நமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்
தில்லைவாழ் அந்தணர்:சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.
1. திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும் முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.
2. இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.
3. இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.
4. மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு, திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித் தம் உயிரைவிட்டவர்.
5. விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு, செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக் காரணமாய் இருந்தவர்.
6. அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத் தந்தவர்.
7. எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச் சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை வெட்டியவர்.
8. ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர். போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார் கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.
9. கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்.
10. குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர். சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.
11. மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம் தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச் சிவனடியாருக்குத் தந்தவர்.
12. அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து கொண்டவர்.
13. ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.
14. மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை. சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர். திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.
15. முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர். மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.
16. உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு. திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.
17.திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்- சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.
18. திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர்
19. சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு, திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித் தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.
20. திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு, திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப் பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.
21. குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன் சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.
22. பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும் கயிலை சென்றவர்.
23. காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு. காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர். ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.
24. அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர். பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.
25. திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை. அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர். திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.
26. நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு. ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டவர்.
27. திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி. உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப் பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் முக்தி தந்தவர்.
28. ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும் மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.
29, திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன் உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச் செய்தவர்.
30. தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக் குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.
31. மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு, திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
32. சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
33. சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக் கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.
34. சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச் சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.
35. சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு, திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.
36. சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்) அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம் தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ பெருமானுடைய திருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.
37. கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி. சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.
38. கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை. தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன் திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.
39. புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர். பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி உயிர்விட்டவர்.
40. நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும் சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம் பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.
41. அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்) சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக் கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.
42. கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி கையை வெட்டியவர்.
43. கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி) தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்
44. சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.
45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்- தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் தலையாத்திரை செய்தவர். க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்.
46. கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர். புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.
47. காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.
48. நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை. திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால், கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.
49. வாயிலார் நாயனார்-மார்கழி-ரேவதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.
50. முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.
51. கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.
52. இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர். அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தவர்.
53. செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர். கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர் மூக்கை அரித்தவர்.
54. புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர். சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில் காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்.
55. கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு. திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.
56. பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.
57. மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார், பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய நாட்டையும் சைவமாக்கியவர்.
58. நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.
59. கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.
60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு- திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு புரிந்தவர்.
61. சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர். சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.
62. இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர், சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.
63. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர். திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனா வருவித்தவர்.