விநாயக புராணம்
1. சிறப்புப்பாயிரம்
கணபதி வணக்கம்
அறிவிற்கறிவுற்றவொளியக்கொளியா-ரணுவிற்கணுமுற்றுமுயிர்க்குயிராய்
நிறைநித்தவொரக்கரவத்துவதாய்-நிகழ்முத்தொழிலத்தலைவர்கிறையாய்
மறையுச்சிநடப்பொருள்கைக்ளிறாய்-வருபத்தசனர்க்கருள்வைப்பினெழிற்
செறிமிக்கமணத்தியல்பொற்கமலத்-துணைநற்கழலைச்செனியிற்புனைவாம்.
சித்தி புத்திகள் வணக்கம்
வினைத்துணையாய்நின்றுலகங்களையாக்கிவிரிபொறிக்குவிளக்கநல்கிச்
கனத்தகருமதூட்டுங்கிரியாஞானத்திறமாய்கணேசனெந்தை
இனைத்தெனவீரேழுலகுஞ்சொலற்கரியபுகழாளியிருபானின்றிங்
கனைத்துயிரும்புரந்தளுஞ்சித்திபுத்திதேவியர்த்தாளகத்துட்சேர்ப்பாம்.
பரசிவ வணக்கம்
அனாசுத்தவறிவொளியபூரணானந்தமாயருளாலிங்கு
வினோதவகையகிலாண்டமைந்தொழிற்பாற்படுத்தியருவித்தாய்மேலாந்
தனாதிச்சைவலியாலேபசுபதியாயம்மையப்பன்றானேயாகி
மனாதியன்றவளவாதாங்காருணியப்பெருந்தகையைவழுத்திவாழ்வாம்.
பராசக்தி வணக்கம்.
உலகெவைக்குஞ்செனனியாயீன்றருளியவற்று
ளுயிர்த்திரட்கோர்பரிபாகத்திருச்செவிலியாகிப்
பலவறனும்புரிந்துபசுபதியினொருவாம
பாகத்துமரகதமும்பளிங்குமெனச்செவ்வி
நிலவநிலைபெயராதயோகியர்தம்யோக
நிட்டானுபூதியதாய்நிகமாகமாதிக்
கலைகடுதித்திடவிளங்குமமலையிருசரண
கமலமென்னெஞ்சிடையலர்ந்துதினங்கமழுமாதோ.
சுப்பிரமணியர் வணக்கம்
பிரமைதவிர்த்திடமஹே சரிதயத்திற்றேன்றிப்
பெருகருளிற்பின்னர்பெருந்தகைக்கணுதித்தறிஞர்
கருதுகரிமுகனாகிச்சண்முகனாய்க்காத்துக்
கருணையாசனனாகிப்பரைவளர்க்கவமரர்
சிரமைதவிர்த்திடஞானசத்திதரனாய்மேற்
றெளியிச்சைகிரியைபிரியாப்பிரியனாகி
விரதருளக்குகையமர்ந்தசிவகுருவாயென்றும்
வேண்டினோர்க்கருள்புரிந்துவருமயிலின்மிசையே
நால்வர் வணக்கம்
தொண்டர்குழாங்களிசிறப்பச்சுருதிமுதற்கலைகளெலாந்துதிப்பச்சீர்சா
லண்டர்பிரான்றிருச்செவிக்கற்புதமுறச்செந்தமிழ்ப்பதிகவமுதந்தூவுங்
கொண்டலெனுங்காழியனாராமூரராரூரளங்குழைந்து
கண்டமன்றிற்சுடரினென்றும்வாதவூரடிகள்பதங்கருத்துள்வைப்பாம்.
நூலாசிரியர்கள் வணக்கம்
ஆதிசிவனிடத்துணர்ந்தவயனாற்றேர்வியாதமுனியன்பினோடு
மோதுகணாபத்தியமான்மியமுலகோருய்யவாரியத்துரைத்த
மாதவபார்க்கவர்கமலமலரடியுமற்றதைவண்டமிழாற்சொன்ன
தீதிலாவடுதுறையெங்கச்சியப்பமுனிபதமுஞ்சென்னிசேர்ப்பாம்.
நூற்பயன்
உலகினருந்தவத்தாலும்பல்விரதத்தாலுநெடிதுள்ளநொந்து
நலனடையப்பெறுவதெவனோனாமேயின்பமெலாநாடினோர்க்கப்
பலனெளிதிற்றருமன்றோமேனாளிற்சூதமுனிபனவர்க்கோது
மலகில்புகழ்விநாகமான்மியந்தனிலோர்செயுணாவினறையத்தானே.
அவையடக்கம்
பொருவில்விநாயகர்கீதைக்கேள்வியினான்மூவர்கதிப்புக்காரென்னப்
பெருமொழிகேட்டுயப்போகுமாசையினாற்சிலசுருக்கிப்பேசினேனான்
சொரிதருபாலொடுமயநீர்போலுமுதனூலோடுதொகுமிந்தாலும்
அருளுடையபெரியர்கொள்வர்முதனோக்கிப்பிழையெண்ணாதாக்கமோர்ந்தே.