காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -27

  ன்று புனிதமான பிரதோஷ புண்ணிய பருவகாலம். ஈஸ்வர பூஜை, தரிசனம், நாமாவளி சொல்லுதல் ஆகியவை கோயிலில் ஈஸ்வரன் ஸன்னதியில் செய்தல் மிகவும் விசேஷம். நமது தர்மம் மிகவும் பழமையானது. தர்ம பிரசாரம் என செய்ய வேண்டும். தர்மத்தின் பிரயோசனமே லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து என்பது தான். ஞானியாகி சாந்தமாக, எத்தகைய தீய எண்ணங்களும் இன்றி மனம் சஞ்சலமின்றி துக்கமில்லாமல் இருப்பது தான் சுகம். அத்தகைய நிலையினை அடைவதற்கு வழி காட்டுவது தான் தர்மம். இதன்படி நடத்தல் நன்மையே மனதில் ஏற்படுவது சாந்தியின்மை. உடலில் ஏற்படுவது வியாதி. தர்மத்திற்கு மூலமானது எவராலும் சொல்லப்படாததும் '' அபௌருஷேயம் '' என்ற பெயர் பெற்றதுமான வேதம். சாஸ்திரங்கள் பல விதம். தர்ம சாஸ்திரங்கள் பலவிதம். மனித இனத்திற்கு உபயோகமாக உள்ளவை ஸங்கீதம் போன்ற சாஸ்திரங்கள். செயல் வடிவமானது நமது தர்மம். மனித வழியினைக் காப்பாற்ற பகவான் தசாவதாரம் எடுத்தார். வேதத்தினைக் காப்பாற்ற என ஒரு அவதாரம். எங்கும் நிறைந்தவன் இறைவன் என்பதைக் காட்ட ஒரு அவதாரம். தர்மத்தை செயல்படுத்த, அரசன், தாய், தந்தை, மகன், மனைவி, கணவன் என்பவர்கள் எங்ஙனம் இருக்க வேண்டும் என்பதைக் காட்ட ஒரு அவதாரம். வேதத்தில் சொல்லப்பட்டதை நடத்திக் காட்ட முந்தைய மூன்று யுகங்களிலும் அவதாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கலியுகத்தில் சுமார் இரண்டாயிரத்து எண் நூறு ஆண்கட்கு முன்பு கேரளாவில் காலடியில் ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதியினருக்கு மகனாக சங்கரர் அவதரித்தார். விசாக சுக்ல பஞ்சமியில் அவதாரம். கலியில் தர்மத்தை புனருத்தாரணம் செய்ய ஏற்பட்ட அவதாரம். பக்தி, கர்ம, ஞான மார்கங்களுக்கு வழி காட்ட பஞ்ச தேவதா உபாசனையையும் , சம நோக்குடன் கண்டு, வேதத்திற்கு அர்த்தம் சொல்லி, ஸ்தோத்திரம், பாஷ்யம் ஆகியவை செய்து, பகவத் கீதைக்கு பாஷ்யம், பிரம்ம ஸ¨த்திரத்திற்கு பாஷ்யம், ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் என செய்தார்கள். பகவத் கீதை எல்லா சாஸ்திரங்களின் ஸாரம். நல்ல எண்ணம், உணவு, தானம், என்றால் என்ன, பக்தி எனறால் என்ன, என்பதை எல்லாம் சொல்கிறது.

முனிவர்களில் சிறந்தவர் வியாஸர். அவர் பதினெட்டு புராணங்கள் எழுதினார். அடுத்தவர்கட்கு உதவுதல் என்பதை மைய்யமாக வைத்தே எழுதப்பட்டது. புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். ப்ரவ்ருத்தி, நிவிருத்தி என இரண்டு மார்க்கங்கள். பல உபநிஷத்துக்கள் உண்டு. அவற்றில் பத்து மிகவும் முக்கியமானவை. இவற்றிற்கு ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதினார். ப்ரபஞ்ச ஸாரம் என்று மந்திர தந்திர விஷயத்தில் பூஜை செய்யும் வழிமுறை எழுதினார். த்வைத தாரத்திற்கு பதிலாக கலியுகத்தில் அவதாரம் செய்தார் சிவானந்த லஹரியில் எதைச் செய்தாலும் அதனை பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

காலையிலும் மாலையிலும் வினிருத்ய லஞ்ஞாம் என்ற படி வெட்க்கத்தைவிட்டு சந்தேக மின்றி நம்பிக்கையுடன் பகவன் நாமங்களைச் சொல்ல வேண்டும். நெற்றியில் அவரவர் மதச் சின்ன திலகத்தினை இட வேண்டும். பிரார்த்தனையில் நல்ல புத்தி அளிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். நீங்கள் யாவரும் எல்லா நலனும் பெற ஆசீர்வதிக்கிறோம்.

(25-03-98 குண்டூரில் தெலுங்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 26
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 28
Next