பு வனேஸ்வரத்தில் ஒரு பல் மருத்துவக் கல்லூரியினை தமிழ்நாட்டிலிருந்து வந்து ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். நாட்டின் மேன்மைக்காக தார்மீக சிந்தனை தேவை. உடலில் ஆரோக்கியமும் நல்ல புத்தியும் இருந்தால் நாட்டின் மேன்மை விகஸிக்கும். ஐம்பது ஆண்டுகளில் பாரதம் பல துறைகளில் வளர்ந்துள்ளது. அதில் மருத்துவமும் ஒன்று. இந்திய டாக்டர்கள் வெளிநாடுகளிலும் தொண்டு ஆற்றுகின்றனர். சரீரம் ஆதயம் ஸ்வர்ல தர்மஸாதனம் என்பது ஒரு வாக்கு. தர்ம செயல் புரிய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு பயிற்சி தேவை. பயிறசி உணவில் இருந்து ஆரம்பமாகிறது. எதிலும் தூய்மை தேவை. மருந்து உண்பதால் மட்டும் பயன் கிட்டி விடாது. பயிற்சியிலும் தூய்மை தேவை. நமது நாட்டில் மருத்துவ பிரசாரம் உள்ளது. சுஸ்ருதா, ஆத்ரேயா போன்றவர்கள் ஆயுர் வேத சாஸ்திரத்தினை பிரசாரம் செய்தார்கள். மனிதனின் உயர்வு, ஆரோக்கியம் ஆகியவற்றிற்காக மிகவும் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் நமது கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். விஞ்ஞானத்தை உபயோகப்படுத்திக் கொண்டு கலாசாரத்தையும் வளர்க்க வேண்டும். விஞ்ஞானம் கலாசாரத்திற்கு விரோதமாக இருக்கக் கூடாது. நல்ல எண்ணம், நல்ல செயல் உள்ளவர்களா இருந்து, வருங்காலத்தில் நல்ல கல்வி பெற்று, நல்ல கலாசாரத்துடன் வாழ்ந்து நல் அமைதி பெற்று வாழ ஆசீவதிக்கிறோம்.
(27-04-98 புவனேஸ்வரத்தில் வினாயகா மிஷன் பல் மருத்துவ கல்லூரியில் ஹிந்தியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)