வைஷ்ணவம் ஸ்ரீ சீதாராமச்சந்திரர் (பத்ராசலம், ஆந்திரப்ரதேசம்) கோதாவரி நதி தீரத்தில் தண்டகாரண்ய காட்டில் மகாம

வைஷ்ணவம்
ஸ்ரீ சீதாராமச்சந்திரர் (பத்ராசலம், ஆந்திரப்ரதேசம்)

கோதாவரி நதி தீரத்தில் தண்டகாரண்ய காட்டில் மகாமேருவின் மகளான பத்ரன் நீண்ட காலம் தவம் செய்ததாக நம்பப்படுகிறது. ஸ்ரீ ராமச்சந்திரன் அவருக்கு தரிசனம் அளித்து அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க அந்த இடத்திற்கு வரும் பக்தர்கட்கு அருள்பாலிக்க அந்த இடத்தையே சீதையுடன் லக்ஷ்மணனுடன் கூடி தானும் தனது வாசஸ்தலமாக ஆக்கிக் கொண்டார்.

அரசாங்க பணத்தைக் கொண்டு ராமதாஸ் என்கிற சிறந்த ராம பக்தர் இங்கு கோயிலைக் கட்டினார் என்று பரம்பரையாக கருதப்படுகிறது. அரசாங்க பணத்தை துஷ்பிரயோகம் செய்து கோயில்கட்டிய குற்றத்திற்கு நவாப் அவரை கோல்கொண்டா கோட்டையில் தனிமைச் சிறையில் அடைத்து வைத்தான். அரசுக்கு சேரவேண்டிய தொகையை இராமன் மனிதவடிவில் வந்து நவாபிற்கு செலுத்தி அவரின் சிறை விடுதலையைப் பெற்றார்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள இந்த தலம் மிகவும் முக்கியமான வழிபாடு தலங்களில் ஒன்று. முக்கிய விக்ரகமாகிய ஸ்ரீ ராமசந்திரர் இங்கு நான்கு கைகளிலும் முறையே சங்கு, சக்கிர, வில், அம்பு என்று ஏந்தி இருப்பது தனிச்சிறப்பு. இங்கு ராமனின் மடியில் சீதை அமர்ந்திருக்க லக்ஷ்மணன் சற்று தொலைவில் நிற்பதைக் காணலாம்.