விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்திமூன்றாவது- பிரத்தியுமனன்உபாசித்தது கச்சையணிவாணாசுரண்புதல்வியானவுஷைகனவினிற்பேரழகனாய்க் கண்டேவு

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்திமூன்றாவது- பிரத்தியுமனன்உபாசித்தது

கச்சையணிவாணாசுரண்புதல்வியானவுஷைகனவினிற்பேரழகனாய்க்

கண்டேவுபாங்கியானித்திரையடுய்த்தவக்காளையாமனிருத்தனோ

டிச்சைமிகவேயவள்கரவிற்புணர்ந்திடவிருஞ்சூலதுற்றதோர்ந்த

விகலவுணனவனைச்சிறைப்படுத்திடநேடியீன்றவப்பிரத்தியுமனன்

மெச்சுமூவுலகெங்கணுங்காண்கிலாதுளமெலிந்தபின்றுதிசதுர்த்தி

விரதமனுட்டித்த்துவருநாட்கணேசரருண்மேவவக்கண்ணனார்சென்

றச்சமறுவாணனைப்பொருதுவெந்கண்டபின்பனிருத்தனம்மங்கையோ

டணிநகரடைந்தின்பமளவளாய்வாழ்ந்தனனருந்தவத்தீரறிமினே

இதன் சரித்திர சங்கிரகம்

பிரத்தியுமனன் குமாரனான அனிருத்தனது காளைப்பருவத்தினையும் பேரழகினையும் கனவிற் கண்ட வாணாசுரன் குமாரியாகிய உஷையென்பவள் சித்திர

ரேகையெனும் தனதுயிர்ப்பாங்கியைக் கொண்டு அவன் நித்திரை செய்யுஞ் சமயத்தில் மாயையாற்றருவித்துச் சிலநாள் இரகசியமாகத் தன்னிருப்பிடத்தில் வைத்துக்கொண்டு அவனுடன் சரச்சல்லாபமாகக் கூடிக் கலந்திருக்கையில் அவளுக்குச் சூலுண்டானதுணர்ந்து அவ்வசுரன் அவ்வனிருத்தனை யருஞ் சிறையில் வைத்திட்டிருக்கையில் எங்குந் தேடிக்காணாமல் பிதாவான பிரத்தியுமனன் அளவற்ற துக்கசாகரத்துணமூழ்கி வருந்துகையில் அதனையவன் தாயாகிய உருக்குமணி தேவிகண்டு என்னருமைப் புத்திரனை c முன்னர் சம்பராசுரனோடு யுத்தஞ் செய்யச் சென்ற போது நெடுநாள் வராமற்றாழ்ந்த தினிமித்தம் யான்மிக்க வருத்தத்தையடைந்து c விரைவில் வந்து சேருமாறு கணேசமூர்த்தி சதுர்த்தியை அனுஷ்ட்டித்துன்னை வரப்பெற்றேனெனச் சொல்லக் கேட்டவனுமவ் விநாயகக்கடவுள் விரதத்தை முறையுடன் அனுஷ்டிக்க அவ்விரதநாண்முடியு முன்னமதன் பலவிசேடத்தால் நாரதராலது செய்திணர்ந்த பிதாமகனான ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி ஆக்கிரகித்துச் சென்று சகலதேயத்தரசர்களுக் தன்னைப் பணியும் படி அக்னி மதிலைக்கொண்டரசியற்றுகின்ற அவ்வவுணனோடெதிர்த்து அனேநாள்வரையிற் பிரபலயுத்தஞ் செய்துவென்று அச்சிறுவனைச் சிறையினின்றும் விடுவிக்க அவன் அக்கன்னிகையுடன் தன்னகரிற்சேர்ந்து சுகமாய் வாழ்ந்தனன்.

***********************************************************************