திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
குரங்கணில்முட்டம்
காஞ்சிபுரத்திலிருந்த வந்தவாசி செல்லும் பேருந்துப்பாதையில் பாலாற்றைத்தாண்டி. 'தூசி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து கிழக்கு நோக்கி 2 A.e. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில்வரை செல்ல நல்லபாதையுள்ளது.
வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம். மிகச் சிறிய கோயில். கோயில் வாயிலின் இறைவனை வழிபட்ட தலம். மிகச் சிறிய கோயில். கோயில் வாயிலின் முகப்பில் அணிலும் காகமும் வழிபடும் சிற்பம் உள்ளது.
இறைவன் - வாலீஸ்வரர், கொய்யாமலை நாதர்
இறைவி - இறையார் வளையம்மை.
தலமரம் - இலந்தை.
தீர்த்தம் - காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு) .
சிவலிங்கத் திருமேனி சிறியத. சிறிய கருவறை. மேற்கு நோக்கிய சந்நிதி. சம்பந்தர் பாடல் பெற்றது. இக்கோயில் உள்ள ஊர் மிகச்சிறிய கிராமம். கோயிலுக்குப் பக்கத்தில் 'காக்கைத் தீர்த்தம்' என்னும் பெயரில் அம்பாள் சந்நிதி, பிற்காலத்தில் கோயிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பான் சந்நிதி தெற்கு நோக்கியது. விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, துர்க்கை, பிரமன், நவக்கிரகங்கள், திருமால், பைரவர், நால்வர், சப்தமாதாக்கள் சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார்.
அம்பாள் பெயரை இப்பகுதி மக்கள் 'இளையாளம்மன்' என்று அழைக்கின்றனர். கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் ஒரு பாறை குடைக் கோயிலாகக் காட்சியளிக்கிறது.
கல்வெட்டில் இத்தலம் 'காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்' எனக் குறிக்கப்படுகின்றது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிப்பிடப்படுகின்றார். சகம் 1451ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாகக் குறிப்புள்ளது. இப்பகுதி மக்களிடையே கொய்யாமலை என்னும் பெயர் பலருக்கு இருப்பதை இன்றும் காணலாம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இக்கோயிலின் சுற்றுமதில், சுவாமி அம்பான் விமானங்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு, ரக்தாக்ஷி, தை, 22-ல் (4-2-85-ல்) மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
"இறையார் வளையாளை யர் பாகத்து அடக்கிக்
கறையார் மிடற்றான் கரி கீறிய கையான்
குறையார் மதி சூடி குரங்கணின் முட்டத் (து)
உறைவான் எமையாளுடை யண் சுடரானே."
"மையார் நிறமேனி யரக்கர் தங் கோனை
உய்யா வகையார் அடர்த்தின்ன ருள்செய்த
கொய்யார் மலர் சூடி குரங்கணின் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே."
(சம்பந்தர்)
-"முக்கசமும்
ஆயுக்குரங்கணின் முட்டப் பெயர் கொண்டோங்குபுகழ்
ஏயும் தலம் வாழ்இயன் மொழியே."
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. வாலீஸ்வரர் திருக்கோயில்
குரங்கணில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல் - 631 703
செய்யாறு வட்டம் -
திருவண்ணாமலை மாவட்டம்.