காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -25

ப்போதெல்லாம் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ, எப்போதெப்போது துஷ்ட சிந்தனைகளை போக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ, தார்மீகமான மனிதர்கள் காப்பாற்றப் பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பகவான் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தர்மத்தை காப்பாற்றுகிறார். சில சமயம் மனித வடிவில் வருகிறார். சில சந்தர்ப்பங்களில் மிருகங்கள் வடிவிலும் வருகிறார். எந்த உருவத்தில் வந்தால் அவதார லக்ஷ்யம் நிறைவேறுமோ, அந்த உருவத்தில் வந்து தர்மத்தை காப்பாற்றுகிறார். ஒவ்வொரு அவதாரத்தின் போதும் ஒரு தர்மம் வெளிப்படுத்தப்படுகிறது. முதல் அவதாரத்தின் நோக்கம் வேதத்தைக் காப்பது தான். ஒவ்வொரு தர்மத்திற்கும் ஒரு புத்தகம் உள்ளது. நமக்கு தர்ம கிரந்தம் வேதம். இதில் சொல்லியுள்ளபடி தர்ம, ஞான, பக்தி உபாசன மார்க்கங்கள் என பல இருந்தாலும் வேதத்தில் சொல்லப்பட்ட படி அல்லது ஒப்புக்கொண்டபடி தான் நடக்கிறது. நீலகண்ட தீக்ஷிதர் என்பவர் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி சொல்லும் போது வேதங்களைக் காக்க பகவான் மீனாக வந்து காப்பாற்றினார். மீன் போன்ற கண்களை உடைய மீனாக்ஷியிடம் வேதங்கள் வந்துள்ளது என்கிறார். சமரஸத்திற்கு உதாரணம் கூர்மாவதாரம். தேவேந்திரன் துர்வாஸர் அளித்த தேவியின் பிரஸாதத்தை சரியான மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளாததால், பாற்கடலை கடைய நேர்ந்தது. அப்போது தேவர்களை அனுக்ரகிக்க ஏற்பட்டது இந்த அவதாரம். தேவர் என்றால் அவர்களின் ஸ்வரூபம் அல்ல. ஒரு ஸ்வபாவத்தினைக் காப்பாற்ற என்று பொருள். அங்ஙனம் பரி¬க்ஷ வைத்தார் என்பதாக உபநிஷத்தில் தெரிகிறது. ஒரு யக்ஷ ஸ்வரூபத்தில் வந்து அவர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி அம்பாள் தரிசனம் அளித்து ஞானத்தைக் கொடுத்தாள். தன் பக்தன் சொன்னதை நிஜமாக்க ஏற்பட்ட அவதாரம் நரஸிம்ம அவதாரம். நரஸிம்ம ஸ்வாமியின் பேரில் ஒரு பஞ்சரத்னம், கராவலம்ப ஸ்தோத்திரம் என ஆசார்யாள் சொல்லியுள்ளார்கள். அதில் தவ ஹிதம் வசனம் ஏகம் வக்ஷ்யே ஏகோ பருங்க பஜ பஜ லக்ஷ்மீந்ருஸிஹ மனதாகிய வண்டே வீணாக ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறாய். வீணாக சுற்றுவது தப்பு. அதிலும் தவறான இடத்தில் சுற்றுவது மிகவும் தப்பு. ஸாரம் இல்லாத ஸம்ஸார ஸாகரத்தில் வண்டு சுற்றுகிறது. அது சுற்ற வேண்டிய இடம் பாபமற்ற பெருமாளின் பாத பத்மங்களில். ஹே மனதாகிய வண்டே உனக்கு ஹிதமான சொல் சொல்கிறேன். ப்ரியம் தற்காலிகமானது. ஹிதம் மூன்று காலத்திற்கும் நல்லது. கேட்பத்தில் இஷ்டமிருந்தால் எப்போதும் விரும்புவதாக இருந்தால் சொல்கிறேன். இந்த உலகம் ஸ்வப்பனத்தில் காண்பது போன்றது. இதனை புரிந்து கொள்ள வேண்டும். பதத்தில் நான்கு விஷயங்களைத் தெரிந்து கொள்ள சொல்லியுள்ளது. சிரத்தையுடன் இருக்க, பொய்யற்று இருக்க, சாந்தத்துடன் இருக்க, சந்தேகத்துடன் இல்லாமல் தார்மீகமாக இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. தானம் பல விதம். ஆசார்யாள் ப்ரச்னோத்தரமாலிகாவில் பாக்கியங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தானம் வித்தம் த்யாக ஸமேதம் என்று கூறியுள்ளார்கள். பணம் இருந்தால் மற்றவர்கட்கு உதவ வேண்டும். இதனைத்தான் பதினெட்டு புராணங்களிலும் பரோபகார புண்யாய என்று சொல்லியுள்ளது. அதே சமயத்தில் தமிழில் கேட்பதும் கௌரவமில்லை என சொல்லியுள்ளது.

ஞான மார்க்கம் க்ஷமான் விதம் சௌக்ய என்றுள்ளது. கர்வமின்றி பொறுப்புடன் தானம் செய்யும் படி '' சிரத்தை யா தேயம் '' அசிரத்தை யாந தேயம் '' எனறும் சொல்லியுள்ளது. இதற்கு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லியும் சிரத்தையின்றி கொடுக்காதே என்றும் சொல்லியுள்ளது. '' த்வதீயம் வஸ்து கோவிந்த '' என்ற எண்ணத்துடன் கொடுக்க வேண்டும். இத்தகைய தானத்தைப் பற்றி சொல்ல வந்தது வாமனாவதாரம். தர்ம ஆசரணத்தைப் பற்றி சொன்னது ராமாவதாரம். இந்த அவதாரங்கள் எல்லாம் முன்பு எப்போதோ ஏற்பட்டது. கலியுகத்தில் ஒரு சமயம் தர்மத்தில் விசுவாஸம் குறைந்து போன போது கேரளத்தில் ஆசார்யாளின் அவதாரம் ஏற்பட்டது. ஸ்வாமியின் அனுக்ரஹம் எல்லா இடத்திலும் உள்ளது. பெரியோர்களிடத்திலும் ஏழைகளிடத்திலும் பகவானுக்கு கருணை உள்ளது என்று ஆசார்யாளின் கருத்து. இந்த கலியுகத்தில் பக்தி, கர்ம, ஞான மார்கத்தில் ஸ்திர சக்தி யோக்யதையுடன் ஈடுபட எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்துள்ளார்கள். ஆசார்யாளின் அஷ்டோத்திரத்தில் ஒரு பெயர். '' ஷண்மத ஸ்தாபகாய நம :'' என்று பஞ்சாயத உபாஸனா பத்ததி ஆசார்யாள் ஏற்படுத்திக் கொடுத்தது, '' ஸெளந்தர்யலஹரி '' போன்ற நிரம்ப ஸ்தோத்திரங்கள். ப்ரபஞ்ச ஸாரம் என்ற மந்திர சாஸ்திரம். பெருமாளைப் பற்றி ஜகன்னாதாஷ்டகம், கோவிந்தாஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம், பாண்டுரங்காஷ்டகம் என்று சொல்லியுள்ளார். வினாயகரைப் பற்றி '' முதாகராத்த மோதகம் '' என்ற வினாயக பஞ்சரத்னம். ஆசார்யாள் ஸ்தோத்திரம் செய்த கோயில் ராமேஸ்வரம் போகும் வழியில் இங்கு தான் விஜய யந்திரம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஈஸ்வர ஸ்தோத்திரம் நிரம்ப செய்துள்ளார்கள். பொதுவாக சிவ பஞ்சாயதனம் பிரசித்தமாக உள்ளது. '' சிவ '' என்ற பதத்திற்கு நல்லது என்று பொருள். ஞானத்தை நமக்கு உபதேசித்து அஞ்ஞானத்தைப் போக்கி நல்லதை கொடுப்பதால் சிவமாகச் சொல்கிறார். பன்னிரெண்டு ஜ்யோதிர் லிங்க «க்ஷத்திரங்களை யாத்திரை செய்து ஸ்தோத்திரம் செய்துள்ளார். ஓங்காரம் என்று மத்திய பிரதேசத்தில் உள்ளது. எல்லா உபநிஷத்திற்கும் தாத்பர்யமாக எது கொள்ளப்படுகிறதோ, எது பிரணவமாக உள்ளதோ, எதனை முருகப் பெருமான் தனது தந்தைக்கு சொன்னதாக ஸ்வாமி மலையில் உள்ளதோ அந்த பெயரிலேயே ஒரு «க்ஷத்திரம் நர்மதைக் கரையில் உள்ளது. நர்மதா என்றால் நல்லதைக் கொடுக்கக் கூடியது என்று பொருள். நர்மதா கரையில் உள்ளது. நர்மதா என்றால் நல்லதை கொடுக்கக் கூடியது என்று பொருள். நர்மதா கரையில் உள்ள ஒவ்வொரு கல்லும் ஈஸ்வர ஸ்வரூபம். ஸ்ரீசைலத்தில் ஒரு ஜ்யோதிர் லிங்கம். இங்குதான் ஆசார்யாள் தபஸ் செய்ததாக வரலாறு. பிரமராம்பாள் என்று அம்பாளுக்குப் பெயர். ஸ்ரீசைல ஸ்தல வாஸினி என அம்பாளை ஆதிசங்கரர் ஸ்தோத்திரம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஒரு ஜ்யோதிர் லிங்கம். நமக்கு சக்தி ஈஸ்வரன் கொடுப்பது. தர்மம் நம்மை உத்தாரணம் செய்ய ஏற்பட்டது. இந்த சக்தியினைக் கொண்டு ஈஸ்வர ப்ரீதியான காரியங்களையுச் செய்ய வேண்டும். அதைத்தான் தமிழில் திருவந்த மாலையில் சொல்லப்பட்டுள்ளது. ஈஸ்வரனின் நாமங்களைச் சொல்வதற்குத்தான் நமக்கு நாக்கு அளிக்கப்பட்டுள்ளது. கண்கள் அவரின் திவ்ய மங்கள மூர்த்தியைக் காண்பதற்கே. எவை ஈஸ்வரனை ஈர்க்கின்றனவோ அவைதான் கைகள். யார் ஈஸ்வரனை நினைத்துக் கொண்டுள்ளனரோ அவர் தாம் இந்த ஜன்மாவில் செய்ய வேண்டியதைச் செய்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆசார்யாள் சிவானந்த லஹரியில் மிகவும் சொல்லியுள்ளார்கள். மானஸ பூஜா என்ற பத்ததியையும் சொல்லியுள்ளார்கள். உபசாரங்கள் பலவிதம். ஐந்து, பதினாறு, நாற்பத்தி நான்கு என்று உள்ளன. ஆசார்யாள் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரத்தில் '' சதுஸ் சத்வாரா '' என்று குறிப்பிட்டுள்ளார்கள். 64 உபசாரம் என அம்பாள் ஸ்தோத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். பக்தன் மனது எப்படி இருக்க வேண்டும். ஈஸ்வரன் கருணை எப்படி என்றும் சொல்லியுள்ளார்கள். பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த விஷத்தினைக் கண்டு தேவர்கள் பயந்த போது, லோகத்தைக் காக்க அந்த விஷத்தினை உண்டு உலகை ஸம் ரக்ஷித்தார்கள். உலகம் உள்ளேயும் வெளியேயும் இருப்பதால் கண்டத்தில் அதனைத் தேக்கி வைத்து கஷ்டத்திலிருந்து உடனே காப்பாற்றினார் என்று கூறியுள்ளார்கள். நமது உள்ளத்தில் இறைவனின் பாத பத்மம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக பல ஸ்தோத்திரங்களைச் செய்துள்ளார்கள். இருபத்தி நான்கு அக்ஷரங்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒரு ஸ்தோத்திரம். அதற்கு அக்ஷர மாலா எனப் பெயர். அ காரத்தில் இருந்து க்ஷ காரம் வரையில் உள்ளது. ஸ்வர்ண மாலா ஸ்துதி என்று ஒன்று. நக்ஷத்திர மாலா ஸ்துதி ஒன்று செய்துள்ளார்கள். 108 தடவை பஞ்சாக்ஷரம் சொன்ன பலன் கிடைக்கும். ஆசார்யாளின் நாகேந்திர ஹாராய என்ற பஞ்சாக்ஷர ஸ்துதி மிகவும் பிரபலமானது. சிவ பரமாக நிரம்ப சொல்லியுள்ளார்கள். நம்முடைய தேசத்தில் சிவ பக்தி நிரம்ப உள்ளது. தேவாரம் பாடி நிரம்ப சிவ பக்தர்கள் உள்ளார்கள். நாயன்மார்கள் முதலானோர் பக்தியினால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. பக்தி : கிம் ந கரோதி என்றே கேட்கிறார்கள். சிவ பக்த விலாஸம் என்று ஒரு புஸ்தகம். அதில் நாயன்மார்களின் வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளது. ஸம்ஸ்க்ருதத்திற்கும் தமிழுக்கும் நிரம்ப தொடர்பு உண்டு. '' தர்க்க ஸங்க்ரஹம் '' என்று ஒரு புத்தகம். விதாய குரு வந்தனம் என ஆரம்பம். இதே தர்கக ஸங்க்ரஹத்தை சிவஞான முனிவர் என்பவர் எழுதியுள்ளார். மாதவ சிவஞானம் என்று நினைத்தேன். மா-தவம் செய்த சிவஞானம் என்று பின்பு புரிந்து கொண்டேன். அந்த காலத்தில் இருந்தே இதற்கு தொடர்பு உண்டு. கபாலி கோயிலில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடந்தது. மனம் சஞ்சலமானது. குரங்காக தாவிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இதனைக் கட்டிப்போட ஈஸ்வர பக்தி ஒன்றினால்தான் முடியும். சுதந்தரம் தேவை தான் ஆனால் ஸ்வாமியின் முன் அல்ல. அங்கு அடிமையைப் போன்று இருக்க வேண்டும். அடியார்க்கும் அடியேன் என்பது வழக்கு. '' ஸர்வேப்யோ நிர்விகாரம் ' 'என ஆசார்யாள் சொல்லியுள்ளார்கள். நம்முடைய மனத்தின் சஞ்சலத்தைப் போக்க '' கபாலின் மே ஹ்ருதய '' என்று ஸ்வாமியின் பெயரை சேர்த்து பிரார்த்திக்கிறார். இங்கு ருத்ர பாராயணம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். ருத்ர பாராயணத்தைப் பற்றி சிவ பக்த விலாஸததில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. வேதத்தைப் படிப்பது மிகவும் முக்கியம். நிரம்ப யாகத்தை செய்தாலும் மீண்டும் பிறப்பு ஏற்படலாம். ருத்ர பாராயணத்தால் மீண்டும் பிறப்பு ஏற்படாது என்று சொல்லியுள்ளது. பிரதோஷ காலத்தில் செய்தது மிகவும் உயர்ந்தது. மந்திரங்களில் விசேஷமாக ருத்ரம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரதக்ஷிணம் செய்து கொண்டே இதனை சொல்லப்படுகிறது. தீபம் ஏற்றியது உள்ளே இருக்க இருள் விலகுகிறது. தீபாராதனை நமது அபராதங்களைப் பொறுத்துக் கொள்ளவும், நல்லது ஏற்படவும் செய்யப்படுகிறது.

அப்படிப்பட்ட ஸ்தோத்திரமும் ஆசார்யாள் சொல்லியுள்ளார்கள். நான் எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யவில்லை. ஆக தாங்கள் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என எழுதியுள்ளார்கள். பிரதக்ஷிணம் எதற்காக, அஞ்ஞானம் தொலைவதற்காக. பிரதக்ஷிணம் அதிகமானால் அதிக பலன் கிட்டுகிறது. '' வந்தே ஸர்வ சுப ப்ரதாயினம் '' என்று ஒவ்வொரு பிரதக்ஷிணத்திலும் கூற வேண்டும். நம்முடைய தர்மம் அனுதியானது, நிரந்தரமானது. தர்மம் என்ற வார்த்தை நமது தர்மத்திற்குத் தான் பொருந்தும் என்று பெரியவர்கள் என்னிடம் சொன்னார்கள். இது உயர்ந்த சப்தம். அந்த தர்மம் பலவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. மக்கள் நல்லவர்களாக வேண்டும் என்பது தான் அதன் நோக்கம். ஸெளகீக த்ருஷ்டியும் அதில் முக்கியம். புத்தி, மனம், தூய்மையாகும். இதே போல உலகில் எங்கும் கிடையாது. மனிதன் புண்ணியத்தை ஸம்பாதிப்பதற்காக ஏற்பட்டது. இது தான் உலகத்தில் யாவரையும் காப்பாற்றப் போகிறது. உபநிஷத்துக்களின் வாக்கியத்தோடு மட்டும் நின்று விடவில்லை. இதற்கு உண்டான கதைகளையும் உதாரணங்களையும் விவரமாக விஞ்ஞானத்துடன் கலந்தே நமது தர்மம் சொல்லப்பட்டுள்ளது. எதையும் நிர்பந்தமாக நமது தர்மம் சொல்லவில்லை. எங்கு நல்லது உள்ளதோ அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசார்யாள் சொல்லியுள்ளார்கள். சந்திரனை தலையில் வைத்துள்ள விவரத்தை உள்ளே வைத்திருக்கிறார். சித்தாந்த அளவில் யோக சாஸ்திரம் வேறு, அத்வைதம் வேறு. அத்வைத நிலை வர சித்த சுத்தி வேண்டும். இதற்கு ஸாத்வீக மனோ பலம் தேவை. இதற்கு ஸாத்வீக ஆகாரம் தேவை. நமக்கு யாரிடத்தில் பேதம் இல்லையோ அதனை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்லியுள்ளார். தானே கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்வது தான் பாஷ்யம். கபிலர் ஒரு முனிவர். அவர் வழி வந்தது பைஸக்ய சாஸ்திரம். அடுத்தவர்களை கண்டிப்பது பிரசித்தம் என்பதால் அந்த வழியில் போகிறார்கள். வேதத்தை புரிந்து கொள்வது கஷ்டம். ஸ்வதந்திரமாக வேதத்தினை புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்வதால் நஷ்டம் தான் ஏற்படும். முதலில் இதனை தான் சொல்லுவேன் எனச் சொல்லியுள்ளார்கள். இது தான் நமக்கு கவுரமும் பெருமையையும் கொடுக்கிறது. தர்மத்தின் மூலம் தான் சாந்தி சுகம் கிட்டும். ஸம்ஸ்க்ருதம் தான் எல்லா பாஷைகட்கும் அடிப்படை. P.S. ஹைஸ்கூலில் ஸம்ஸ்க்ருத பிரசாரம் செய்யப்பட வேண்டியது தான். சுத்த தமிழ் முதலில் பிரசாரம் செய்தாலே போதும் என்று சொன்னேன். ஸம்ஸ்க்ருதமே இல்லாமல் போய் விடும் நிலை. வெகுதூரம் போய்க் கொண்டிருக்கிறோம். யாரும் தெரிந்து கொள்ள ஸம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள வேண்டும். விஞ்ஞானத்துடன் ஸம்பந்தப்பட்டது. சபைகளுடன் கலந்து லௌகீகத்தினை முழுமையாக புரிந்து கொண்டது நமது தர்மம் தான். கோயில்களில் ஆகமங்கள் உள்ளன. சைதன்யம் ஸான்னித்யம் ஏற்படும். புதிதாக கோயில்கள் கட்டுவதைக் காட்டிலும் பழமையான கோயில்களை பாதுகாக்க வேண்டும், படிப்பு முக்கியம். ஸ்தோத்திரம், cF சாஸ்திரம், ஸம்ஸ்க்ருதம் இவை யாவற்றினையும் சொல்லித் தர வேண்டும். எப்படி இருந்ததோ அப்படியே செய்ய வேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. பிறர் தர்மத்தைக் காட்டிலும் நமது தர்மத்தினை கடைபிடிப்பது தான் சிறந்தது. நமது தர்மத்தைக் அனுஷ்டிக்க வேண்டும். பிறகு அர்த்தம் புரிந்து அதன் படி நடக்க வேண்டும். பிரசாரம் செய்ய வேண்டும்.

தர்மம் விருத்தியாகி நாம் பலனடைந்து இரண்டு பிறப்பினையும் சேர்த்து பிடித்து தர்ம சிரத்தைக்கு லோபம் ஏற்படாமல் இந்த கலியுகத்தில் ஒரு அவதாரமாக வந்து என்ன உபதேசம் செய்தார்களோ அதனை படித்து, அர்த்தம் புரிந்து, ஆசரணை செய்ய வேண்டும். நீங்கள் யாவரும் ஆசார்யாளின் அனுக்கிரஹத்தினைப் பெற ஆசீர்வதிக்கிறோம்.

(10-03-98 சென்னை மயிலாப்பூர் ஸம்ஸ்க்ருத கல்லூரி வளாகத்தில் ஆற்றிய உரை. இந்த கூட்டத்தின் முடிவில் சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்திர மாலா ஸ்தோத்திரத்தை அடியேன் சொல்ல பெரியவர்கள் உத்திரவு இட, யாவரும் நமச்சிவாய சொன்னார்கள்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 24
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 26
Next