இ ன்று ஏகாதசியில் கிருஷ்ணன் கதை கேட்கும் பாக்கியம் நமக்குக் கிட்டியது. சாதனைகளில் கேழ்ப்பதை (சிரவணம்) மிகவும் முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. மிகவும் கேழ்ப்பதால் நன்மை ஏற்படுகிறது. பகவானின் லீலைகளை நிறம்ப கேட்க வேண்டும். ஒரு இடத்திற்கு செல்வதற்கு பல வழிகள் உள்ளன. பகவானின் ரூபத்தை அறிய முதல் உபாயம் கேட்பது. கேட்பதையும் குருவின் மூலம் கேட்க வேண்டும். அதனை உபதேசம் என்பர். கேட்டதை தினமும் நினைத்துப் பார்க்க வேண்டும். மனதில் ஏற்படும் இறைவனின் உருவத்தினை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும். பக்தியின் நுழைவாயிலில் இன்று நீங்கள் நுழைந்துள்ளீர்கள் கண்ணால் பார்க்கிறோம், காதால் கேழ்க்கிறோம், வாயால் பாடுகிறோம், கால்களால் வலம் வருகிறோம், இந்த சக்தி யாவும் பகவான் நமக்கு அளித்தது. அதனை நாம் பகவானுக்கே அளிக்க வேண்டும். ஸமர்ப்பணை என்றால் என்ன?எந்த செயலால் பகவான் சந்தோஷம் அடைவாரோ அதனைச் செய்வது தான் ஸமர்ப்பணம். வஸிஷ்டர், வித்யாரண்யர் ஆகியவர்கள் இருந்தனர். எந்த செயலைச் செய்தால் பகவானுக்கு திருப்தி ஏற்படுமோ அதுவே ஸமர்ப்பணம். இச்சை, பேராசை, பொய் யாவும் இல்லாமல் இருப்பது பகவானுக்குப் ப்ரியம். இதனை உபதேசித்தது வேதமும் குருவும். வேதத்தில் காட்டப்பட்டதே வழி. எத்தனை பிறவி எடுத்தாலும் வாழ்க்கையை செம்மைப்படுத்த ஆசார்யராக சங்கராசார்யரே வர வேண்டும் என்பதே ஆசார்ய சங்கராசார்ய ஸன்து ஜன்ம ஜன்மனிஎன்பதற்குப் பொருள். சாஸ்திரங்களை அன்புடன் நம்பிக்கையுடன் உபதேசிப்பவரே குரு. நியமத்தை தானே நடத்திக் காட்டுபவர் ஆசார்யர். விருந்தாளிகட்கு தொண்டு செய்தல் நமது பாரம்பர்யம். வேதத்தில் இது யாவும் சொல்லப்பட்டுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம், மனதிற்கு தூய்மை, புத்தி தெளிவு யாவும் சொல்லப்பட்டுள்ளது. மனிதனுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதனை மனதில் தேக்கி தருமமாகச் சொல்லியுள்ளதை விவரித்து புராணங்களில் மகான்கள் கூறியுள்ளனர். பதினெட்டு புராணங்களையும் எழுதியவர் வியாஸர். வேதத்தின் விவரணமே புராணம். புராணங்களின் விவரணமே காவ்யங்கள். நமது கலாசாரம் சிருஷ்டி காலத்திலிருந்து வருகிறது. இது என்றும் அழியாது. இதன் முக்கிய நோக்கம் உலகம் யாவும் சுகமாக இருக்க வேண்டும் என்பதே நமது தர்மத்தில் உபதேசமும் உபாயமும் உள்ளது. இதில் சாதனம் மூலம் தான் சாத்யம் ஏற்படும். எங்கும் பகவான் இருக்கிறார் என்ற எண்ணம் எழும் போது தான் ஞானம் பூர்த்தியாகிறது. மனிதனின் பரிபக்குவ நிலைக்கு சாதனை செய்ய வேண்டும். இது யாவும் *என்று முடியும். மரண காலத்தில் இறைவன் நாமத்தைச் சொன்னால் மரண பயம் போகும். அதற்கு இப்போதிலிருந்தே பழக வேண்டும். நாம் கேழ்க்கின்றோம். *எதில் தீமை இல்லையோ அதனை கேழ்க்க வேண்டும். இலக்கண ரீதியில் தோஷம் இருக்கலாம். அடுத்தவர்கட்கு அகங்காரத்தால் திமிறினால் கஷ்டம் அளிக்கக் கூடாது. அடுத்தவர்கட்கு உபயோகமாக பல வழிகளில் செயல் படலாம். நல்ல சொல் சொல்லலாம். தர்மத்தில் நல்ல பாவனை தான் முக்கியம். களங்கமற்ற விஷயங்களைத் தான் கேழ்க்க வேண்டும். பல வித புராணங்களைக் கேட்க வேண்டும்.
பழைய காலத்தில் ராமாயணத்தைக் கேட்டனர், பார்த்தனர் இதனால் புண்ணிய விருப்பமும் பாவத்தில் பயமும் ஏற்பட்டது. இன்று உங்களுக்கு நல்ல பாக்கியம் கிட்டியது. காஞ்சியின் பொருள் நாபி. ஒட்டியான இடம். காமகோடி பீடத்திற்கு என்ன அர்த்தம். ஆசையின் முடிவே எதுவோ அதுவே காமகோடி *ஆசையின் முடிவு ஞானம். ஞானம் கிட்டிய பின் புண்ணிய பாவத்திலும் ஆசை இல்லை. அறுபது ஆண்டுகட்கு முன்பு பரமாசார்யர்கள் இங்கு சாதுர்மாஸ்யம் செய்துள்ளார்கள். ஒரிஸாவிற்கும் காஞ்சிபுரத்திற்கும் மிகவும் தொடர்பு உண்டு. பாக்கியம் உள்ள உங்களுக்கு நல்ல பிறவி கிட்டியுள்ளது. தினமும் காலை மாலையில் மற்றவர்கள் போல் தவம் செய்ய முடியாது. நல்ல எண்ணத்துடன் துவக்கப்படும் செயலே ஸுப்ரபாதம். நூற்று எட்டு தடவை பகவானின் நாமம் ஜபம் செய்ய வேண்டும். பிரார்த்தனையில் நல்ல பக்தி வேண்டும் என கேழ்க்க வேண்டும். ஈஸ்வரனின் பிரஸாத வடிவில் நெற்றியில் திலகத்தினை அவரவர் குலசாரப்படி இட்டுக் கொள்ள வேண்டும். நாம ஜபம், பிரார்த்தனை, திலகம் இட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றினை குறைந்தபட்சம் இரு முறையாவது செய்ய வேண்டும். இங்கனம் நீங்கள் வாழ ஆசீர்வதிக்கிறோம்.
(22-04-98 பெர்ஹாம்பூரில் ஹிந்தியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)