண்டு. நமது பழமையான கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். நீங்கள் பரோபகாரமாக இருந்து இறைவனின் நாம ஜபத்துடன் பக்தி செய்து

கொண்டு இரண்டு வேளைகளிலும் காலையில் விஷ்ணுவை நாராயணா ஸ்ரீஹரிசரணம்

என்றும் மாலையில் சிவபெருமானை ஹர ஹர சங்கர என்று ஜபித்து, நெற்றியில்

அவரவர் வழக்கப்படி திலகம் இட்டு தெரிந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி, கோயில்களுக்குச் சென்று உடம்பை பவித்ரம் செய்து கொள்ள வேண்டும். ஆசை இருந்தால் ஞானம் உண்டாகாது. நல்ல விஷயத்தில் ஆசை கொண்டு, எனக்கு நல்ல புத்தி கொடு என பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். ஸ்வஸ்தி ஸ்ம்ருதா மதிம் அதீவ சுபாம் ததாஸி சிந்திப்பவர்கட்கு நல்ல புத்தியினை அளிக்கிறாள் அம்பாள் என்கிறது தேவி மகாத்ம்யம் இதன் பிறகு நமது செயல்களில் ஈடுபடவேண்டும். மாலையில் ஞானத்தை அளிக்கும் பரமேஸ்வரரின் பெயரைச் சொல்லி வாழ வேண்டும். எங்கு ஈஸ்வர பக்தி இருக்கிறதோ அங்கு பகவான் இருக்கிறார். இந்த இடத்தில் மேலும் நன்மைகள் யாவும் ஏற்பட்டு லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து என்ற நோக்குடன் யாவரும் வாழ்ந்து வாழ்வில் எல்லா நலனும் பெற ஆசீர்வதிக்கிறோம்.

(22-11-97 அன்றுகுணா என்னும் இடத்தில் ஹிந்தியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 16
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 18
Next