காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -32
ந மது தர்மம் ஸனாதன வைதீக தர்மம். ஜந்துநாம் நர ஜன்ம துர்லபம்பகவானின் தயவால் இந்த மனித பிறவி கிட்டியுள்ளது. இந்த பிறவியில் நல்ல செயல், சொல் இருக்க வேண்டும். வேதத்தில் சொல்லியபடி மாத்ரு, பித்ரு, ஆசார்யர்களை வணங்கி போற்றி வாழ வேண்டும். மகான்கள் தவம் செய்து அம்பாளைத் துதித்து ஞானம் பெற்ற பூமி இது. இந்த பூஜை எதுவும் சமீப காலத்தில் தோன்றியது அல்ல. தேவதை, ரிஷிகள், பிதிருக்கள் என்று பூஜை செய்கிறோம். மோக்ஷம் அடைய தேவதா பூஜை. பழைய காலத்தில் தீர்த்த யாத்திரை செய்து வந்தார்கள். அங்ஙனம் ஆதிசங்கரர் எட்டு வயது முதல் முப்பத்திரெண்டு வயது வரை மும்முறை பாரத தேசத்தினை வலம் வந்தார்கள். ஸ்வயம் வ்யகித «க்ஷத்திரங்கள் தானாக தோன்றியவை. ஒன்பது நந்திகளில் முக்கியமானது மஹாநந்தி. ரிஷிகள் பிரதிஷ்டை செய்தவை என்றும் «க்ஷத்திரங்கள் உள்ளன. பித்ரு தேவதா ராதனா என்பது நமது தாய் தந்தையருக்கும் செய்யும் பணிவிடைகள். சரஸ்வதி நதி அந்தர் வாஹினியாக இருந்து குஜராத்தில் வெளிவருகிறது. அங்கு தாயாருக்கு சிரார்த்தம் செய்தல் மிகவும் விசேஷம். பத்ரிகாஸ்மரத்தில் பிரம்ம கபாலத்தில் சிரார்த்தம் செய்வதும் மிக விசேஷம். தத்த «க்ஷத்திரங்கள் உள்ளன. சைவம் வைஷ்ணவம் நமக்கு இரண்டு கண்கள். இது நமது ஒருமைபாட்டிற்கு எடுத்துக்காட்டு. எல்லா விதத்திலும் சிறந்தது இந்த «க்ஷத்திரம் கர்ப்ப கிரகத்தில் சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. யாவர்க்கும் «க்ஷமம் கிடைக்க ஆசீர்வதிக்கிறோம்.
(12-04-98 பித்தாபுரத்தில் தெலுங்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)