காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -2
அ ரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. இந்தப் பிறவி நமக்கு
அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. நல்லவர்களாக நாம் வாழவேண்டும். முதலில் எது நல்லது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தான் கல்வி கற்பதே. அடக்கத்துடன் வினயத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய கலாசாரத்தினை முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை எல்லாம் தெரிந்து கொள்ள இந்தக் கலாசாரம் மிகவும் சிறந்து விளங்குகிறது. இது நல்ல வழியினை, வாழ்க்கை முறையினை கற்றுக் கொடுக்கிறது. சரீரத்தினால், மனதினால், வாக்கினால், பரோபகாரம் செய்து வாழ்ந்து வந்த மகான்கள் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். அந்த காலத்தில் சத்திரம், சுமைதாங்கிக் கல், குளங்கள் போன்ற யாவற்றையும் ஆன்மீக வழியில் சமூக சேவையாக செய்து வந்தார்கள். நமது கலாசாரத்தில் விஞ்ஞானத்திற்கு ஏதும் குறைவு கிடையாது. ஆயுர் வேதம் வாஸ்து சாஸ்திரம் போன்றவை உதாரணததிற்கு. நமது கலாசாரத்தால் சரீரம் ஆரோக்கியமாகவும், புத்தி கூர்மையானதாகவும் மனம் கருணை கொண்டதாகவும் இருந்தது. அதனால் தான் வெளிநாட்டவர் நமது நாட்டிற்கு வந்து அதிசியிருக்கிறார்கள். நமது கலாசாரத்தில் அடிப்படை கட்டுப்பாடு, அடக்கம், ஈஸ்வர பக்தி. தெய்வபக்தியினால் தான் அமைதி கிட்டும். அதனால் பக்தி முக்கியம். நல்ல பக்தி வளர்ந்து யாவரும் நன்கு வாழ ஆசீர்வதிக்கிறோம்.
(02-02-96 அன்று பாண்டிச்சேரி சங்கர வித்யாலயா பள்ளியில் முதலமைச்சர் மாண்புமிகு வைத்தியலிங்கம் அவர்கள் கலந்து கொண்ட விழாவில் பால பெரியவர்கள் ஆற்றிய உரையின் சாரம்)