வைஷ்ணவம் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி (அயோத்யா, உ பி) உத்திரப்ரதேசத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் ராமாயணத்தில் உள்ள பு

வைஷ்ணவம்
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி (அயோத்யா, உ.பி.)

உத்திரப்ரதேசத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் ராமாயணத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமனின் ஜன்மபூமியான அயோத்யா உள்ளது. இது சரயு நதிக்கரையில் உள்ளது. ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று. ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட முக்கியகத்தைத் தவிர இங்கு பல கோயில்களும் வழிபாடு இடங்களும் உள்ளன. புராதனமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, சீதாதேவி, லக்ஷ்மணன் ஆகியோரின் விக்ரகங்கள் சரித்ரரீதியான சர்ச்சைகள் பல இருப்பினும் இங்கு பராமரிக்கப்பட்டு லக்ஷக்கணக்கான மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த இடத்தைச் சுற்றி பல மடங்கள் உள்ளன. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சார்ந்த ராமானுஜர், ராமாநந்தர் ஆகியோர்களின் வழி வந்தவர்களைச் சார்ந்த மடங்கள் இவை. அயோத்தியில் ஸ்ரீ ராமனின் ஜன்மதினமாகிய ஸ்ரீ ராமநவமி இங்கு முக்கியமான முதன்மையான திருவிழா. இந்த அயோத்தியானது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான புனிதப்பயணத்தலம்.