காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -8

வெ ள்ளிக்கிழமையும் ஏகாதசியும் சேர்ந்து இங்கு இன்றைய தினம் மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத சந்திரமௌளீஸ்வரர் பூஜை நடந்தது மிகவும் விசேஷம். பல இடங்களில் அம்பாளுக்கு ஸன்னதிகள் உள்ளன. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் மஹாத்ரிபுரஸுந்தரி என்ற பெயரில் பாராயணம் செய்கிறோம். மற்ற இடத்தில் பல அவதாரங்கள் யாரையோ ஸம்ஹாரம் செய்வதற்காக மேற்கொண்ட அவதாரம் அல்ல. அவதாரத்தின் நோக்கமே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் இந்த கலியுகத்தில் சம்ஹரிப்பது என்பது அல்ல ஒவ்வொருவர் உள்ளத்திலும் உள்ள தீய எண்ணங்களை போக்கி திருத்துவதற்குதான். ஞானத்தைப் போதிக்க வேண்டும். அதற்காக ஈஸ்வர அவதாரமாக ஆசார்யார் காலடி.யில் அவதரித்தார்கள். இவர்க்ள் வேத, ஸ்ம்ருதி, புராண இதிஹாஸங்களின் இருப்பிடம். சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார். சாமான்யர்களிடம் கூட பகவானுக்குக் கருணையுள்ளது. சூரியனின் கிரணங்கள் எங்ஙனம் யாவருக்கும் சமமாக உள்ளதோ அங்ஙனமே ஈஸ்வரனின் கருணையும் சமமாகவே உள்ளது. பக்தி இருக்கும் இடத்தில், ஈஸ்வரனின் கருணை நிச்சயம் உண்டு. நாம் பக்தி செய்தால் ஈஸ்வர கிருபை கிட்டும். மற்றவர்கட்காக பிரார்த்தனை செய்ய கஷ்டம் தீரும். ஸஹஸ்ரநாமம், கீதை, பிரம்மஸ¨த்ரம் ஆகியவற்றிக்கு பாஷ்யம் அருளினார். பிரபஞ்சாரம், விவேக சூடாமணி, ஸெளந்தர்யலஹரி, அநேக ஸ்தோத்திரமாலைகள், பூஜா விதானம் என்றெல்லாம் அருளிச் செய்துள்ளார்கள். நாம் செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாமல் விட்டு விட்டதற்காக ''க்ஷமாபன ஸ்தோத்திரம்''செய்துள்ளார்கள். சித்த சுத்தி அடைந்து ஞானத்தினை அடைய ஞானத்தினை உபதேசிக்க ஏற்ற அவதாரமே சங்கரருடையது. அவர் கைலாஸத்தில் இருந்து கொணர்ந்த ஸ்படிகலிங்கம் தான் தற்போது பூஜையில் உள்ளது. நமது தேசம் ஸாத்வீகமானது. ஈஸ்வர அனுக்கிரகத்தினை நோக்கமாகக் கொண்டது எப்போதும் இருக்கக் கூடியது ஈஸ்வரனின் அனுக்ரஹம் ஒன்று தான் என்ற நம்பிக்கைக் கொண்ட பூமி. வேதங்கள் பலவாக இருந்ததால் மஹரிஷிகள் அதனை கிரகித்து நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பதஞ்சலி வ்யாக்ரபாதரால் எழுதப்பட்ட காலும் கொம்பும் இல்லாத நடராஜரின் ஸ்தோத்திரம் ஒன்று உள்ளது. இதனை பலருக்குச் சொல்லிக் கொடுக்க மஹாஸ்வாமிகள் ஆசைப்பட்டார்கள். அந்த ஸ்தோத்திரத்தினை இங்கு பாடினார்கள். மானசீக உயர்வு அடைவதற்கு ஆன்மீகம் உள்ளது. அமைதியாக, பிரியமாக, பொறுமையாக, தாராளமாக இருக்க ஆன்மீகம் தேவை. இது நம்மிடம் மேலும் மேலும் வளர்த்து யாவரும் மேம்பாடு அடைய ஆசீர்வதிக்கிறோம்.

(27-07-96 கல்பாக்கத்தில் ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 7
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 9
Next