காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -24

ரண்டு நாட்களாக காஞ்சியில் சைவாகமம், வைஷ்ணவாகமம் ஸதஸ் நடைபெற்று வருகிறது. உலகில் பல தேசங்கள் உள்ளன. நமது தேசம் உயர்ந்ததாக இன்று மதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த தேசம் புண்ணிய «க்ஷத்திரம் என்பதே. அதிலும் தென்னாடு ஆசார்யர்களின் ஸ்தானமாக விளங்குகிறது. தென்னாட்டிலும் திராவிட தேசம் பக்தியினை பரப்பிய நாடாக விளங்குகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் பலர் தோன்றி ஈஸ்வரனை வழிபாடு செய்து பக்தியினை பரப்பினார்கள். உலகில் எங்கு தர்ம பிரசாரம் அனுஷ்டானம் அதிகமாக உள்ளதோ அங்கு சாந்தியும் அமைதியும் சுகமும் கிட்டும். புதியதாக தானமோ தர்மமோ செய்ய வேண்டியதில்லை. பழைய தர்மத்தினை கடைப்பிடிப்பது தான் சிறந்தது. இங்கு '' கீழம்பி '' என்று மடத்திற்கு சொந்தமான அம்பிகாபுரம் கிராமம் உள்ளது. அப்போது இருந்த பெரியவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு இன்ன இன்ன தர்மங்ளுக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. தானாத் ஸ்வர்க்கம் பாலனாத் அச்யுதம் இதனை நன்கு பாலனம் செய்தால் ஸ்வர்க்கத்தை விட உயர்ந்த பதம் கிடைக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. எந்த முறைப்படி செய்யச் சொல்லியுள்ளதோ அதனை சரியாக நடத்தி வந்தால் அதிக புண்ணியம் கிடைக்கும். தானத்தை விட பரிபாலனம் முக்கியம் என்று சொல்லப்பட்டுள்ளது. முனிவர்களும் தபஸ்விகளும் எந்த மார்க்கத்தினை கடைபிடித்து உபதேசித்தார்களோ அதன் படி பூஜை உத்ஸவம், கும்பாபிஷேகம் ஆகியவற்றை நடத்தி அதனை கடைபிடிக்க வேண்டும். நமது கலாசாரம் தற்சமயம் மாறிக் கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நம்முடைய தர்மத்தை காப்பாற்றுவது முக்கிய கடமை. தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. பூஜை எந்த பழைய முறையில் இருந்ததோ அதே முறையில் இருக்க வேண்டியது என்பது தான் பரிபாலனம். இது தான் நமது கடமை. புதிதாக சிருஷ்டிப்பது பரிபாலனம் அல்ல. பழமையை நல்ல முறையில் கடைபிடிப்பது தான் பரிபாலனம். ஆகமத்தின் கருத்தை, தத்வார்த்தத்தை தமிழில் அர்த்தத்துடன் வெளியிட உள்ளது. முறைப்படி பூஜை செய்து பரம்பரை தொடர்ந்து வர வேண்டும். ஸம்ஸ்க்ருதம் ஒரு இணைப்பு மொழி. எல்லா பகுதிக்கும் இணைப்பு மொழி. ஒவ்வொரு விஷயத்திற்கும் சாஸ்திரம் இருக்கிறது. புதிய கோயில் கட்டுவதற்கு தேவை இல்லை. பழைய கோயிலில் நித்திய பூஜை எல்லா இடத்திலும் ஒரு காலமாவது தொடர்ந்து நடைபெற வேண்டும். அது தான் ஒவ்வொரு கிராமத்திற்கும் பலன் கொடுக்கும். ஒரு வில்வ மரம் கோயிலில் இருக்க வேண்டும். தெய்வீக ஸான்னித்தயம் கோயிலில் இருக்க என்னவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ அவையாவையையும் அவசியம் செய்ய வேண்டும். பக்தியினை வைத்து, பரம்பரையை வைத்து, பூஜை முறையினை வைத்து தான் கோயிலின் விசேஷம் பேசப்படுகிறது. கிரமாத்தில் உள்ளவர்கள் அங்கேயே இருந்து அதனை தொடர்ந்து நடத்த அவர்கட்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

தர்மத்தின் பிராசீனத்தை கடைப்பிடிப்பதால் நமக்கும் «க்ஷமம். உலகத்திற்கும் «க்ஷமம். இதற்கு அரசும் பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். தென்னாட்டில் நடப்பது போன்ற உத்ஸவங்கள் வேறு எங்கும் நடப்பது இல்லை. அதன் பழமை குறையாமல் தொடர்ந்து நடைபெற ஈஸ்வரனைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறோம்.

(20-01-98 காஞ்சிபுரத்தில் காமாக்ஷி சத்திரத்தில் நிகழந்த ஆகம ஸதஸ்ஸில் ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 23
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 25
Next