காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -9
ந மக்கெல்லாம் ஆசார்யாளாக இருப்பது பகவத்பாதாள். சாஸ்திரங்கள் நிறம்ப இருக்கின்றன. அர்த்தம் புரியாது. புரிந்தாலும் தாத்பர்யம் புரியாது. மற்ற சாஸ்திரங்களுக்கு விரோதம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதனை எங்கனம் படிக்க வேண்டும் என்றெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும். சம்ஸ்கிருத படிப்பினை மட்டும் கொண்டு வேதத்தினை புரிந்து கொள்ள முடியாது. கல்பம் நிருக்தம் போன்ற அங்கங்களை ஆராய்ந்து அர்த்தத்தினை தெரிந்து கொள்ளக்கூடிய அபூர்வமான ஸந்தர்ப்பம் உங்களுக்கு கிட்டியுள்ளது. எங்கெல்லாம் சந்தேகம் வருமோ அங்கெல்லாம் நிவர்த்தி ஏற்படும் வகையில் ஆசார்யாள் பாஷ்யம் எழுதியுள்ளார்கள். பல இடங்களில் யந்திர பிரதிஷ்டை செய்து ஈஸ்வரானுக்கிரகம் யாவருக்கும் கிடைத்திட அருள் செய்திருக்கிறார்கள். சாஸ்திரம் யாவையும் சொல்லித்தரவேண்டும். அப்போது தான் சிரத்தை, பிரியம் ஏற்படும். தம்மீது உள்ள கருணையினால் தான் புத்தகமாக எழுதியுள்ளார்கள். பாஷ்யத்திலும் அடுத்தவர் சொன்னதை தப்பு என்று சொல்வானேன் என்று கேள்விக் கேட்டுக் கொண்டு நம்பிக்கை உள்ளவர்கட்கு நான் முன்னால் சொன்னதே போதும். சந்தேகம் உள்ளவர்கட்காக மேலும் விளக்கம் சொல்லித்தான் ஆக வேண்டும். வியாதி நிவர்த்திக்கான யோகம் சரியாகக் கையாளாததால் வியாதி அதிகமாவது போல வேதத்திற்கும் சரியான விளக்கம் தர வேண்டும். தவறாமல் செய்பவருக்கு கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காமல் போய்விடும். கஷ்டமும் வந்து விடும். அப்ரியஸ்ய ச பத்யஸ்ய வக்தா சரோதா ச சதுர்லப : சாஸ்த்திரத்தில் நிறம்ப கேழ்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. ச்ருதம் ச பஹ§ நிர்மலம் ஈஸ்வர சம்பந்தமானவற்றை நிறைய கேழ்க்க வேண்டும். சிரவணம் படிப்பை சொல்லுவதை அத்யயனம் செய்ய வேண்டும். அதற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். வித்யாரண்யஸ்வாமி நான்கு வேதங்களுக்கும் அர்த்தத்தை சரியாக எழுதியுள்ளார். அவருடைய அனுக்கிரக்கத்தால் தான் வேதம் இன்று நிலைத்து உள்ளது. ச்ரெலிதம் பிரசாரத்திற்கு வர வேண்டும். ஷடங்கம், வேத பாஷ்யம் ஆகியவற்றினை பரப்பி படிக்கச் செய்து பரிசும் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள் மஹாஸ்வாமிகள். பக்தி கர்மா முதலியவற்றிக்கு ஆசார்ய சங்கராசார்ய ஸந்து மே ஜன்ம ஜன்மனிஎன்று சொல்கிறோம். ஆசார்யன் மூலமாக படித்து தெரிந்து கொண்டால் தான் பலன் கிட்டும். வேதத்தில் பதபாடம் விதிமுறைகள் உள்ளன. புத்தகம் பாராமல் சொல்வது தான் விசேஷம். கல்வைத்த வாரம் ஸஹாஸிணி லக்ஷணப் ப்ரீதா என்று சொல்லப்படுகிறது. (கல் வைத்த வாரம் எனில் பரிட்சையில் வேத விற்பன்னர்கள் குறிப்பிட்ட காண்டம் - அதிகாரம் - அனுவாகம் என்று சொல்லி அதில் இருநூற்று ஐம்பது வார்த்தைகள் சொல்ல வேண்டும், கூடவோ குறையவோ கூடாது என்பதான ஒரு வித பரிட்சை.) இதில் வர்ணக்கிரமம் உள்ளது அக்ஷரம் எங்கிருந்து வருகிறது என்று ஸ்தானத்தை தெரிந்து ஒவ்வொரு எழுத்திலும் உள்ள ஸ்வரம் தேவதை முதலியவற்றினை தெரிந்து கொள்ள இருக்கிறது. அபூர்வமான சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு சத் காரியத்தில் ஈடுபட்டு வாழ்க்கை தார்மீகமாக இருக்கவும் ஈஸ்வரனின் அனுக்கிரகம் பெறவும் ஆசீர்வதிக்கிறோம்.
(29-07-96 அம்பத்தூரில் ஆற்றிய உரை)
நா ம் எல்லோரும் வேதத்தில் சொல்லியுள்ளதைச் செய்ய வேண்டும். தர்மத்தின் அடிப்படை வேதம் தான். இதனை எவரும் எழுதவில்லை. இன்று ஒன்று தான் கிடைப்பதில்லை. ருக் வேதத்திற்கு இரண்டு சாகைகள் தான் நடைமுறையில் உள்ளது. கிடைத்துள்ள வேதத்தினைக் கூட தெரிந்து கொள்ளும் வாய்ப்பு குறைந்து உள்ளது. வேதத்தினை காப்பதற்கு எனவே முதலவதாரம் ஏற்பட்டது. வேதத்தினை கவுரவிக்க வேண்டும். நம்பிக்கை வளர வேண்டும். சொல்லப்பட்டுள்ள கர்மாக்களை எந்த நியதியில் செய்யச் சொல்லியுள்ளதோ அங்ஙனம் தான் செய்ய வேண்டும். நான்கு வேதங்கள் இருந்தாலும் ருக் வேதத்திற்கு '' ஸம்ஹிதை ஹோமம் '' பழக்கத்தில் உள்ளது. 10520 ருக்குகள் சொல்லி இருக்கிறார்கள். வேதத்தில் வரும் ரிஷிகளின் பெயர்கள் எல்லாவற்றையும் கேட்டாலே புண்ணியம். ஒரு சூகிதி த் ஈ ஹ வை தத் இதனை வைத்து புத்தகம் உள்ளது. யாகத்திலும் இந்த மந்திரத்தைச் சொல்லி ஹோமம் செய்ய வழி இருக்கிறது. இதனை முறையாக புரிந்து கொண்டு செய்தால் '' கோமா ' ' ( Coma ) போன்ற வியாதியும் தீரும். ருக்வேத பாஷ்யத்தை வ்யாகரணம், மீமாம்ஸம், சாஸ்திரம் ஆகியவற்றினை நன்றாக படித்திருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.ஜராய்ஜரம் வித்யாரண்ய ஸ்வாமிகள் எழுதிய அர்த்தத்தை தான் பிரமாணமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். வேதத்தினை அத்யயனம் செய்து அர்த்தத்தை புரிந்து கொண்டு நிஷ்காரனீணன ஸ்வதர்மம் என்ற எண்ணத்துடன் பக்தி சிரத்தையுடன் செய்து வரவேண்டும். ருக் வேதத்தில் பிராம்மணத்தை அத்யயனம் செய்பவர்கள் மிகக் குறைவு. இது ஸ பாகமாகவும் பத பாகமாகவும் இருக்கிறது. இதனை மனப்பாடம் செய்வது மிகவும் சிரமம். கத்யம் போன்றது. பத்யம் என்பது பாட்டு. ஆரண்யகத்தில் யத்ரேய உபநிஷத் உள்ளது. பிராசீனமான தர்மத்தை தெரிந்து கொள்ள இந்த ஹோமம் லோக சம்ரக்ஷணத்திற்காகவும், இதனை யாவரும் தெரிந்து கொள்ளவும் ஏற்படுகிறது. இதனால் யாவருக்கும் சிரேயஸ் கிடைக்க ஆசீர்வதிக்கிறோம்.
(29-07-96 அன்று ம்ருத்யுஞ்ஜய ஹோமம் சென்னை T.T.K. சாலையில் உள்ள மஹாராஷ்டிர நிவாஸில் ஆற்றிய உரையின் சாரம்)