ச ங்கர ஜயந்தி நாளையில் இருந்து ஆரம்பமாகிறது. வைசாக சுக்லபக்ஷ பஞ்சமியில் சங்கரரின் அவதாரம் ஏற்பட்டது. பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் I தர்ம ஸம்ஸ்தாபனாய ஸம்பவாமி யுகே யுகே II இது பகவானின் வாக்கு. சாதுக்களுக்கு தீமை ஏற்பட்டு அரக்கர்களை அழிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்ற போது அப்போது யுகம் தோறும் பகவான் அவதரிக்கிறார். தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று மனித வடிவில் அவதரிக்கிறார். மத்ஸ்ய அவதாரத்தில் வேதத்தினை காப்பாற்றினார். பத்து அவதாரத்தில் முதல் அவதாரம் வேதத்தினை காப்பாற்ற ஏற்பட்டது. தர்மத்தை கடைபிடிப்பதால் என்ன ஸுகம் என்ன லாபம். இது இரண்டும் இன்றி எவரும் செயல்படுவதில்லை. இதனால் ஏன் தர்மத்தினை கடை பிடிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஸுகத்தின் ஆசையும் லாபத்தில் விருப்பமும் ஏற்படுகிறது. தர்மத்தினை கடைபிடிப்பதால் தான் இந்த இரண்டும் கிட்டுகிறது. நமது நாடு தவ நாடு, தியாக நாடு, தான நாடு, இதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஸாத்வீகமான சூழ்நிலை இருப்பதால் அமைதி கிட்டுகிறது என்று வருகிறார்கள். வேதத்தில் தர்மத்தின் உபதேசம் உள்ளது. இதன் விரிவுரை தான் புராணம். பதினெட்டு புராணங்கள் உள்ளன. இதிஹாஸங்கள் இராமாயணம், மஹாபாரதம். இராமயணத்தில் பெற்றோர்களுக்கு தொண்டு செய்த சிரவண குமாரின் வரலாறு சொல்லப்படுகிறது. இது வேதத்தில் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ என்று சொல்லியுள்ளதற்காக விளக்கம். அரிச்சந்திரனின் கதை ஸத்யம் வத என்று சொல்லியுள்ளதை விவரிக்கிறது. கிருஷ்ண பகவான் சாந்தீபினி முனிவரிடம் குருகுல வாஸம் செய்து சேவை செய்து பாடம் படித்து ஆசார்ய தேவோ பவ என்பதின் விளக்கம். புராணங்களில் மிகவும் சொல்லப்பட்டுள்ளன. «க்ஷத்திரங்களுக்கும் புராணங்கள் உண்டு. வியாஸர் எழுதிய எல்லா புராணங்களின் நோக்கமும் புண்ணிய பாவங்களின் விவரத்தை தெளிவுப்படுத்துவதான். பரோபகார புண்யாய பாபாய பரபீடணம் புண்ணியத்தை சம்பாதிக்க பரோபகாரம் செய்ய வேண்டும். அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது பாவம். இந்த கருத்தினை தான் பல கதைகள் மூலம் வற்புறுத்தி சொல்லப்பட்டுள்ளது. பக்தி செய்து ஸாத்வீக வாழ்வு வாழ்வதற்கு ஆகாரம் சுத்தமாக இருக்க வேண்டும். மற்றைய யுகங்களில் செய்யப்பட்ட காரியங்களின் ஸாரம் பகவத்கீதை. இதில் ஆகாரம் முதல் அத்வைதம் வரையில் கூறப்பட்டுள்ளது. பகவான் எங்கும் வியாபித்து உள்ளார் என்ற ஞானம் ஏற்பட வேண்டும். வேத புராண ஸாரம் பகவத் கீதை. வேதத்தினை காப்பாற்ற ஏற்பட்டது மத்ஸ்யாவதாரம். பூமியைக் காப்பாற்ற வராஹ அவதாரம். எங்கும் நிறைந்தவன் பகவான் என்று பக்தன் சொன்னதை நிலை நாட்டுவதற்காக *நரஸிம்ம அவதாரம் ஏற்பட்டது. தானம் செய்வதில் கர்வமோ, அஹங்காரமோ இருக்க கூடாது. தானத்தை மனத்தூய்மையுடனும் நம்பிக்கையுடனும் *என்ற எண்ணத்துடன் ஈஸ்வரனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதைக் காட்ட வந்தது வாமன அவதாரம்.
சூரிய குலத்தில் ரகு என்று ஒரு அரசன் இருந்தான். அவன் ஒரு யாகம் செய்து யாவருக்கும் தானம் அளித்த பின் ஒருவர் வந்தார். தான் குருவிடம் கற்ற கல்விக்காக குருதக்ஷிணை கொடுக்க வேண்டி ரகுவிடம் யாகிக்க வந்தார். இதில் மூன்று முறைகள் தெரிகிறது. 1. குருவிற்கு தொண்டு செய்ய வேண்டும் 2. குருவிற்கு மரியாதை காட்ட வேண்டும் 3. நாம் எந்த விஷயத்தை அறிவோமோ அதனை மற்றவர்கட்கு சொல்லித்தர வேண்டும். இப்போது ரகுவிடம் வந்தவரின் குரு தன் சீடனின் தூய்மையைக் கண்டு தக்ஷிணை ஏதும் கோற வில்லை. சீடன் மீண்டும் வற்புறுத்தி குரு என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்க, குரு தன்னிடம் சீடன் அறுபது கலைகளை கற்றுள்ள படியால் அறுபது கோடி கொடுக்க வேண்டும் எனச் சொன்னார். இதனைக் கேட்ட சீடன் இவ்வளவு பெரிய தொகையினை யாசகமாகப் பெற ரகு மஹராஜாவிடம் வந்தார். அப்போது ரகு யாவர்க்கும் தானம் செய்து விட்டிருந்ததால் அவரின் கஜானா காலியாக இருந்ததைக் கண்டு சீடன் இங்கு தான் கோறி வந்த உதவி கிடைக்காது என்று திரும்பி சென்றான். இதனைக் கண்ட அரசன் என்னிடம் வந்து ஏன் திரும்பினாய் என்று கேட்க்க, வந்தவன் தங்களிடம் எந்த காரியத்திற்காக வந்தானோ அது நடக்காது என்று தெரிந்து நான் வேறு எங்காவது தேடிக் கொள்ள திரும்பி செல்கிறேன் என்றார். ரகு என்னிடம் வந்தவர் வேறு எவரிடமும் போகக் கூடாது என்று சொல்லி, அவரை தங்க வைத்து, குபேரனுடன் யுத்தம் செய்ய தயாரானான், வந்தவர் ஒரு இரவு இங்கு தங்கினார். குபேரன் இரவோடு இரவாக ரகுவின் கஜானாவை பொருளால் நிரப்பி விட்டான். ரகு வந்தவரிடம் கஜானாவக் காட்டி இதில் உள்ளது யாவும் உங்களுக்கே எடுத்துக் கொள்ளுங்கள் என்ன, வந்தவர் எனக்கு எவ்வளவு தேவையோ அது மட்டும் போதும் என்று பெற்று சென்றார். தேவைக்கு மேல் ஆசை வைக்கக் கூடாது என்பதையும், தானத்தை பக்தியுடனும் சிரத்தையுடனும் அளிக்க வேண்டும் என்பதையும் எவருக்கு எது தேவையோ அதனை காலம் அறிந்து சமயத்தில் தானம் செய்ய வேண்டும் என்பதை இந்த வரலாறு தெளிவுப்படுத்துகிறது. தர்மத்தின் ஒவ்வொரு உத்தேசத்தையும் கடைபிடித்துக் காட்ட ஏற்பட்டது ராமா அவதாரம். கலியுகம் பிறந்து ஐயாயிரம் ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த யுகத்தில் சங்கர சங்கர ஸாக்ஷ£த் என்ற படி ஆதிசங்கரர் காலடியில் அவதரித்து எட்டு வயதில் தார்மிக பிரசாரம் செய்ய முதல் உபதேசமாக பிராம்மண பெண்மையின் ஏழ்மையைப் போக்க '' கனகதாரா ஸ்தவம் '' செய்தார். ஆசை தார்மிகத்துடன் தொடர்பு கொண்டதாக இருக்க வேண்டும் எனச் சொன்னார். எங்கு பார்வதி தேவி, துருவன், பிரஹலாதன் பகீரதன், அர்ச்சுனன் போன்றவர்கள் தவம் செய்தனரோ அந்த பாரதத்தை மும்முறை யாத்திரை செய்து, ஸப்த முக்தி «க்ஷத்திரங்கள், புண்ணிய நதிகள்ஆகியவற்றினை தரிசித்தும், தீர்த்தமாடியும் வந்தார். இன்று நாம் கொண்டாடும் எல்லா பண்டிகைகட்கும் அடிப்படை காரணமாக இருந்து, நமது கலாசாரத்தினை காப்பாற்றி பல வகையான உபதேசங்களை செய்துள்ளார். பொது மக்களுக்காக பஜ கோவிந்தம், சிவானந்தலஹரி, ஸெளந்தர்யலஹரி போன்ற கிரந்தங்களையும் அருளியுள்ளார். மந்திர சாஸ்திரத்திற்காக பிரபஞ்ச ஸாரம் என்கின்ற கிரந்தத்தையும் அருளியுள்ளார்.
ஞான மார்க்கத்தினை நமக்கு காட்டினார். புண்ணிய பாபங்களை அறிந்து நல்லதைச் செய். எவர் பக்தியடன் இருக்கின்றாரோ அவருக்கே பகவானின் அருள் கிடைக்கும். இதற்காக பிரயத்னத்தையும் பிரார்த்தனையையும் செய்ய வேண்டும். தார்மிகச் செயலை பக்தியுடனும் சிரத்தையுடனும் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்தார். அவர் காட்டிய வழியினை பின்பற்றி குறைந்க பக்ஷம் தினமும் இஷ்ட தெய்வத்தின் நாமங்களை காலை மாலைகளில் ஜபம் செய்து நல்ல புத்தி கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து நல்ல ஸ்வபாவம் ஏற்பட்டு, நல்ல ஸ்தோத்திரங்களைப் படித்து பாராயணம் செய்து, குளியலுக்குப் பின் நெற்றியில் அவரவர் குல வழக்கப்படி திலகம் இட்டு, ஈஸ்வரன் அருளால் மனதில் அமைதியினைப் பெற வேண்டும். காஞ்சியில் தேவியின் நாபிஸ்தானம் விழுந்ததால் அதற்கு காஞ்சிபுரம் எனப் பெயர் வந்தது. கௌஹாத்தியில் ஆஸ்பத்திரி (மருத்துவமனை) கட்டப்பட்டுள்ளது. அங்கு மக்களுகு தொண்டு நடந்து வருகிறது. தென்னிந்திய சிற்பகலை படி அங்கு பாலாஜி கோயில் கட்டப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேகத்திற்காக செல்லும் வழியில் ஒரிஸ்ஸாவில் உள்ள பல «க்ஷத்திரங்களை தரிசனம் செய்து கொண்டு தர்ம பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம். நாளை அக்ஷய த்ருதியை. அக்ஷயம் என்றால் அழிவு இல்லை ஏற்படாது என்று பொருள். சங்கராசார்யாரின் பஜ கோவிந்தம், கணேச பஞ்சரத்தினம் போன்றவற்றினை படித்து நீங்கள் நலம் யாவும் பெற்று வாழ ஆசீர்வதிக்கிறோம்.
(28-04-98 புவனேஸ்வரத்தில் ராம் மந்திரில் ஆற்றிய ஹிந்தி உரையின் தமிழாக்கம்)