காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -31
இ ன்று பௌர்ணமி. மிகவும் விசேஷம். பௌர்ணமாஸ்யாம் சந்த்ர பிம்பே த்யாத்வா லலிதாம்பிகாம் என்று உள்ளது. பௌர்ணமியில் சந்திரன் பூரணமாக உள்ளான். ஸகா சந்த்ர ஸமான காந்தி வதனா பரிபூர்ண சந்திரனைப் போன்ற முகமுடையவள் அம்பாள் என்று பொருள். தேவியின் மஹிமை விசேஷமானது. தேவியின் அவதாரம் கோதாவரி தீர்த்தத்தில். ஸிம்மத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். மஹிஷாஸுரன் மிகவும் கடுமையாக தவம் செய்தான் பஞ்சாக்னி மத்தியில் தவம் செய்தான் தேவனை குறித்து, துதித்து தரிசிக்க வேண்டும் என்றால் தேவன் வருவார். வரம் கோறினால் வரம் அளிக்கும் பிரம்மதேவன் வந்தார். யாரும் என்னைக் கொல்லக் கூடாது என்று வரம் கேட்டான். இறக்கும் போது இறப்பவனும் அழுகிறான். கூட இருப்பவரும் அழுகிறார்கள். முன்னால் எவ்வளவு விரோதியாக இருந்தாலும் அப்போது அழுகிறான். நிம்மதியாக இறக்க வேண்டும். அனாயாஸேன மரணம் ப்ரயாணகாலே அழுது கொண்டே இறந்தால் அழுது கொண்டே பிறப்பான். அழமால் இறந்தால் மீண்டும் பிறவியே கிட்டாது. அழாமல் பிறப்பு வராது. போகும் போதாவது அழாமல் போக வேண்டும். அனுதாபம் இருக்கலாம். யார் மூலமாயும் அழிவு கூடாது எனக் கேட்டான். பெண்களை மறந்து விட்டான். துர்பலா அனலா என்று இவர்களுக்குப் பெயர்கள். பிரம்மாவும் உடன் அளித்தார் வரம். பலம் பெற்று யாவரையும் தொந்தரவு செய்தான். அகங்காரம் அதிமாகியது. தேவி அவதாரம் செய்தாள். அவள் தான் ராஜ ராஜேஸ்வரியாக அவதரித்தாள். அம்பாளை துர்கை வடிவிலும், மஹிஷாஸுரமர்த்தினி வடிவிலும் சாந்த ரூபத்திலும் காண்கிறோம். வீட்டில் ஒரு உடை. ஸ்வாமியை பார்க்க வரும் போது ஒரு உடை. வெளியே போகும் ஒரு உடை. இத்தனை உடையிலும் இருந்தாலும் நபர் ஒருவரே கோதாவரி தீரே பவித்ர தேஸ என்கிறார் சங்கரர். கௌவவூர் «க்ஷத்திரம். நீர் எவ்வளவு தூய்மையாக உள்ளதோ அங்ஙனம் மனமும் இருக்க வேண்டும். இந்த இடம் மிகவும் பழமையானது. நம்முடைய கலாசாரம், நம்முடைய பரம்பரை, நம்முடைய ஸம்ஸ்க்ருதம் என்கின்ற எண்ணம் வர வேண்டும். இங்கு தரிசனத்திற்கு வந்த உங்கள் உள்ளம் நிர்மலாகி இருக்க ஆசீர்வதிக்கிறோம்.
(11-04-98 ராஜமுந்திரி அருகில் உள்ள கௌவவூரில் தெலுங்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)