திருவாசகத்தலங்கள்
தில்லை (சிதம்பரம்)
(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.)
பாடல்கள்-
சுந்தரத் திருநீறணிந்தும் மெழுகித்
தூயபொன்சிந்தி நிதிபரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரம் கோன் அயன் தன்பெருமான்
ஆழியான்நாதன் நல்வேலன் தாதை
எந்தரம் ஆள் உமையாள் கொழு நற்கு
ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும் நாமே. (திருப்பொற்சுண்ணம்)
நாயேனைத்துன் அடிகள் பாடுவித்த நாயகனைப்
பேனேது உள்ளம் பிழை பொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (திருக்கோத்தும்பீ)
கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
புனவேய் அனவளைத் தோளியடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத தெள்ளேணம் கொட்டாமோ. (திருத்தெள்ளேணம்)
தான்அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்தழுத்து வித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்தழுத்துவித்த திருவடிகள்
வானுந்த தேவர்கட்கோர்வான்பொருள்காண் சாழலோ (திருச்சாழல்)
வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய்வாழ்த்து வைத்து
இணங்கத் தன்சீறடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங்வரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. (திருப்பூவல்லி)
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கிறைத்தேன் பரம் பரனைப் பணியாதே
ஊழிமுதல் சிந்தாத நன்மணி வந்தென் பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ (திருத்தோணோக்கம்)
கொந்தணவும் பொழிற் சோலைக்
கூங்குயிலே இதுகேள் c
அந்தணனாகி வந்திங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தமராம் இவன்என்று இங்கு
என்னையும் ஆட் கொண்டருளும்
செந்தழல் போல் திருமேனித்
தேவர்பிரான் வரக்கூவாய். (குயிற்பத்து)
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சேல்
என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே
பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோடுனைப் பிரிந்து
வருந்துவேனை வாஎன்று உன்
தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே
போனால் சிரியாரோ. (கோயில் மூத்த திருப்பதிகம்)
உருத்தெரியாக்காலத்தே உள்புகுந்து என்உளம் மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியனரில் நாயடியேன் அணிகொள்வதில்லை கண்டேனே. (கண்டபத்து)
என்னால் அறியாப் பதம் தந்தாய்
யான் அறியாதே கேட்டேன்
உன்னால் ஒன்றம் குறைவில்லை
உடையாய் அடிமைக்கு ஆர்என்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியரொடுங் கூடாது
என்நாயகமே பிற்பட்டிங்கு
இருந்தேன் நோய்க்கு விருந்தாயே (ஆனந்தமாலை)