காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -33

மது தர்மம் ஸனாதன இந்து தர்மம். இதற்கு பிறந்த நாள் என்று எதுவும் கிடையாது. பல நூற்றாண்டுகட்கு முன்பு எவரோ வந்து ஆரம்பித்து வைத்தார்கள் என்பதும் கிடையாது. படைப்பு தொடங்கியது முதல் வருகின்றது. முகம்மதியர், கிறிஸ்துவர் தோன்றியதற்கு முன்பு உலகம் யாவும் இந்த ஒரே தர்மம் தான் இருந்தது. நல்ல செயல் புரிந்தால் நல்ல பிறப்பு, நல்ல தர்மம் செய்ய ஏற்படுகிறது. இது நமக்கு முதல் ஜன்மம் அல்ல. நதூனாம் ஜன்மனாம் அன்தே ஜனாநானு மாம் இது கீதா வாக்கு. பகவானை தெரிந்து கொள்ள தவம் செய்கிறோம். அபர்ணா பஞ்சாக்னி மத்தியில் தவம் செய்தார்கள் பார்வதி தேவி. பகீரதன் தவம் செய்திருக்கிறான் கங்கா நதி பூமிக்கு வருவதற்கு காரணம் பகீரதன். பகீரத ப்ரயத்னம் என்று ஒரு வழக்கு ஏற்பட்டுள்ளது. அர்ச்சுனன் பாசு பதத்திற்காக தவம் செய்தான். இரண்யகசிபு தவம் செய்தன் அவன் மனைவி கயாது நாரதர் உபதேசத்தின் மூலம் நல்ல மகனான பிரஹ்லாதனைப் பெற்றாள். ஆதிசங்கரர் இங்கு வந்து தவம் செய்துள்ளார். கோதாவரி தீரத்திற்கு சிவ நேத்ரம் என்று பெயர். சிவ பக்தி செய்தால் நல்லது யாவும் கிடைக்கும். மகான்கள் கடைபிடித்தது யாவும் நல்லவையே. நமக்கு தெரிந்து கொள்ள வேண்டியது யாவையும் உள்ளடக்கியது நமது தர்மம். நமக்கு உபதேசித்தவர் ஆசார்யார்ரான சங்கரர்.ஆசார்ய சங்கரார்சார்ய:ஸந்து மே ஜன்ம ஜன்மனிசாந்தீபினி முனிவரிடம் கிருஷ்ணனும் குரு குல வாஸம் செய்து படித்தார். தொண்டு செய்து படித்தார். குரு சுஸ்ருஷ்யா விதயா ராமனும் காட்டில் குருவிற்கு சுஸ்ருஷை செய்து அவரிடம் இருந்து பலா அதிபலா என்ற இரண்டு மந்திரங்களைப் பெற்றார். வயதிற்கு ஏற்ப வியாதி. நல்ல மனது இருந்தால் எந்த வியாதியும் வராது. ஆபதாம் அபஹர்தாரம் என்ற ஸ்தோத்திரத்தை யாவரும் சொல்ல வேண்டும். ராம : என்பதற்கு ஆனந்தத்தை அடைவிப்பவர் என்று பொருள். ரமயதீதி இராம : தர்மத்தினை கடைபிடித்ததால் தர்ம வடிவானவர். ராமோ விக்ரஹவான் தர்ம : தாய் தந்தை குரு ஆகியவர்கட்கு தொண்டு செய்வது நமது கடமை என்ற எண்ணத்துடன் அரசினை ஆண்டார் ராமர். மனிதன், அரசன், அண்ணன், மகன், கணவன் ஆகியோர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடத்தி காட்டியுள்ளார். காசியில் ராமநாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார் சிவபெருமான்,ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்கிறார். ராமன். நீங்கள் தினமும் தர்மத்தினை மறக்காமல் இருந்தால் அழியாது ஐஸ்வர்யம். நமது தர்மத்தைக் கடைபிடித்தால் நமது பரம்பரைக்கும் மங்களம் ஏற்படும். நல்ல பலனும் அளிக்கும். காலை மாலை பூஜை செய்து ராம ஜபம் செய்யும் பழக்கம் ஏற்பட்டு, நல்ல புத்திக்காக பிரார்த்தனை சிரத்தையுடன் செய்து, கர்வமின்றி இருந்து, நல்ல கிரந்தங்களைப் படித்து, தாய் மொழியினை மறக்காமல் இருந்து, நெற்ற சூன்யமாக இல்லாமல் இருந்து இந்த கிரமாத்தில் உள்ள நீங்கள் யாவரும் «க்ஷமமாக இருக்க ஆசீர்வதிக்கிறோம்.

(12-04-98 சாமர்ல கோடா அருகில் உள்ள வேதலபல்லி கிராமத்தில் ஆற்றிய தெலுங்கு உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 32
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 34
Next