விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்திரண்டாவது- உருக்குமணிதேவியுபாசித்தது இரிதலறவுலகோம்பமால்கண்ணணாயநாஎழில்சித்தசன்றோன்றலா யினிதுதித

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்திரண்டாவது- உருக்குமணிதேவியுபாசித்தது

இரிதலறவுலகோம்பமால்கண்ணணாயநாஎழில்சித்தசன்றோன்றலா

யினிதுதித்தருமையின்வளர்ந்துபிரத்தியுமனெனவெவனனாயோங்குநாளில்

விரிவிபுதருலகினுறுமிரதியைச்சம்பரன்விழைவிற்கவர்ந்துசெல்லும்

வேலையவணழுவிவீழ்வேலையின்விழுங்கினமீனையத்தகுவனிடையே

தரவலைஞர்சேதிக்கமவினிற்கண்டவன்றான்வளர்ப்பதுநாரதன்

சாற்றவம்மாற்புதல்வனேகிநெடுநாளவனுடன்சமர்புரிந்துநிற்க

அரியதாயாமுருக்குமணிசேய்க்காணாதலந்தேசதுர்த்திநோன்பை

யாற்றவாறாநாளிலவுணைனைச்செற்றடைந்தானமாதொடுபதியினே

இதன் சரித்திர சங்கிரகம்

திருமால் கண்ணனாகவும் மஹாலக்ஷ்மி ருக்குமணிதேவியாகவும் அவதாரஞ்செய்த காலத்தில் பிரத்தியுமன்னனெனப்பெயர் கொண்டு சுந்தரவுருவத்துடன் மன்மதன் அவர்களுக்குப் புத்திரனாகவுதித்து சகல சாஸ்திரங்களையும் ஆராயந்துணர்ந்து மஹா பராக்கிரமனென் யாவரும் புகழும்படி யெனவனப்பருவனாயிருக்குங்காலத்தில் இரதிதேவி தேவருலகில் தனித்திருக்கின்ற செய்தியறிந்து சம்பரனெனும் அசுரன் போயெடுத்து வருகையில் அவள்நழுவிக் கடலில் வீழ்தலும் அக்கடலிலோர் பெரிய மச்சமானது அவளை விழுங்கி விட பின்பவனக்கடலிறங்கித் தன்திறத்திலான மட்டும் அதனைக் கலக்கிச் சோதித்து எவ்விடத்துங்காணாதவனாகிப் பதியைச் சேர்ந்த சின்னாள்கழித்த பின்னர் - அங்கெடுத்துவிழுங்கின மச்சத்தைப் பிடித்தவலைஞர்கள் அவ்வசுரனுக்குக்கொடுக்க அவனம்மீனத்தை சேதிக்கும் போது அதன் வயிற்றிலோர் பெண்மக விருக்கக்கண்டு அதை தனக்கோர் குமாரத்தியாக்ப்பாராட்டி

வளர்த்துவருகின்றானென நாரதரால் சொல்லக்கேட்டு அப்பிரத்தியுமன் அவனிடஞ் சென்றெதிர்த்து வெகுநாள்வரையிற் போர்புரிந்து கொண்டிருக்கையில் குமாரன் வரக்காணாமல் நெடிதுவருந்தி நின்றதாயாகிய உருக்குமணிதேவி யங்குவந்தநாரதராற் பெற்ற கணேசமந்திரத்தை விநாயக சதுர்த்தி தினத்தில் விரதானுஷ்டையாய் விதியுடன் ஜபித்து வருகையில் ஆறாவது தினத்தில் அவ்விரத பலத்தால் அப்பிரத்தியுமன் அச்சம்பராசுரனைச் சங்கரித்து இரதிதேவியுடன் பதியில் வந்து சேர்ந்தனன்.

***********************************************************************