விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்தெட்டாவது- அங்காரகனுபாசித்தது இலையமில்பரத்வாசனருமைதைநதிக்கரையினெய்துழியர்மைவிழியினா ளெழின்மதிமுகங

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்தெட்டாவது- அங்காரகனுபாசித்தது

இலையமில்பரத்வாசனருமைதைநதிக்கரையினெய்துழியர்மைவிழியினா

ளெழின்மதிமுகங்குசங்கண்கவரவிரகமேலிட்டவன்விடுசுக்கிலம்

நிலையுறநிலத்தினதுமகவாகவேகண்டநிலமகள்வளர்த்தெடுத்தந்

நிருமலமுனிக்குநல்கிடவவருமன்புமிகநேர்ந்துபலகலைகளுதவித்

தலைமைபெறுமேரம்பன்மனுவளிக்கப்பூசுதனுமதைச்சார்ந்துநோற்றுத்

தகைகொளங்காரகப்பெயரொடுங்கோணிலைதனைப்பெற்றுமேற்றனாமத்

துலவுவாரந்தொகுசதுர்த்தியிலிறைஞ்சுநர்க்குறுசங்கடங்கடவிர

வும்பன்முகவண்ணல்பாலவ்வரமுமேற்றமர்ந்தான்விண்டலத்துவந்தே

இதன் சரித்திர சங்கிரகம்

விநாயகபத்தரானபரத்துவாசரிஷியானவர் நருமதை நதி தீரத்தில் ஸ்நானஞ் செய்யச் சென்ற போது அவனோர் மிகவுஞ் சுந்தரமுள்ள ஸ்திரீயைப் பார்த்த காலத்தில் மனநாட்டங் கொண்டவுடனேகலிதமாகிப்பூமியிற் சிதறின வீரிய மோர் சீறுமகவாகலும் அங்கதைக்கண்ட பூமிதேவி யெடுத்து வளர்த்து அம்முனிவரிடஞ் சேர்த்த பின்னர் அவராலன் பாக வளர்க்கப்பட்டங்காரகனெனநாமகரணஞ்சாற்றி உபநயனாதிகளைச் செய்து வேதாகமங்களைக் கற்பித்து கணேச மந்திரத்தையு மனுட்டிக்கு முறைமையோடுபதேசித்தானவுடன் அச்சிறுவன் ஆயிரவருடவரையிற்றவஞ் செய்கையில் அதற்கிரங்கியயானைவதனமும்-துதிக்கையும் தசபுஜங்களுடன் பிரசன்னமான கணேசமூர்த்தியால் தேவர்களடு கூடியமுதுண்ணத்தக்கவுறவும் கோள்களோடொன்றாகவதியும் பேறும், மங்களனென்னு நாமமும், அந்நாமவாரஞ் சேர்ந்து அபரபக்ஷத்தில் வருகின்ற சதுர்த்தி ஏனைய சதுர்த்திகளை விட சிறந்ததாயனுட்டிப் போர்க்கு சர்வ சங்கடகங்களும் நீங்கவும், அவ்விரத தினம் சங்கட சதுர்த்தியெனும் பெயராய் வழங்கவும், அனுக்கிரகிக்கப் பெற்ற பின்னர் அந்நில மகன் ஆலயஞ்சமைத்து சிந்தாமணி விநாயக என்றோர் மூர்த்தப் பிரதிட்டை செய்து பூசித்த வருநாளில் அக்கடவுட் பேரருளால் வந்த விமானத்தில் ஆரோகணித்து உம்பருலகஞ் சேர்ந்தமுதுண்டு நவக்கிரகங்களிலொருவனாகப் பெற்றனன். அவ்வங்காரகனம் மூர்த்தியை அவந்திமாநகர மேற்புறத்தில் பிரதிட்டை செய்து பூஜித்து காமதமென்னுந் தலமாயவிடத்தில் அது முதல் யோகிகள் சித்தர்கள் முதலாயினோரும் வந்துபாசிக்க விருக்கின்றது.

***********************************************************************