வைஷ்ணவம் ஸ்ரீ விட்டோபாவும் ருக்மணி தாயும் (பண்டர்பூர் மஹராஷ்டிரம்) பண்டரிபுரத்தின் பெருமையை காசியோ கயாவோ, துவார

வைஷ்ணவம்
ஸ்ரீ விட்டோபாவும் ருக்மணி தாயும் (பண்டர்பூர் மஹராஷ்டிரம்)

பண்டரிபுரத்தின் பெருமையை காசியோ கயாவோ, துவாரகையோ கூட மிஞ்சமுடியாது. மஹராஷ்டிரத்தின் ஆன்மீக தலைநகரம் அல்லது புனிதப்பயண மையம் என்று தைரியமாகச் சொல்லலாம். பழமையான வர்கரி புனிதப்பயணம், பாதஸ்பர்சதர்சனம், நூற்றுக்கணக்கணக்காண திண்டி (கூட்டு ஊர்வலங்கள்) பல்லக்குகள் ஒவ்வொரு ஆஷாடி. கிருத்திகை ஏகாதசிகளிலும் இந்த கோயிலுக்கு வருவது என்பது இந்த நகரத்தில் ஏற்படும் சிறப்பிற்கு எடுத்துக்காட்டு. ஷோலாப்பூர் மாவட்டத்தில் சந்திர பாகா நதியின் ஒரத்தில் இந்த நகரம் நன்கு வளர்ந்த்துள்ளது.

இந்த கோயிலின் சுற்றுப்புறம் மிகவும் பழமை வாய்ந்தது. பல முறை இந்த கோயில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. கி.ப.83ல் சாலிவாஹன வம்ச பிரதிஷ்டான என்கிற அரசன் பண்டரிபுரத்தை புதுப்பித்தான் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இங்கு உள்ள இறைவனுக்கு பாண்டுரங்க விட்டலர் என்றும் பண்டரிநாதர் எனவும் பெயர்கள் உளது.

தாய் தந்தையருக்கு தொண்டு செய்து கொண்டிருந்த புண்டரீக என்னும் பக்தனின் தாய்தந்தையரின் சேவை மனப்பான்மைக்கு மகிழ்ந்து அவனை ஆசீர்வதிக்க ஸ்ரீமன் நாராயணன் தானே நேரில் அவனிடம் வந்தார். ஆனால் தாய் தந்தையரின் சேவை இறைவனாலும் தடை பெற விரும்பாத புண்டரீகன் அருகிலிருந்து ஒரு செங்கல்லை எடுத்துப்போட பகவான் அதன் மீது நின்று கொண்டு தன் மீது கவனத்தை பக்தன் செலுத்தும் காலத்தை எதிரிநோக்கி இருந்தார். மராத்தி மொழியில் விட் எனில் செங்கல் எனவும் உபா எனில் நில் எனவும் பொருள் வரும். ஆகையினால் தான் விட்டோபா என்ற பெயர் ஏற்பட்டது. செங்கல்லின் மீது நிற்பவன். கோயிலில் இவர் ஒரு பீடத்தின் மேல் செங்கல்லின் மீது நின்று இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார். அவருக்கு அருகில் ருக்மணி தேவி தனியே நிற்கின்றார். விடோபாவின் மீது பக்திரஸம் சொட்டும் பாடல்களை இயற்றியவர்களில் ஞானதேவர், நாமதேவர், ஏகநாதர், துகாராம் போன்ற பக்தர்கள் முன்னணியில் உள்ளவர்கள்.

ருக்மணிதேவி கோயில் போன்று சில சிறிய கோயில்களும் உள்ளன. விட்டலரின் சிறந்த பக்தரான புண்டரீகரின் சமாதி மஹத்வார் காட்டில் உள்ளது. திரிலோகய நாம பவனம், தன்புரே மண்டபம் ஆகியவை போன்றவையும் முக்கிய மானவை சில பண்டரிபுரத்தில் உள்ளன.

வர்கரி யாத்திரை வழி நெடுக ஆடலும் பாடலும் மிகுந்ததாக உயர்ந்த வண்ண உணர்வினை அளித்து பண்டரிபுரத்தில் முடிவடைகிறது. ஆடல், பாடல், பிரார்த்தனை யாவும் எல்லோர் உள்ளத்தையும் கவர்வதாக உள்ளது. ஆஷாட சுக்ல ஏகாதசி, கார்த்திகை சுக்ல ஏகாதசி உபவாசங்கள் மிகவும் முக்கியமான தினங்கள்.