அறவழி வாசகம் விநாயகர் விநாயகரை நாம் வணங்கிடுவோம் விழுமிய கல்வியிற் சிறந்திடுவோம் கணபதியை ந

அறவழி வாசகம்

விநாயகர்

விநாயகரை நாம் வணங்கிடுவோம்

விழுமிய கல்வியிற் சிறந்திடுவோம்

கணபதியை நாம் கைதொழுவோம்

காரிய சித்தியை அடைந்திடுவோம்

ஐங்கரனை நாம் போற்றிடுவோம்

அவனியில் புகழ்பட வாழ்ந்திடுவோம்

ஆனைமுகன் அடி பரவிடுவோம்

அனைத்து நலனையும் பெற்றிடுவோம்.