காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -6

  ம்முடைய மதம் இந்து மதம். உலகத்திலேயே மிகவும் பழமையானது. உலகம் ஸ்ருஷ்டி செய்த காலத்திலிருந்து வந்துள்ள ஒரே மதம் இது. இது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகம் பூராவும் பரவி இருந்தது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள பழக்கவழக்கங்கள் நம்முடையது தான். அவர்களின் மதத்தில் தான் வேறுபாடு. இங்ஙனம் பல தேசங்களில் நமது ஸம்ஸ்க்ருத பாஷையின் வார்த்தைகள் மிகவும் பரவலாக வழகத்தில் உள்ளது. பலவித ஒற்றுமைகள் உள்ள மதம் எதற்காக ஏற்பட்டது. நாம் மனிதனாக பிறந்தாலும் மனிதனாகவும் உத்தமபுருஷனாகவும் வாழ்ந்து, இந்த வாழ்க்கையினால் நமக்கு பிரயோஜனமாகவும், பிறர்க்கு முடிந்தால் உதவியாகவும், இல்லை எனில் உபத்திரவம் செய்யாமல் வாழவும், நம்மைப் பக்குவப்படுத்தி, பெருந்தன்மை, விட்டுக் கொடுத்தல், ஒற்றுமை, எளிமை வாழ்வு, மனம், வாக்கு காயத்தால் அடுத்தவரை துன்புறுத்தாமல் இருக்க, சமயத்தால் தான் முடியும் என்பதற்காகவே தான் ஏற்பட்டது. மனிதனை தர்மத்தை கடைபிடிக்க செய்தது. அங்ஙனம் செய்வதால் நல்ல ஆரோக்கியம், மனநிலை, நிம்மதி இவை யாவும் கிட்டும். இதற்கான வழிதான் கர்மம். மோக்ஷம், முக்தி, ஞானம் எல்லாம் ஒன்றே. இது வருவதற்கு அறம், பொருள், இன்பம் ஆகிய யாவற்றினையும் சமமாக பார்க்க வேண்டும். மனதை பக்குவப்படுத்த வேண்டும். அனுமான் மார்பை திறந்து அதில் ராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகியோர் இருப்பதைக் காட்டுவதாக ஒரு உருவம் காக்க ஓர் கோயில் இருக்கிறது. பக்தர் என்பதற்கு ஆஞ்சநேயர் ஒரு உதாரணம். பக்தியின் மகிமையால் தான் கடலை தாண்ட முடிந்தது. அவருக்கு கர்வம் ஏற்படவில்லை. தனது சக்தியினை குறைவாக நினைத்திருந்தது அந்த காலம். இந்த கால நிலையே வேறு. நழுவுதல் என்பது ஒன்று. தாண்டுதல் என்பது ஒன்று. சம்பந்தப்படாத கஷ்டமானவற்றை விட்டுவிடுவது நழுவுதல். வாழ்க்கையில் நாம் பல கடல்களை தாண்ட வேண்டும். அனுமான் கடல் தாண்டியது சீதையைக் காண்பதற்காக. நமது பழக்க வழக்கங்களில் சோம்பல், அக்கறை இன்மை, கோபம், அச்சத்தனம் யாவும் இருக்கின்றன. எங்கு, என்ன எதை பேச வேண்டும் என தெரியாமல் இருக்கின்றோம். பொய், அக்கறை இன்மை நிரந்தரத்திற்கு அடையாளம். பரம்பரை கோபம் ஆகியவை யாவும் கடல்கள். சத்தியத்தின் மூலம் பொய்யையும், சிரத்தையின் மூலம் அக்கறை இன்மையையும், கஞ்த்தன்மையை தானத்தின் மூலமும் (தானம் என்பது பணம் தருவது மட்டும் அல்ல. இது எனது இல்லை. அடுத்தவருடையது என்ற எண்ணம்) சாந்தத்தின் மூலமாக கோபம் ஆகிய கடல்களை தாண்டிவிட முடியும்.

ஒன்பது இலக்கணம் ( நவ வியாகரணம் ) அறிந்தவர் அனுமார். அவருடைய மனதில் ஈஸ்வரனுக்கு நிரந்தரமான இடம் உண்டு. இறைவன் நமது உள்ளத்தில் குடி கொள்ள வேண்டும் என்றால் அவருக்கு இதயம் எங்ஙனம் இருந்தால் பிடிக்குமோ அங்ஙனம் மாற்றி இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் என்ற நிலைக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வரத்தை வாங்க்கிக் கொண்டு அளித்தவனையே அழிக்க முயன்ற வரலாறுகளும் உண்டு. நாம் நல்லவற்றைப் பெற்று அதனை மற்றவர்கட்கு உபயோகமாக ஆக்கி வாழ வேண்டும். அடக்கம் தான் உயர்வு தரும். இன்று சுதந்தரம் தான் உயர்வு தரும் என்கின்றனர். கட்டுப்பாடு இல்லை எனில் உயர்வு கிட்டாது. எதையும் அடக்கமாகச் செய்ய வேண்டும். அடக்கமாக செய்ய வேண்டி பழக்கி வைத்ததே நமது மதம். ஆதிசங்கரர் ஆறு மதங்களை ஏற்பாடு செய்தவர். முதலில் வினாயகர், அடுத்து ஞானபழமான முருகப் பெருமான். பிரணவம் அதனை தந்தைக்கே உபதேசித்தவர். தர்மத்தில் குறைவு ஏற்படும் போது மேற்கொள்ளும் பகவானின் அவதாரத்தை தசாவதாரம் எனக் கூறப்படுகிறது. சூரியன் பிரத்யக்ஷ தெய்வம். ஆரோக்கியத்திற்க்கு அதிபதி. '' ஆதித்ய ஹ்ருதயம் '' என்று உள்ளது. யுத்த சமயத்தில் அகத்தியர் ராமனுக்கு உபதேசித்தது. ஆரோக்கியத்தையும் வெற்றியையும் கொடுப்பவர் சூரியன். அடுத்தது சிவன். அடுத்தது அம்பாள்.

இங்கு த்ரிபுரஸுந்தரி என்று அம்பாளுக்குப் பெயர். த்ரிபுராந்தகன் என்று ஈஸ்வரனுக்குப் பெயர். மூன்று புருவங்களாக இருந்த அசுரனை அழித்தார். கோணாமல் உதவிக்கு வர வேண்டும். தன் பெருமையைக் காட்ட சிலர் உதவிக்கு வந்தனர். ஈஸ்வரன் ஒருவன் தான் தனியாக இயங்க முடியும் என்பதைக் காட்டுவது இந்த காட்சி. தனது சிரிப்பால் மூன்று உலகத்தினையும் அழித்தார் சிவபெருமான். இவரை பூஜை செய்வதற்கு பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. தும்பைப் பூவையோ, வில்வத்தையோ போட்டாலே போதும். பக்தி யாவற்றையும் செய்யக் கூடியது. அரசன் ஒரு கோயில் கட்டினான். ஒரு பக்தரும் மனதில் ஒரு கோயில் கட்டினார். இறைவன் பக்தர் கட்டிய கோயிலுக்கே சென்றார். ஈஸ்வரன் நமக்காக கீழே வந்து யாவற்றையும் செய்கிறார். எமனே வந்தாலும் சரணாகதி அடைந்தவனைக் காப்பாற்றத் தானே வருகிறார் ஈசன் என்பதைக் காட்டுவதே மார்க்கண்டேயன் வரலாறு. ஆழ்ந்த பக்தி இருந்தால் இறைவன் எதனையும் மாற்றிக் கொடுக்கிறார். நால்வர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு பல வழிகளில் உதவி செய்திருக்கிறார். என்னைக் காப்பது நமச்சிவாயமே என்று திடமாக இருந்தார் அப்பர்.

பக்தியினால் உலக நன்மைகள் யாவற்றையும் பெற முடியும் என்பதை வாதவூரடிகளின் வரலாறு. நரி பரியானதும் பரி நரியானதுமான படலம், பிட்டுக்கு மண் சுமந்த படலம் காட்டுகிறது. ஆதிசங்கரர் எட்டு வயதில் சன்னியாஸம் பெற்று முப்பத்திரண்டு வயதிற்குள் பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறார். மகான்களின் பாதம் பட்டதால் தான் இந்த நாடு புண்ணிய பூமி என்ற பெயர் பெற்றுள்ளது. ஏழைப் பெண்மணியின் வறுமை நீங்குவதற்காக ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தவத்தினை மஹாலக்ஷ்மி குறித்து பாடினார். சரீரத்தைச் சுத்தப்படுத்த உபவாசம் சொல்லப்பட்டுள்ளது. அன்று c பிட்டு சாப்பிடதால் தான் மற்ற யாவருக்கும் அடி கிடைத்தது என்று ஒரு கவி இறைவனை ஸ்துதியாக பாடியுள்ளார். மிகவும் கோபம் கொண்டவரான துர்வாஸரை பாண்டவர்களிடம், பாண்டவர் யாவரும் உண்டு திரௌபதியும் உண்ட பிறகு, அதிதியாக செல்லுமாறு துரியோதனன் கேட்டுக்கொள்கிறான். கானகத்திற்கு தன் உடன் வந்த பிராம்மணர்கட்கு போஜனம் அளிக்க வேண்டி தனது குல குருவான தௌம்யரின் சொல்படி சூரிய பகவானை வேண்டி அக்ஷய பாத்திரத்தைப் பெறுகிறார் தர்ம புத்திரர். யாவரும் உண்டு திரௌபதியும் உண்ட பாத்திரம் அலம்பி வைப்பதற்கு அடுத்த நாள் தான் அந்த பாத்திரத்திலிருந்து உணவு கிடைக்கும் என்ற நிபந்தனையுடன் சூரிய பகவான் இந்த பாத்திரத்தை அளித்து இருக்கிறார். துர்வாஸர் தன் பரிவாரத்துடன் பாத்திரத்தை அலம்பி வைத்தபின் வர, திரௌபதி கண்ணனை வேண்ட, அவன் வந்து, பாத்திரத்தில் ஒட்டி இருந்த பருக்கையை உண்ண, வந்த துர்வாஸர் மற்றும் அவர் பரிவாரம் யாவும் உணவு உட்கொண்ட திருப்தி அடைந்தனர் என்பது வரலாறு. எதிராளியாக இருந்தாலும் நல்ல எண்ணத்துடன் இருக்க வேண்டும். எதிலும் நல்லதையே பார்க்க வேண்டும் எண்ணம் மிகவும் முக்கியமானது.

(இந்த சமயத்தில் மின் இணைப்பு நின்று விட்டபடியால் தொடர்ந்து பேசமுடியாமல் சுருக்கி நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று)

இறைவனை தினம் ஒரு முறை யாவது வழிபட்டு, பக்தியுடன் நெற்றியில் அவரவர் ஸம்ப்ரதாய சின்னங்களை அணிந்து, தமிழில் உள்ள ஸ்தோத்திரப் பாடல்களைப் படித்து பாடி வாழ்வினை தெய்வ அருள் பெற்றதாக ஆக்கி நீங்கள் வாழ ஆசீர்வதிக்கிறோம்.

(12-03-96 அன்று சென்னை திருவெற்றியூர் கோயிலில் ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 5
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 7
Next