விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்தொன்றாவது - மன்மதனுபாசித்தது தெளித்தமெய்யிறைறுதற்றீக்கோட்படூஉவனங்காமதன்சீர்மெய்பெறவே தேவதேவற்போற்ற

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்தொன்றாவது - மன்மதனுபாசித்தது

தெளித்தமெய்யிறைறுதற்றீக்கோட்படூஉவனங்காமதன்சீர்மெய்பெறவே

தேவதேவற்போற்றவவரருள்கணேசமனுசிந்தித்துநோற்கையிலுளங்

களித்திடத்தோன்றிமால்கண்ணணாய்வருநாள்கவின்றநின்முன்னைமேனி

கைபெறுதியென்றருளியெந்தைகணபதிசெலக்காமன்மயூரத்தலத்

தொளித்தழைபளிக்காலயத்தொடுமகோற்கருடயர்வடிவுகண்டருச்சித்

தோவாததொண்டுபுரிநாளினின்மனமிக்குவப்பவெம்மானருளினால்

அளித்தொகுதிசேர்மலர்க்கணையேந்துமுன்னையுருவங்ஙனேபெற்றுநடுவ

ணானாதபல்லுயிர்க்கனுராகபோகங்களாக்கரசுமூக்கினானே

இதன் சரித்திர சங்கிரகம்

திருமால் மருகியாகிய இரதி தேவியானவள் நுதல்விழியாற்சாம்பரான தனது நாயகனைக்குறித்துப் பிரலாபித்தபின் தனக்குப் புகலிடம்பிறிதென்றி சரணாகவடைந்து - சாஷ்டாங்கமாகப் பணிந்தெழுந்து விழிகளில் நீர்த்தாரையைப் பெருக்கியோர் புறமாகநின்று பலவாகத்துதித்து மாங்கல்யபிச்சையருள வேண்டுமெனவிரந்து கேட்க பெருமானும் திருவுளம் வைத்தவனை யங்ஙனெழுப்பி அவளுக்கு மாத்திர முருவமாகவு மற்றையர்க்கெல்லா மருவமாகவு மருள்செய்யப்பெற்ற சமயத்தில் அவ்வனங்கன் அக்கண்ணுதலைப்பணிந்து துதித்து யாவரிடத்துக் தான் முன் போலவுருவாய் விளங்கும்படி அருள வேண்டுமென்று பிரார்த்தித்ததற்கிரங்கி யவ்வகை விநாயக மூர்த்தியாற் பெறுகென்று அவரது ஏகாக்ஷரமனுவை முறைமையுடனுபதேசிக்கப் பெற்று மயூரத்தலத்தையடைந்து ஆயிரவருடமளவுமதை ஜபித்துத் தவம் புரிய அவண்ஐங்சரக்கடவுள் பிரசன்னமாகலும் தரிசித்துப்பணிந்து நின்று தனதெண்ணத்தை விண்ணப்பஞ்செய்து கொள்ள ஸ்வாமிகளுமவனை நோக்கி விஷ்ணுவானவர் கண்ணனாகவவதரிக்குங்காலத்தில் நீயவ்வணமேயுருக்கொண்டுதிப்பாயென்று அனுக்கிரகிக்கப்பெற்ற பின்பு அவ்விடத்தில் பளிங்கினாலாலயஞ்சமைத்து மகோற்கட விநாயக என்றோர் மூர்த்தத்தை ஸ்தாபித்து இடைவிடாமல் பக்தி பூர்வகனாய்பூஜித்து வருகையில் அக்கடவுட்பெருங் கருணையால் அந்த சன்மத்திற்றானே இடையில் நின்ற நெடுங்காலமளவு முன் போலவே சர்வலோகங்களிலும் நிஜவுருவுடன் தனதாக்கினையைச் செலுத்தி இரதிதேவியுடனினிது வாழ்ந்திருந்தனன்.

***********************************************************************