வைஷ்ணவம் ஸ்ரீ கிருஷ்ணர் (குருவாயூர் , கேரளா) திருச்சூர் நகரத்திலிருந்து 30 A e தொலைவில் கேரளாவில் குருவாயூர

வைஷ்ணவம்
ஸ்ரீ கிருஷ்ணர் (குருவாயூர் , கேரளா)

திருச்சூர் நகரத்திலிருந்து 30 A.e. தொலைவில் கேரளாவில் குருவாயூர் உள்ளது.

ஒரு அழகிய சிறிய விக்ரகம் பிரம்மாவினால் மஹாவிஷ்ணுவிற்கு அளிக்கப்பட்டதாகவும், அதனை ஸ்ரீ கிருஷ்ணர் தனது சொந்த வழிபாட்டிற்கு உபயோகப்படுத்தி வந்ததாகவும் தல புராணம் சொல்கிறது. துவாபரயுகத்தின் முடிவில் துவாரகை கடலில் மூழ்குவதற்கு முன்னால் ஸ்ரீ கிருஷ்ணனின் விருப்பப்படி இந்த விக்ரகமானது காற்றுக் கடவுளாகிய வாயுவாலும் குருவாலும் இந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை எப்போதும் சிரித்த முகத்துடன் உள்ள குருவாயூரப்பன் அருள் பாலித்து வருகிறார். இந்த தலத்தை சுற்றியுள்ள மக்களுக்கு இவர் குலதெய்வமாக விளங்குகிறார். இந்த கோயிலின் வழிபாட்டு முறையின் சிறப்பு அம்சங்களாவது
1. தினமும் இங்கு கீத கோவிந்தம் சொல்லப்படுவது.
2. சீவாளி ஊர்வலம்.
3. இரவு நேரத்தில் கிருஷ்ண ஆட்டம் என்ற நாட்டியத்தின் மூலம் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது.

மிகவும் பாண்டித்யம் பெற்றவரும் புலவரும் ஆன மேல் புத்தூர் நாராயம பட்டாதிரி இங்கு 400 ஆண்டுகட்கு முன்பு வசித்து வந்தார். அவர் பாகவதத்தின் சாரமாக தன்னால் பாடப்பட்ட நாராயணீயம் என்னும் கிரந்தத்தை இங்கு குருவாயூரப்பனின் பாத கமலங்களில் சமர்ப்பித்து அனுக்கிரகம் பெற்று தனது முடக்கு வாதம் பூரணமாக குணமாகப் பெற்றார் என்பது வழிவழி வந்த செய்தி.