திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருப்பனையூர்
1) பேரளம் - திருவாரூர்ச் சாலையில் சன்னாநல்லூரைக் கடந்து, மேலும் சென்றால் 'பனையூர்' என்று கைகாட்டி உள்ளது. அக்கிளைப் பாதையில் 1 A.e. செல்ல வேண்டும். குறுகலான மண் பாதை, பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும்.
2) இதே சாலையில், மேலும் சென்று, ஆண்டிப்பந்தல் என்னும் ஊரை அடைந்து, திருமருகல், நாகூர் செல்லும் பாதையில் திரும்பி, 'கோணமது' என்னும் இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பிச் செல்லும் குறுகலான கிளைப்பாதையில் 1 A.e.
சென்றால் திருப்பனையூரை அடையலாம். பேருந்து செல்வது சற்றுச் சிரமம். வேன், கார் செல்லும்.
பழமையான கோயில், சிறிய ஊர். கரிகாற் சோழன் வளர்ந்த ஊர். பனைமரங்களை மிகுதியாக உடைய மணற்பாங்கான உர். "தாலவனம்" என்னும் பெயர் கொண்டது. (தாலம் - பனை) கோயிலுக்குத் 'தாலவனேஸ்வரம்' என்று பெயர். சப்தரிஷிகள், பாரசர முனிவர் மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட தலம்.
(சப்தரிஷிகள் - 1) கௌசிகர் 2) காசிபர் 3) பரத்வாஜர் 4) கௌதமர் 5) அகத்தியர் 6) அத்ரி 7) பிருகு)
இறைவன் - சௌந்தரேஸ்வரர், அழகியநாதர், தாலவனேஸ்வரர்.
இறைவி - பிரஹந்நாயகி, பெரியநாயகி.
தலமரம் - பனைமரம் (கோயிலில் உள்ளன)
தீர்த்தம் - பராசர தீர்த்தம், அமிர்தபுஷ்கரணி, திருமகள் தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது.)
(கல்வெட்டில் இறைவன் திருப்யெர் 'பனையடியப்பன்' பனங்காட்டிறைவன்' என்று குறிக்கப்பெறுகின்றது) .
சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுக்கோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து" என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திரப்பனையூர் நினைத்துவரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர்' என்று பதிகம் பாடி, அரள் பெற்றார். இந்நகிழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் 'சந்தித்த தீர்த்தம்' என்னும் பெயருடன் திகழ்கின்றது. சும்பந்தர், சுந்தரர், பாடிய பதி.
கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் வலப்பால் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது -நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது. தலப்பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறுஸ்ரீ தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய 'இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப்புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும்
தாயையும் பனையூர்க்கு அனுப்பி வைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூர்க்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தாள். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிரந்ததனால் இவ்விநாயகர் 'துணையிருந்த விநாயகர்' என்னும் பெயர் பெற்றார்.
அடுத்தூத தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்தள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.
பிராகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சந்நிதி உள்ளது. சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளை £யர் நினைவாக இவ்விநாயகரும் 'மாற்றுரைத்த விநாயகர்' என்றழைக்கப்படுகின்றார். அடுத்து சுப்பிரமணியர் சந்நிதி.
கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சப்தரிஷிகள் வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. திருமகள் கோயில் உள்ளது.
பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் - இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார்.
மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை - நடராஜர்.
சந்நிதிகள் உள்ளன. அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது - இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.
இக்கோயில் A.H. 11-ஆம் நாற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் "இராஜேந்திர சோழப் பனையூர்" என்று குறிக்கப் பெறுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது.
"அணியார் தொழவல்ல வரேத்த
மணியார் மிட றொன்று டையானூர்
தணியார் மலர் கொண்டு இருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே". (சம்பந்தர்)
"வஞ்சிநுண்ணிடை மங்கை பங்கினர் மாதவர் வளரும் வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திருப்பனையூர்
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகைய வளப்பன் வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப் பார் அவரே அழகியரே". (சுந்தரர்)
"திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்" (திருவாசகம்)
-கண்டீச
"நண் பனையூரன் புகழும் நம்ப என உம்பர் தொழும்
தண் பனையூர் மேவும் சடாதரனே". (அருட்பா)
அஞ்சல் முகவரி-
அருள்மிகு. சௌந்தரேஸ்வரர் திருக்கோயில்
பனையூர் - சன்னாநல்லூர் அஞ்சல் - 609 504
நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.