காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -28

ந்த நாள் ஒரு புனிதமான நாள். பெரியவர்களின் தரிசனமும் பேச்சையும் கேட்கும் பாக்கியம் கிட்டியுள்ளது. குருவின் உபதேசத்தின் மூலம் தான் ஞானம் கிடைக்கிறது என்பது சாஸ்திரம். நமது தேசம் ஸனாதன இந்து தர்மம். இதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது, சிருஷ்டியிலிருந்து வருகிறது. வேதமும் அனுதியானது. அதற்கு '' அபௌருஷேயம் '' என்று பெயர் மனித சக்தியினை தெரிந்து கொள்ள, அதன் படி செயல்பட சொல்லப்பட்டது. மனத்தின் சஞ்சலம், எண்ணம் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டது. '' ஸத்யம் வத '' என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த உபதேசத்தினை முறையாக சொல்ல வேண்டும். அந்த முறை நம்முடைய தர்மத்தில் தான் உள்ளது. உபதேசங்கள் மட்டும் மற்றய மதங்ளில் இருக்கும். ஆனால் அதனை நடைமுறையில் செய்ய நமது தர்மத்தில் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. நல்ல விஷயத்தை தெரிந்து கொள்ள பிரயத்தினமும் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். பிரார்த்தனை தபஸ் நல்ல குருவினை அடைந்து அருள் பெற வேண்டும். மனதில் சாந்தி புத்தி கூர்மை கிட்ட குருவின் அருள் தேவை.''ஐக்ய''ஆமுகியக என்று இரண்டு வகையினை சங்கரர் சொல்லியுள்ளார். நமது தேசம் மற்றைய தேசங்களைக் காட்டிலும் வேறுபட்டது. இந்த தேசத்திற்கு உள்ள கவுரவம், நடைமுறை வேறு எந்த தேசத்திலும் இல்லாததால் மற்றைய நாட்டவர் இந்த நாட்டிற்கு வந்து தெரிந்து, தெளிந்து, இங்கேயே இருக்கவும் வருகின்றனர். இந்த நாட்டில் ஒரு நடைமுறை பாரம்பர்யம் உள்ளது. இது தயோ பூமி, புண்ணிய பூமி, யோகிகளும், சித்தர்களும் தவம் செய்த பூமி. பிரயத்னம் செய்யாமல் எதுவும் கிடைக்காது. ஞானம் பெற வேண்டுமானல் எட்டு விதமான சாதனைகள் நடைமுறையில் இருந்தால் தான் இறை அருளால் கிட்டும். சங்கரர் எந்த அத்வைதத்தைச் சொன்னாரோ அது அனுபவத்தில் வர வேண்டுமானால் கர்ம பக்தி மார்க்கத்தினை அனுஷ்டிக்க வேண்டும். ஒவ்வொரு தர்மத்திற்கும் ஒரு கிரந்தம் உள்ளது. நமது தர்மத்திற்கு வேதம். இது எவராலும் எழுதப்பட்டது அல்ல. இதனை பாகுபடுத்தினார் வியாஸர். இது பகவானின் மூச்சுக் காற்று. இதற்கு அர்த்தம் எழுதியவர் கர்நாடகாவில் இருந்த வித்யாரண்யர். இப்போது எல்லா வேதங்களும் இல்லை. கொஞ்சம் தான் இருக்கிறது. வேதங்களில் நமக்கு தர்ம வழி காட்டப்பட்டுள்ளது. சுகம், சாந்தி இட்ட வேண்டும் என்றால் தர்மத்தினை கடைபிடித்தால் தான் முடியும். வேதத்தில் சொல்லப்பட்ட நீதிகளே புராணங்களில் கதை வடிவில் சொல்லப்பட்டன. ஸத்யம் வத என்பதற்கு அரிச்சந்திரனின் கதை. பக்தனின் வார்த்தையை உண்மையாக்கவும் பகவான் எங்கும் நிறைந்தவர் என்பதை நிலைநாட்டவும் நரஸிம்மாவதாரக் கதை. ஸத்யம் விதாதும்&ஸீதீsஜீ; நிஜ பூஸ பாஷிதம்....நமது நாட்டின் சின்னத்தில் ஸத்ய மேவ ஜயதே என்று உள்ளது. இது உபநிஷத்தின் வாக்கியம். வேதத்தில் இரண்டு மார்க்கம் 1. ப்ரவிருத்தி, 2. நிவிருத்தி. ப்ரவிருத்தி எனறால் காம்யமானது. நிவ்ருத்தி என்றால் ஆசையற்ற நிலை. பிரம்மசாரி, கிரஹஸ்தர் ஆகியோருக்கு ப்ரவ்ருத்தி மார்க்கம். இதில் ஜனகர் விசேஷம். ஸன்யாஸிக்கு நிவ்ருத்தி மார்க்கம். ஸத்யம் என்பது ஒரு வஸ்து அல்ல. இது ஒருவரின் ஆசாரத்தில் உள்ளது. எவர் ஸத்யமாக இருக்கிறாரோ அவருக்கே இது பொருந்தும். இராமாயணத்தில் கிழ தம்பதிகட்கு தொண்டு செய்த ச்ரவண குமார் வரலாறு சொல்லப்படுகிறது.

இதே போல் பண்டரிபுரத்தில் புண்டலீகன் தாய் தந்தையருக்கு தொண்டு செய்து தன்னை நாடி வந்த பகவானை இரண்டு செங்கல் மேல் நிற்க வைக்க, அதே கோலத்தில் இன்று அளவும் பாண்டு ரங்கன் நின்று யாவருக்கும் அருள் பாலித்து வருகிறார். இந்த இருவர்களின் கதைகளும் மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ என்ற வேத வாக்கியங்களுக்கு கதை வடிவான விளக்கம். ஆசார்ய தேவோ பவ என்று உளது ஆசார்யன் என்பவர் யார்? ஆசார்ய ஸ்தாபயதி இதி ஆசார்ய : ஷாந்தார்தம் ஸ்வயம் ஆசார்யதே இதி ஆசார்ய : சாஸ்திரத்தின் உண்மை பொருளை தெளிவாக புரியும் படி நமக்குச் சொல்பவரும் அதனை தானே ஸ்வயமாக கடைபிடித்துக் காட்டுபவரும் ஆசார்யன் எனப்படுவர். குரு முகமாக வந்தால் தான் மனதில் ஸங்கல்பத்தினை ஏற்படுத்தும். குருகுலத்தில் சென்று படித்ததற்கு இதுதான் காரணம். முதலில் குருமுகமாக படித்தல், அடுத்து உடன் படிப்பவருடன் கலந்து பேசுதல், பின்பு சுய புத்தியினால் தெரிந்து கொள்ளுதல், அடுத்து அனுபவத்தில் தெரிந்து கொள்ளுதல் இந்த நான்கு முறைகளும் இருந்தால்தான் கல்வி பூர்த்தியாகிறது. நமக்குத் தெரிந்ததை அடுத்தவர்க்கு சொல்லிக் கொடுக்க தெரிந்ததை நன்கு தெரிந்து கொள்வதற்கு ஒரு வழி. இதனை நள மஹாரஜன் கதையில் காண்கிறோம். நளன், ருதபர்ணனிடம் தனக்குத் தெரிந்த வித்தையினை சொல்லி அவனுக்குத் தெரிந்த வித்தையினை கற்றான். காலத்தின் கொடுமையால் ருதபர்ண அரசனுக்கு நளன் தேரோட்டினான். வேகமாக தேரோட்டும் போது அரசனின் உத்தரீயம் கீழே வீழ்ந்து விட நளன் தனக்குத் தெரிந்த அஸ்வ வித்யயை அரசனுக்குத் தெரிவித்து அவனிடம் இருந்து அக்ஷர வித்யயைக் கற்று உத்தரீயத்தை எடுத்து வந்தான் என்பது வரலாறு. கிருஷ்ணன் பகவானாக இருந்தாலும் சாந்தீபினி முனிவரிடம் குரு குலத்தில் தங்கி சேவை செய்து படித்தார் என்பது வரலாறு. இது தான் நம்முடைய ஸம்ப்ரதாயம். அதிதி தேவோ பவ : முன் அறிவிப்பு இன்றி வருபவர் தான் அதிதி எனப்படுவர். சொல்லி வந்தாலும் சொல்லமால் வந்தாலும் வந்தவர்க்கு சேவை செய்ய வேண்டும். துர்யோதனன் அரண்மனைக்கு துர்வாஸர் சென்றார். என்னிடம் வந்து என்னை அனுக்ரஹித்தது போலவே பாண்வர்களிடமும் சென்று அனுக்ரஹிக்க வேண்டும் என்று துர்வாஸரை துர்யோதனன் கேட்டுக் கொண்டான். சிலருக்கு தானும் நன்றாக இருக்க வேண்டும் அடுத்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். சிலருக்குத் தான் கஷ்டப்பட்டாலும் அடுத்தவர் சுகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். சிலருக்குத் தான் சுகமாகவும் அடுத்தவர் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணம். சிலருக்கு தான் அழிந்தாலும் அடுத்தவரும் அழிய வேண்டும் என்ற எண்ணம். என் கண்கள் இரண்டு போனாலும் பரவாயில்லை அடுத்தவர் கண் ஒன்றாவது போக வேண்டும் என்று ஒரு வழக்கு உண்டு. துர்யோதனன் துர்வாஸரை பாண்டவர்களும் த்ரௌபதியும் உண்ட பிறகு அங்குப் போகச் சொல்கிறான். அப்போது இவர் அங்கு போனால் பாண்டவர்கள் துர்வாஸர் சாபத்திற்கு ஆளாவார்கள் என்பது இவனின் எண்ணம். கெட்டவர்களையும் நல்லவர்களாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். தரும புத்திரர் செய்த ராஜ ஸ¨க யாகத்திற்கு தான அதிகாரியாக துர்யோதனனை கிருஷ்ணன் நியமித்தார்.

நல்லவர்களையும் கெட்ட செயலுக்கு உபயோகித்தான் துர்யோதனன். கிருஷ்ணன் அருளால் சாபம் இன்றி துர்வாஸரின் அதிதி ஸத்காரம் இனிதே முடிந்தது என்பது கதை. மஹாபாரதத்தில் கபோத வ்ருத்தியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கீழே கடந்ததை எடுத்து உண்பது என்பதை விரதமாகக் கொண்டவர்கள். ஒரு சாதரண குடும்பம். பல நாட்கள் கழித்து அவர்கட்கு உணவு கிடைத்து உண்கின்றனர். அதிதி வர குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் முதலில் தங்கள் பங்கினை தானாகவே அதிதிக்கு அளிக்கின்றனர். பின்பு பெரியவர்களும் தங்கள் பங்கினை அளிக்க வந்த விருந்தினர் திருப்தி அடைந்து செல்கிறார். தரையில் சிந்தி இருந்த உணவின் மீது வீழ்ந்து புரண்டு கீரிப்பிள்ளையின் உடல் தங்க மயமாக மாறியது. இந்த கதை ச்ரத்தயா தேயம் என்ற வாக்கிற்கான விளக்கம். அளிப்பதை கர்வம் அகங்காரம் இன்றி அளிக்க வேண்டும். எதனையும் தர்மமாக தர்மப்படி செய்ய வேண்டும்.

எட்டு வயதில் ஒரு ஏழ்மைப் பெண்மண்யின் நிலை கண்டு '' கனகதாரா ஸ்தவம் '' செய்தார் ஆதிசங்கரர். ஸம்ஸாரத்தில் நாம் கஷ்டப்பட பல காரணங்கள். அவற்றில் நான்கு முக்கியம்:

1. அபத்தம் - பொய் சொல்லுதல், 2. கோபம் கொள்ளுதல், 3. சிரத்தையின்றி செய்தல், எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமல் செய்தல், 4. சாஸ்திரத்திற்கு விரோதமாகச் செய்தல், சத்தியத்தினையே பேச வேண்டும். தானம் பலவகை. மஹாபலி கொடுத்ததும் தானம் தான். ஆனால் உதவியும் செய்தார் அபகாரமும் செய்தார். சுக்கிரன் இது பகவான் என்று சொல்லியும் சிஷ்யரான பலி ஸந்தோஷத்துடன் தானம் செய்தார். மனைவி தீர்த்தம் விட '' இதம் ந மம '' என்று சொல்லிக் கொடுத்தார். தானத்தைத் தடுக்க கிண்டியில் வண்டு உருவில் புகுந்த சுக்கிரர் தன் கண்ணை இழந்தார். தானத்தில் வஸ்து முக்கியமல்ல. பக்தி முக்கியம் . தானம் ப்ரிய வாக் ஸஹிதம் ஞானமர்கவம் க்ஷமாந்விதம் சௌர்யம் வித்தம் த்யாக ஸமேதம் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்யதி பகவானின் பாதத்தை சிரஸில் ஏற்று இன்றும் சீரஞ்சீவியாக உள்ளார். இது கீதா வாக்கியம் இந்த மார்க்கம் வேறு எங்கேயும் சொல்லப்படவில்லை. மனதில் பதிய ஸகுணோபாஸநா தேவை. ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணநாதம் மஹேஸ்வரம் என்று பஞ்சாயதன பூஜை முறையினை ஏற்படுத்தினார்.

ராமாயணத்தில் யுத்தத்தின் போது '' ஆதித்ய ஹ்ருதயம் '' என்ற ஸ்தோத்திரத்தினை அகத்தியர் ராமனுக்கு உபதேசித்ததாக உள்ளது. தக்ஷன் யாகம் செய்த போது மருமகனைக் கூப்பிடவில்லை. யாகத்தில் கூப்பிடவில்லை என்றாலும் நாம் செல்ல வேண்டும். தன் தகப்பானார் செய்த யாகத்திற்கு சென்ற தாக்ஷ£யணிக்கு ஏற்பட்ட அவமானத்தால் அழிந்த அம்பாளின் பாகங்கள் விழுந்தது தான் சக்தி பீடங்களாக விளங்குகின்றன. நாபி வீழ்ந்தது காஞ்சிபுரத்தில், அகத்தியர் பூஜித்தது கணேசனை, வியாஸருக்கு உதவி வினாயகர் செய்ததால் நமக்கு மஹாபாரதம் கிட்டியது. எல்லோருடைய தர்மமும் முழுமையாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ள ஒரே கிரந்தம் மஹாபாரதம். இது நமக்கு கிட்டியதற்கு ஒரே காரணம் வினாயகர். ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் சிரயம் இச்சேத் ஹ§தாஸநாத் ஜ்ஞாநம் இச்சேத் மஹேஸ்வராத் இதைத் தான் மூர்த்தி பூஜை என்கிறோம். நம்முடைய இந்த பழைய கலாசாரம் நம்மை காப்பாற்றுகிறது. பகவானை ஸ்தோத்திரம் செய்தால் மட்டும் போதாது. எல்லோர்க்கும் ஒரு தர்மம் சொல்லப்பட்டுள்ளது. வால்மீகி, பவபூதி, அஷ்டகவி போன்ற பலர். திலீபன் என ராஜ்ய பாரம் செய்தான்.கேவலம் ஜந்ம ஹேதவ:ஜ்ஞாநிநா ஆசரிதாஷக்யம் பாரபட்சமின்றி ஞானிகளால் செயல்பட முடியும் . பாவம் தான் முக்கியம். ஞானே மௌநம் சித்தே க்ருபா ஸமர நிஷ்ப்ருதா ஒன்றுக்கொன்று விரோதமான இரண்டு குணங்கள் உன்னிடம் உள்ளது என்பது பொருள் . க்ஷமா சக்தௌ த்யாகே ஸ்லாகா கர்வத்திற்கு மூன்று காரணங்கள் ரூபம், வயது, வித்தை, வயோரூப விபுதிநாம் ந தஸ்ய...வய வயது, ரூபம், ஐஸ்வர்யம் மூன்றும் இருந்தும் கர்வம் இல்லை. சுதர்சனன் என்ற அரசன் ஆறு வயதில் அரசனானான். அவன் அரசாட்சி நன்றாக இருந்ததற்கு காரணம் பெரியோர்களின் வார்த்தைகளைக் கேட்டது . ஸர்வாந் தாவத் ஸ்ருத வ்ருத்த போகாத் ஸ்ருதம் ச வர்த நிர்மலம்

இப்போதிருந்து நாராயணன் நாமத்தை சொல்ல அப்யாஸம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் சங்கரர். தர்மமே கலாசாரம். அதற்கு எந்த இடையூறு இன்றி இன்று இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும். ஜநநீ ஜந்ம புமிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸி தேச பக்தியும் தெய்வ பக்தியும் நமக்கு கட்டாயம் தேவை. இவை இரண்டும் இந்த பள்ளியில் போதிக்கப்படுகிறது. நீங்கள் உலகில் வாழ்வில் எல்லா புகழும் பெற்று வாழ ஆசீர்வதிக்கிறோம்.

(07-04-98 பீமாவரத்தில் தெலுங்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 27
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 29
Next