திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள தலங்கள்

திருவாசகத்தலங்கள்

திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள தலங்கள்

1. திருப்பெருந்துறை

2. தில்லை

3. உத்தரகோசமங்கை

4. திருவண்ணாமலை

5. திருக்கழுகுன்றம்

6. திருத்தோணிபுரம்

7. திருவாரூர் என்பன., இவற்றுள்,

இவை திருமுறைத்தலங்களாகவும்

இவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு தலங்களாகவும் இடம் பெற்றுள்ளன.

இவையன்றித் திருவாசகத்தில் குறிக்கப்பெறும் தலங்களாக அறியப்படுபவை வருமாறு - 1. மகேந்திரமலை 2. பஞ்சப்பள்ளி 3. நந்தம்பாடி 4. குடநாடு 5. வேலம்புத்தூர் 6. சாந்தம்புத்தூர் 7. மதுரை 8. திருப்பூவணம் 9. திருவாதவூர் 10. பூவலம் 11. திருவெண்காடு 12. பட்டமங்கலம் 13. ஓரியுர் 14. பாண்டூர் 15. தேவூர் 16. திருவிடைமருதூர் 17. கச்சி ஏகம்பம் 18. ஸ்ரீ வாஞ்சியம் 19. கடம்பூர் 20. ஈங்கோய்மலை 21. திருவையாறு 22. திருப்பூந்துருத்தி 23. திருப்பனையூர் 24. திருப்புறம்பயம் 25. சந்திரதீபம் 26. குற்றாலம் 27. பாலை 28. கல்லாடம் 29. மொக்கணிச்சுரம் 30. கூடல் (மதுரை) 31. திருப்பராய்துறை 32. திருச்சிராப்பள்ளி 33. கோகழி 34 திருப்பழனம் 35. இத்தி 36. மலைநாடு 37. அவிநாசி. இவற்றுள் சில திருமுறைத்தலங்கள். ஏனையவற்றுள் பல பெயர்கள் எவ்வெத்தலங்களைக் குறிக்கின்றன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. திருவாதவூர் மாணிக்கவாசகருடைய அவதாரத்தலம்.


தலங்களும் அருளிச் செய்யப் பெற்ற பதிகங்களும் பகுதிகளும்

1. திருப்பெருந்துறை (20)

1. சிவபுராணம் 2. திருச்சதகம் 3. திருப்பள்ளியெழுச்சி 4. செத்திலாப் பத்தது 5. அடைக்கலப் பத்து 6. ஆசைப் பத்து 7. அதிசயப்பத்து 8. புணர்ச்சிப் பத்து 9. வாழாப் பத்து 10. அருட்பத்து 11. பிரார்த்தனைப் பத்து 12. குழைத்த பத்து 13. உயிருண்ணிப் பத்து 14. பாண்டிப் பதிகம் 15. திருஏசறவு 16. அற்புதப் பத்து 17. சென்னிப் பத்து 18. திருவார்த்தை 19. திருவெண்பா 20. திருப்பண்டாய நான்மறை.


2. தில்லை (24)

1. கீர்த்தித் திருஅகவல் 2. திருஅண்டப்பகுதி 3. போற்றித் திருஅகவல் 4. திருப்பொற்சுண்ணம் 5. திருக்கோத்தும்பி 6. திருத்தெள்ளேணம் 7. திருச்சாழல் 8. திருப்பூவல்லி 9. திருவுந்தியார் 10. திருத்தோணாக்கம் 11. திருப்பொன்னுசால் 12. அன்னைப்பத்து 13. குயிற்பத்து 14. திருத்தசாங்கம் 15. கோயில்மூத்த திருப்பதிகம் 16. கோயில் திருப்பதிகம். 17. கண்ட பத்து 18. அச்சுப் பத்து 19. குலாப் பத்து 20.

எண்ணப் பதிகம் 21. யாத்திரைப் பத்து 22. திருப்படையாட்சி 23ஆனந்த மாலை 24. அச்சோப் பதிகம்.


3. உத்தரகோசமங்கை

1. நீத்தல் விண்ணப்பம்


4. திருவண்ணாமலை

1. திருவெம்பாவை

2. திருஅம்மானை


5. திருக்கழுக்குன்றம்

1. கழுக்குன்றப் பதிகம்


6. திருத்தோணிபுரம்

1. பிடித்த பத்து


7. திருவாரூர்

1. திருப்புலம்பல்


  Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருப்பெருந்துறை
Next