காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -20
இ ன்று பிரதோஷ புண்ணிய காலம், சிவனை பூஜை செய்தால் புண்ணியமும் நம்முடைய பாபம் விலகி சுகமும் கிட்டுகிறது. நம்முடையது பழமையான தர்மம். மனிதனுக்கு மனதில் அமைதியும் சரீரத்தில் ஆரோக்கியமும் கிடைப்பது இறைவன் அருளால். லோகா ஸமஸ்து ஸுகினோ பவந்து வஸுதைவக குடும்பம் என்பது ஒரு வழக்கு. யாவரும் பலவிதமான பொருள்களை சம்பாதித்துக் கொள்ளலாம். அதே போல் புண்ணியத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இது கடையில் கிட்டுவது இல்லை. தர்மத்தில் சொல்லியுள்ளதைக் கடைபிடித்து இறைவன் சொன்ன வாக்குப் படி ச்ரத்தயா தேயம், ஸத்யம் வத, மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ என்பதை கடைபிடிக்க வேண்டும். இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்து கடவுளை அடைய நமக்கு வழிகாட்டுபவரையும், அதிதிகளையும் வணங்கி உபசரிக்க வேண்டும். கடவுள் நமக்கு அளித்துள்ள சக்தியினை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும். பதினெட்டு புராணங்களின் மூலகருத்தே பரோபகார புண்யாய, பாபாய பர பீடணம் என்பதே. தானங்களை சிரத்தையுடன் அளித்து எதைச் செய்தாலும் பக்தியுடன் பாவத்துடன் செய்ய வேண்டும். பத்ரம், புஷ்பம், பலம், தோயம் இதில் எதையேனும் பக்தியுடன் இறைவனுக்கு அளித்தாலும் சித்த சுத்தி ஏற்படும். சிவ பூஜை செய்தால் தூய்மையான மனமும் ஞானமும் கிட்டும். நீங்கள் யாவரும் ஈஸ்வர பக்தியுடன் நாம ஸ்மரணம் செய்து பகவானிடம் நல்ல புத்தி கிடைக்க பிரார்த்தித்து நல்வாழ்வு வாழ ஆசீர்வதிக்கிறோம்.
(11-12-97 மஹபூப் நகரில் ஆற்றிய தெலுங்கு உரையின் தமிழாக்கம்)