இ ங்கு யோக பயிற்சி அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நமது கலாசாரம் மிகவும் பழமையானது. உலகில் எங்கிலும் இத்தகைய பழையானதை பார்க்க முடியாது. நமது கலாசாரம் பிரத்யேகமானது. உபதேசம் மட்டும் அல்ல. இன்று நாம் வியாதி, பயங்கரவாதம் ஆகியவற்றை அழிப்பதற்கான உபதேசமும் நமது கலாசாரத்தில் உள்ளது. நாட்டின் அமைதிக்காக, ஸாத்வீகமாக தர்ம பிரசாரம் அவசியம் செய்ய வேண்டும். தர்மத்தில் மூன்று வகை பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் இன்று லௌகீகத்தில் பாரதத்தில் வியாபாரத்திற்காக INFRA STRUCTURE தேவை என்று சொல்கிறார்கள். தார்மீக மேன்மைக்காக அத்வைத ஞானத்திற்காக ஸங்கீதம், ஆயுர் வேதம், ஜோதிடம், யோகம், ஆகியவற்றினை நாம் பிரசாரம் செய்ய வேண்டும். மூலத்தைக் காப்பாற்றினால் தான் மரத்தைக் காப்பாற்றி பழத்தை பெற முடியும். இத்தகைய முழுமையான கலாசாரம் வேறு எங்கும் இல்லை. உபதேசம் மட்டும் செய்கின்றனர். மனிதனை தயாரிக்கும் வழி நமது கலாசாரத்தில் மட்டும் தான் உள்ளது. இங்கு சுதந்திரம் உள்ளது, கட்டுப்பாடும் உள்ளது. முழுமையான சுதந்தரமும், முழுமையான கட்டுப்பாடும் இல்லை. மனக்கட்டுப்பாடுதான் இங்கு முக்கியம். இது நமது கல்வி முறை. தரமான சூழ்நிலையினை ஏற்படுத்த வேண்டும். நல்லவர்கள் தயார் ஆவார்கள். எந்த செயலையும் நல்ல முறையில் ஆராய்ந்து செய்பவர்கள் தயார் ஆவார்கள். கோபம் இன்றி, கர்வம் அகங்காரம் இன்றி, டம்பம் இல்லாமல் செயல்படுவார்கள். இத்தகையவர்கள் இருந்தால் எவருக்கும் கஷ்டம் வராது. ராதேன யோகேன ப்ரயுக்த : என்று ஒரு ஸ¨த்ரம். அத்வைத மார்க்கத்திற்கு முக்கியமானது ஒருமைப்பாடு. இதற்கு முக்கியம் யோகம். அத்வைத சித்தாந்தத்திலும் யோகம் தேவை என்பது சங்கரரின் கருத்து. அனுபவ தேவைக்காக நாம ஸங்கீர்த்தனம் யோகம் முதலியவை அவசியம் தேவை. ரிஷிகேசத்தில் இருந்த சிவானந்தர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யோக சாஸ்திரத்தினை பரப்பியுள்ளார். நமது மடத்துடன் மிகவும் தொடர்பு கொண்ட ஆசிரமும் அவருடையது. யோகத்தில் விஞ்ஞானம் உள்ளது. தனது கொள்கைகளை சுய நலத்திற்காக பலவாறு சொல்கின்றனர் சிலர். யோகத்தில் தர்மம் தான் அடிப்படையாக இருக்கும். புதுப்புது நோய்களுக்கு பயிறசி அளிக்கிறோம் என்று சொல்கிறார்கள். எந்த செயலையும் முறைப்படி செய்தால் தான் பலன் தரும். ஆந்திராவில் ஒரு கிராமம். அங்கு ஒரு யோக ஆசிரியர் வந்தார். குண்டலினி சக்தி என்று சொன்னார். யோக சாஸ்திரத்தினை பாரதத்தில் முறையாக சிறுவர்களிடமிருந்து ஆரம்பித்து செய்தால் பாரதத்தின் மேன்மை மிகவும் உயரும். யோகத்தினை முறையாக கற்றால் பல வியாதிகள் தீர்ந்து விடும். சாஸ்த்திர முறைப்படி பயிற்சி ஏற்பட்டால் பொதுமக்களுக்கு நன்மை ஏற்படும், நாட்டிற்கும் நல்லது வரும். தமிழ்நாட்டில் கிருஷ்ணமாசாரி யோக பள்ளி நடக்கிறது. அவர் மகன் தேசிகாசாரியும் தொடர்ந்து செயல்படுகிறார். வேதாந்தத்தின் அடிப்படை யோகம். நல்ல சூழ்நிலையில், பஞ்ச தேவதா உபாசனையுடன் யோகம் பயிலும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான தேகம், மன அமைதி கிட்டி, பலருக்கும் நலம் ஏற்பட ஆசீர்வதிக்கிறோம்.
(28-04-98 புவனேஸ்வரத்தில் ஸத்யானந்த யோக வித்யாலயாவில் ஹிந்தியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)