காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -30

ன்று ஒரு புண்ணிய காலம். வியாழக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்தது. பிரதோஷ காலத்தில் ஸந்த்யா வேளையில் சிவ தரிசனம் செய்ய எல்லா தேவர்களும் வருகின்றனர். இந்த சமயத்தில் சிவனை வணங்க யாவரையும் வணங்கிய பலன். ஆதி தம்பதியர் எனப் பெயர். முதலில் எழுதிய காவியம் இராமாயணம். இதனை எழுதிய வால்மீகிக்கு ஆதி கவி எனப் பெயர். இந்த இராமாயணம் மிகவும் பிரஸித்தமானது. முந்தைய காலத்தில் நீதிகளை தெரிந்து கொள்ள படிக்கும் புத்தகங்கள் இராமாயணமும் மஹாபாரதமும் புண்ணியம், பாபம் இவற்றினை தெரிந்து கொள்ள இரண்டு கதைகளை கேட்பார்கள். தர்மம் இல்லை என்றால் மனிதன் மனிதனாகவே இருக்க முடியாது. நல்ல வழி காட்ட தர்மம் முக்கியம். தெய்வம் மனுஷ்ய ரூபேண என்ற படி பகவான் தானே மனிதனாக வந்து தந்தை மகன் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா வழிகளிலும் தர்மத்தை கடைபிடித்துக் காட்டினார். மஹா பிரபு ராமச்சந்திரன் வடிவிலே. மஹாபாரதத்திலும் எவ்வளவோ தர்மங்கள் உள்ளது. நமது தர்மத்தில் உள்ளது மற்ற எந்த தர்மங்களிலும் இல்லை. மஹாபாரதத்தை வியாஸர் சொல்ல வினாயகப் பெருமான் எழுதினார். இந்த இரண்டு கிரந்தங்களும் மிகவும் முக்கியம். ஆதி தம்பதிகளாக பார்வதியும் பரமசிவனும் இருப்பதால் மாதவா சிவ பக்தா என்று துதிக்கிற படியால் தற்போது யாவரையும் சகோதர சகோதரிகளே என்று சொல்வதற்குக் காரணம்.

வாழ்விலே சுய நலம் கூடாது. முன்பு இந்திரன் நூறு தடவை யாகம் செய்தால் தன் பதவி போய் விடுமே என பயந்து பகீரதனின் முன்னோர்கள் செய்த அஸ்வமேத யாகத்தில் யாக குதிரையினை திருடி பாதாள லோகத்தில் கபில முனிவர் முன்பு கட்டி விட்டான். சகா புத்திரர்கள் குதிரையைத் தேடி வந்து கபிலை சந்தேகிக்க அவர் சாபத்தால் சாம்பலாயினர். காரணமின்றி அவர்கள் கபில முனிவரை அவமதித்தனர். அந்த பரம்பரையில் வந்த பகீரதன் சுயநலத்திற்காக இல்லாமல் தன் முன்னோர்கள் கடைதேற பிரயத்தினம் செய்தான். KS பக்தி, பித்ரு பக்தி, தெய்வ பக்தி ஆகிய மூன்றும் முக்கியம். கங்கை பூமிக்கு வந்தால் முன்னோர்கட்கு ஸ்வர்க்கம் கிடைக்கும் என்று அசரீரி கேட்டு பல்லாண்டுகள் தவம் கிடந்து கங்கையின் வேகத்தை தாங்குவதற்கு பரமசிவனை நோக்கி மீண்டும் தவம் செய்தான். ஸொந்தர்யமும் பக்தியும் நமது தர்மத்தில் உள்ளது. நம்பிக்கை இருக்கலாமே தவிர கர்வம் இருக்கக் கூடாது. சந்திர வம்சத்தில் நஹ§ஷன் இந்திர பதவி கிட்டியதும் கர்வம் கொண்டதால் சப்த ரிஷிகளை பல்லக்கு தூக்க விரும்பி தான் அவமதித்து அகஸ்தியரை ஸர்ப ஸர்ப என அவர் சாபத்தால் ஸர்பமானான். அகஸ்தியரை பரமேஸ்வரன் பார்வதி கல்யாண ஸமயத்தில் தென்னாட்டிற்கு அனுப்பி பூமியை ஸமப்படுத்தினார். அகஸ்தியரின் தர்ம பத்னி லோபாமுத்ரா. அகஸ்தியருக்கு உபதேசம் பெற லோபாமுத்ரையின் கணவர் என்ற தகுதியினால் உபதேசம் பெற்றார் என்று ஸ்ரீ வித்யா உபதேசத்தில் சொல்லப்பட்டுள்ளது. கங்கை கர்வத்துடன் வேகமாக பூமிக்கு வந்தவளை தன் ஜடையில் தாங்கி பின் பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்க சிறிது வெளிவிட்டார் பரமேஸ்வரர். கங்கையினால் பகீரதனின் முன்னோர்கள் நற்கதி அடைந்தனர்.

ஒரு காலத்தில் தேவர்கள் வெற்றி கண்ட போது, துர்வாஸர் பார்வதீ பரமேஸ்வரர்களை தரிசனம் செய்து கொண்டு இந்திரனிடம் வந்தார். நல்லதை வெளிக் கொணர வேண்டும். தீயதை மறக்க வேண்டும். தனக்குக் கிடைத்த பிரஸாதத்தை இந்திரனுக்கு துர்வாஸர் அளிக்க அவன் அதனை மரியாதையின்றி ஐராவத யானையின் தலையில் வைக்க, அது அந்த பிரஸாதத்தை காலில் போட்டு மிதிக்க, துர்வாஸர் மிகவும் கோபம் கொண்டு பக்தி சிரத்தை இல்லாத இந்திரனுக்குக் கொடுத்ததற்காக இந்திரனின் ஐஸ்வர்யம் அழிய சபித்தார். பாற்கடலை கடைய அதிலிருந்து லக்ஷ்மி, உச்சைஸ்ரவஸ் போன்றவை வெளிவர விஷமும் உடன் வந்தது. அந்த விஷத்தை உண்டு யாவரையும் காப்பாற்றினார் பரமேஸ்வரர். ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதி பய ஜராம்ருத்யு ஹரிணீம்

விபத்யந்தே விஸ்வே MF ஸதமகாக்யா திதிஷத:

கராலம் யத் «க்ஷவலம் கபலிதவத:காலகலனா

ந ஸம்போஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா

ஆதிசங்கரர் ஸெளந்தர்யலஹரி ஸ்துதியில் தேவர்கள் அமிருதத்தைச் சாப்பிட்டும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் கொடிய விஷத்தைச் சாப்பிட்டும் பரமேஸ்வரன் அழியாமல் இருக்கிறார் ஏனெனில் அம்பாளே அது தங்களுடைய தாடங்க மஹிமையினாலேயே என்று அம்பாளை போற்றுகிறார். கங்கையை நினைத்தாலும் புண்ணியம், சொன்னாலும் புண்ணியம். கங்கை இன்று யாவருக்கும் புண்ணியம் அளிப்பதற்குக் காரணம் பரமேஸ்வரரின் கருணையே.

அலங்கார ப்ரியோ விஷ்ணு அபிஷேக ப்ரியோ சிவ பார்வதி மண்ணால் செய்த சிவலிங்கம் காஞ்சிபுரத்தில் ப்ருத்வி «க்ஷத்திரமாக உள்ளது. கோதாவரியின் உற்பத்தி ஸ்தானம் த்ரயம்பகேஸ்வரம். இது கௌதமரின் ஸ்தானம். மக்களுக்கு நன்மை கிட்ட வேண்டும். என்ற எண்ணத்தால் கங்கையை தலையில் தாங்கி உதவியதால் '' கங்காதரர் '' என்று பெயர். பரமேஸ்வரர் எதற்காகக் விஷத்தைக் ஏற்றுக் கொண்டார்.ஸம்ரக்ஷணாய ஜகதாம் கருணாய ரேஸ்வா கர்மத்வயம் பலிதம்மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றான விஷத்தை சாப்பிட்டதும் கங்கையை தாங்கியதும் என சங்கரர் வியக்கிறார்.

பிரதோஷ காலத்தில் இன்று ஸனாதன இந்து தர்மத்தில் வந்த நாம் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் அவரவர் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபித்து, வெட்கமின்றி, நம்பிக்கையுடன் அக்கறையுடன் சிரத்தையுடன், நெற்றியில் அவரவர் ஸம்ப்ரதாய திலகமிட்டு இதயமும் நெற்றியும் சுத்தமாகி காயேனவாசா மனஸேந்திரியைர் வா என்ற படி பகவானுக்கு அர்ப்பணம் செய்து

ஸ்தோத்திரங்கள் படித்து பிரார்த்தித்து நற்புத்தி கேட்டு பக்தியுடன் வாழ்ந்தால் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் கிட்டும். இங்கு ஸ்ரீமடத்தில் பூஜை செய்யப்படும் ஸ்படிக லிங்கத்திற்கு யோகலிங்கம் என்று பெயர். ஆதி சங்கரரே பூஜை செய்த லிங்கம் அவர்கள்தான் பஞ்ச தேவதா உபாஸனையை ஏற்படுத்தினார்கள். அத்தகைய பஞ்ச தேவதா உபாஸனை இன்றும் இங்கு ஸ்ரீமடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நன்னாளில் உங்கள் யாவருக்கும் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்க ஆசீர்வதிக்கிறோம்.

(09-04-98 தாடே பள்ளிகூடத்தில் ஆற்றிய தெலுங்கு உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 29
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 31
Next