இ ன்று உங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து பெரியவர்கள் இங்கு வந்துள்ளார்கள். காஞ்சியிலிருந்து காமாக்ஷியுடன் வந்துள்ளார்கள். நம்முடைய நாடு மிகவும் பவித்ரமானது. தவம் செய்ந்தவர்கள் வாழ்ந்த பூமி. நம்முடைய நாட்டிற்கு ஒரு கவுரவமும் மதிப்பும் உள்ளது. இங்கு தர்மம் தான் மிகவும் முக்கியமானது. இங்கு இருந்தவர்கள் தர்மத்தை கடைபிடித்து வந்தனர். தர்மத்தை கடைபிடித்தால் வியாதியோ பயமோ இருக்காது. ஆத்ம பலம் புத்தி, சக்தி வேண்டுமானால் தர்மத்தை கடைபிடித்தே ஆக வேண்டும். தானே பகவான் தரிசனம் அளித்த «க்ஷத்திரத்தினை ஸ்வயம்பு «க்ஷத்திரம் என்பார்கள். ரிஷிகள் பூஜித்தது இரண்டாவது, மனிதர்கள் கட்டி பூஜித்தது மூன்றாவது. ஏழு புண்ணிய நதிகள் உள்ளன.
கங்கை ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி. நர்மதே ஸிந்து காவேரி என்பன அவை. கங்கை கங்கோத்ரி என்று இமயமலையில் தோன்றி ஹரித்வாரம் வந்து கல்காத்தாவில் கடலில் கலக்கிறது. யமுனை இமாலயத்தில் யமுனோத்ரி என்ற இடத்தில் உற்பத்தியாகி அலகாபாத்தில் கங்கையுடன் சங்கமமாகிறது. நர்மதை அமர கண்டியில் உற்பத்தியாகிறது. காவேரி கர்நாடகாவில் உற்பத்தியாகிறது. ஏழு புண்ணிய «க்ஷத்திரங்கள் உள்ளன. அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா பூரி த்வாரவதி என்பன அவை. மனித வடிவில் வந்து தர்மத்தை நிலை நாட்டிய ராமன் பிறந்த இடம் அயோத்தி ராமோ விக்ரஹவான் தர்ம : என்பார் வால்மீகி. மகன், அரசன், மாணவன் ஆகியோர் எல்லாம் எங்கனம் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் ராமன். கீதை உபதேசம் செய்த கிருஷ்ண பகவான் பிறந்த இடம் மதுரா. நான்கு வேதங்களையும் உபதேசித்ததையும் தர்மத்தையும் கதைகள் வடிவில் நமக்கு எடுத்து அளிக்கின்றன பதினெட்டு புராணங்களும். இந்த பதினெட்டு புராணங்களும் அடுத்தவர்கட்கு உதவி செய்ய வேண்டும் அதனால் புண்ணியம் என்பதையும் அடுத்தவர்கட்கு கஷ்டத்தை கொடுப்பது பாவம் என்பதையும் மையமாக வைத்து கதைகள் மூலம் விளக்குகின்றன. ஆசாபாசங்கள் இன்றி ஞானம் பெறுவதே முக்தி. இதை காட்டுவது பகவத் கீதை. ஆசாரம், அத்வைதம் என யாவும் இதில் சொல்லப்பட்டுள்ளது. மாயா மாயையினால் தான் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எது உண்மை எது பொய் என்று தெரியாமல் இருக்கிறோம். தேவியின் இருப்பிடம் மாயா. இதன் தற்போதைய பெயர் ஹரித்வார். கங்கை பூமிக்கு வருவதும் இங்கு தான்.
காசி :- பகவானின் நாமத்தால் தான் கஷ்டம் தீரும். கஷ்டம் இல்லாமல் இருக்க யாவரும் விரும்புகிறோம். சரீரத்திற்கு ஏற்படும் கஷ்டத்திற்கு '' வியாதி '' என்றும் மனதிற்கு ஏற்படும் கஷ்டத்திற்கு '' ஆதி '' என்றும் பெயர். இந்த இரண்டு கஷ்டங்களும் இல்லாமல் இருக்க பகவானின் நாமத்தைச் சொல்ல வேண்டும். காசியில் பரமேஸ்வரன் ராமனின் நாமத்தை இறப்பவர்களின் வலது காதுகளில் உறைப்பதாக ஐதீகம். பகவானுக்கு பசுபதி என்று ஒரு பெயர். பசுக்களுக்குப் பதி என்று பொருள். மனிதனுக்கு ஞானம் கிட்டும் வரையில் அவனும் பசு தான். ஜனனாது கமலாலயே தர்சனாது சிதம்பரேமி ஸ்மரணாது அருணாசலே மரணாது காசிமிமி என்று சொல்லப்பட்டுள்ளது. பிறக்க முக்தி அளிப்பது கமலாலயம் என்கின்ற திருவாரூரில், சென்று ஸேவித்தால் முக்தி அளிக்கும் தலம் சிதம்பரம், நினைக்க முக்தி அளிக்கும் தலம் அருணாசலம் என்கின்ற திருவண்ணாமலை. இறக்க முக்தி அளிக்கும் தலம் காசி.
அவந்திகா : பக்தனாக இருந்தால் சாதாரணமானவனும் முக்கியமான கவியாகிறான். பக்தி : கிம் கரோதி என்று வியக்கிறார் ஆதிசங்கரர். சிவ பக்தர்களில் கண்ணப்பன் செய்த செயல் மிகவும் பெரியது. பாவனமும் ஸ்வபாவமும் முக்கியம். கர்வம் அற்ற ஞானம் இனிமையான சொற்களுடன் எல்லாம் இறைவா உன்னுடையது என்கின்ற எண்ணத்துடன் தானம் அளிக்க வேண்டும். உயர் கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டினான் ஒரு இடையன். அம்பாளின் அருளால் மஹாகவிகாளிதாஸனாக ஆன இடம் அவந்திகா. அதற்கு தற்போது பெயர் உஜ்ஜெயின். இங்கு மஹாகாளேஸ்வர ஸ்வாமி கோயில் கொண்டுள்ளார். இங்கு '' க்ஷிப்ரா '' நதி ஓடுகிறது.
துவாரகை : கிருஷ்ண பகவான் அரசாட்சி செய்த இடம் மற்றவர்களின் அபிப்ராயம் தெரிந்து செயல்பட்ட இடம். தென்னாட்டில் உள்ள ஒரே மோக்ஷபுரி காஞ்சி. இது அம்பாளின் நாபிஸ்தானம், சக்தி பீடம். இதனால் இந்த ஊரின் பெயரும் காஞ்சிபுரமாகியது. இங்கு காமாக்ஷி குடி கொண்டிருக்கிறாள். பக்தர்களின் கோரிக்கைகளை கருணை கடாக்ஷத்துடன் பூர்த்தி செய்யும் இடம். இங்கு வந்து சங்கரர் ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டை தன் கைகளாலேயே வரைந்து செய்தார். நமது ஸங்கல்பத்தில் FF வார நக்ஷத்திரங்களைச் சொல்கிறோம். பிரம்மாவின் ஐம்பத்தி ஓராவது யுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகத்திற்கு முன்பு மூன்று யுகங்கள் நடந்து முடிந்தது. தற்சமயம் கலியுகம் தொடங்கி ஐயாயிரம் ஆண்டுகள் மட்டும் முற்றியுள்ளது.
ஒவ்வொரு உத்தேசத்துடன் பகவான் அவதாரம் எடுத்தார். வாமான அவதாரம் : தான விசேஷத்தைச் சொல்வது. குரு தடங்கல் செய்தும் தானம் செய்தான் மஹாபலிசக்கரவர்த்தி. வேதங்களைக் காப்பாற்ற மத்ஸ்ய அவதாரம் . தேவரை காக்க கூர்ம அவதாரம் . பூமியைக் காக்க வராஹ அவதாரம் எங்கும் நிறைந்தவன் பகவான் என்பதையும் தனது பக்தன் சொன்னதை நிஜமாக்கவும் ஸ்தம்பே ஸபாயாம் ந ம்ருகம் ந மானுஷம் என்று வந்தது நரஸிம்ம அவதாரம். இவை யாவும் முந்தைய யுகங்களில் நடந்தது. தர்மத்தை உபதேசம் செய்ய வேண்டும். இப்போது மனிதனுக்கு ராவண ஸ்வாபவம் உள்ளது. இதனை மாற்ற வேண்டும். இதற்கு உபதேசம் தேவை என்பதால் பரமேஸ்வரன் காலடியில் சங்கரராக அவதரித்தார். படைப்பவர் பிரம்மா. பரிபாலனம் செய்பவர் விஷ்ணு. அழிப்பவர் சிவன். யுத்தம் செய்தது கூட சிறப்பால். அஞ்ஞானத்தை அழிப்பதுதான் அழித்தல் ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் I ச்ரியம் இச்சேத் ஹ§தாஸனாத் I ஞானம் இச்சேத் மஹேஸ்வராத் I எட்டு வயது முதல் முப்பத்தி இரண்டு வயது வரை இந்தியா முழுவதும் மும்முறை வலம் வந்து மக்களுக்கு உபதேசம் செய்தார். முதல் ஸ்தோத்திரம் '' கனகதாராஸ்தவம் '' சமூகப்பணி தர்மத்தில் இல்லை என்று யாவும் இல்லை யாவும் உள்ளது. இதனைத்தான் மற்றைய மதங்கள் சற்று மாற்றி சொல்கின்றன. பிரம்மசாரியாக இருந்த போது பி¬க்ஷ எடுக்கச் சென்றார். க்ருஹஸ்தாஸ்ரமத்திற்கு '' உத்தமாஸ்ரமம் '' என்று பெயர். ஒரு ஏழை வீட்டிற்கு சென்றார், அன்று துவாதசி, அந்த வீட்டில் வேறு எதுவும் இல்லை, ஒரு நெல்லிக்கனி மட்டும் இருந்தது.
இதனை எப்படிக் கொடுப்பது என்று வெட்கத்துடன் தாபத்துடன் அளிக்க, சங்கரர் அந்த ஏழை பெண்மணியின் பக்தியைக் கண்டு அங்கம் ஹரே என ஆரம்பிக்கும் கனகதாராஸ்தவத்தால் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்தார் சக்த்யை நமோஸ்து ஸதபத்ர நிகேனேதனாயை I புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை I . என்று மஹாலக்ஷ்மியும் மகிழ்ந்து அந்த ஏழை பெண்மணிக்கு தங்க நெல்லிக்கனிகளாக அளித்தார் என்பது வரலாறு. காஞ்சியில் வந்து ஸர்வ யக்ஞ பீடம் ஏறினார். புஷ்பேஷ§ ஜாஜி புருஷேஷ§ விஷ்ணு: நாரீஷ§ ரம்பா நகரேஷ§ காஞ்சி என்று மிகவும் பிரஸித்தமான காஞ்சியினை தேர்ந்தெடுத்தார். இன்று நாம் கொண்டாடும் எல்லா பண்டிகைகட்கும் காரணம் சங்கரர் அவர்களே. மனமும் சரீரமும் தூய்மையாக இருக்க வேண்டும். மற்றைய யுகங்களைப் போல் தவம் முதலியவற்றினை இந்த யுகத்தில் செய்ய வேண்டாம். கலௌ ஸங்கீர்த்தய கேசவம் என்ற படி பகவான் நாமத்தை நாமஸங்கீர் கீர்த்தனம் செய்யும் சுலப வழியுள்ளது. மற்ற யுகங்களில் செய்த தவங்களின் பயனும் சுலபமாக கிட்டும்.
பன்னிரெண்டு ஜ்யோதிர் லிங்கங்களையும் தரிசித்து ஸப்த மோக்ஷபுரிகளுக்கும் சென்று தரிசித்து, ஸப்த புண்ணிய நதிகளில் நீராடிய பெரியவர்கள் இன்று உங்களுக்கு தரிசனம் அளித்து ஆசீர்வாதம் செய்ய வந்துள்ளார்கள். நீங்கள் யாவரும் பெரியவர்களின் அருளையும் ஆசீர்வாதத்தினையும் பெற்று வாழ்வில் எல்லா நலன்களையும் பெற ஆசீர்வதிக்கிறோம்.
(20-04-98 ஆந்திராவில் உள்ள தக்களை கிராமத்தில் தெலுங்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)