விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பத்தொன்றாவது- தூர்வையர்ச்சனை இலிகுசத்தியறிலோத்தமைகுசத்தெழினாடுமியமனெகிழ்விடுவீரிய மிந்நிலத்திடைவி

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பத்தொன்றாவது- தூர்வையர்ச்சனை

இலிகுசத்தியறிலோத்தமைகுசத்தெழினாடுமியமனெகிழ்விடுவீரிய

மிந்நிலத்திடைவிழுந்தளவிலனலாசுரனெனத்தோன்றிமண்விண்ணுயிர்

நலிதரவலைப்பவிண்டாதிசுரரஞ்சியந்நாட்கணாதிபனையேத்த

நற்பிரமசாரியாய்வந்தபயநல்கிடுபுநண்ணுமவ்வவுணன்றனை

யலகிலாதோங்கிபவுருக்கொடோர்கவளமாயாங்கெடுத்துண்ணவனல

மண்டத்துயிர்த்தொகைகளாற்றாதுமெலிதல்கண்டரனாதியோராற்றிடும்

பலவாமிதோபசாரத்தினுந்தணியாதுபழமறையளந்தமுனிவர்

பத்திசெய்தறுகின்முற்றிடுமர்ச்சனைக்கெந்தைபாலசந்திரனானதே

இதன் சரித்திர சங்கிரகம்

யமதருமராஜன் தனது கொலுச்சபையில் தேவர் முனிவர் கணஞ்சூழ வீற்றிருக்கையில், நாட்டியஞ்செய்து கொண்டிருந்த திலோத்தமை மேல் வஸ்திரம் நழுவி வெளிப்பட்ட அவள் கொங்கையிலா வண்ணியத்தைக் கண்டவுடன் அக்காலனுக்கு மனஞ்சலனமாகி அச்சபையினின்று நீங்கி அந்தப்புரத்தை நோக்கிச் செல்கையில் மேலிட்ட காமத்தால் வெளிப்பட்ட வீரியம் பூமியில் வீழ்ந்து வடவானலத்திற்கொப்பான கொடுமையோடு கலப்பையைப் போன்ற வெளுத்த கோரைப்பற்களும் நீண்டு முறுக்கி சிவந்திருக்கின்ற முகமயிர்களும் சிவந்த கண்களும் யாவருங்கண்டஞ்சத்தக்க அகோர சொரூபத்துடன் அனலாசுரனென்றுதித்து மண்ணுலகுள்ள ஜீவர்களையெல்லாம் புஜித்து விண்ணுலகையும் அழிக்க நெருங்கையில் அஃதுணர்ந்து மனந்தளர்ந்த தேவேந்திரன் தேவகணங்களுடன் திருமாலிடஞ்சார்ந்து முறையிட்ட தன் மேல் அப்பரந்தாமன் கணேசமூர்த்தியை தியானித்து பல முறை துதிசெய்ய அதுபோதில் சர்வ ஜீவகோடிகட்கும் புகலிடமாயுக் தாரகப்பிரமமாகவும் விளங்குமக்கடவுள் பிராமணப்பிரமசாரியாய் பிரத்தியக்ஷமாகி அவர்கட் கபயாஸ்தந் தந்து அவண் வந்த அவ்வசுரனை நிஜவுருவங்கொண்டு தமது கரத்திலடங்கும் படியாக வெடுத்தோர்கவளமாய் விழுங்கிய கட்டினுளடக்க அவ்வெப்பம் தேவர்கள் முதலாக சராசரங்களினும் பீடிக்கப்பட்டு மிகவுந் துயருழந்தாற்றகிலாராய் நிற்கையில், அப்பகவன் திவ்வியமேனி குளிரத்தக்கதாக சந்திரன் அமுததாரைகளால் அபிஷேகித்தும், பிரமன் வேண்டுகையாற் சித்தி புத்திகளுந்தமது குளிர்ந்தவவயவங்களை யவர்திருமேனியி லொற்றியும், மஹாவிஷ்ணுவும் தாமரை மலர்களையேந்திநிற்க தாமேவாங்கி யற்றியும்,

வருணன் சீதள நீரைக் கொண்டபிஷேகித்தும், சிவபிரான் தமது திருமேனியிலணிந்த வாதிசேடனையெடுத்து தரித்தும், அவ்வெப்பம் நீங்காதிருக்கையில் அதுகண்ட நாற்பத்தெண்ணாயிர முனிவர்கள் தனித்தனியாக இருபத்தோரறுகுகளைக்கொண்டு சிரசுமுதற் பாதமளவுஞ்சார்ந்த அதனால் அவ்வனல் குளிரிந்த தன் மேல் விண்டு முதலியோரடைந்திருந்த வெப்பங்களும் நீங்கியாவரும் வேதாகமங்களால் துதித்தார்கள், தேவர்கள் புஷ்பவருடஞ்சொரிந்தார்கள், திரிலோகங்களுந்தழைத்து மகிழ்ச்சியடைந்தன இப்பால் விநாயகமூர்த்தி அம்முனிவர்களைப்பார்த்து அன்பர்களே நமது திருமேனியிலிருந்த வெப்பம் நீங்களர்ச்சித்த அறுகினால் நீங்கினபடியால் எமக்குச் செய்யப்பட்ட உபசாரங்கள் பலவாயினும் அறுகுகொண்டு பூஜிப்பேத முக்கியபிரீதியா மெனத் திருவாய்வத்தைக் கரந்திட்டனர் அப்போது அவ்விடத்தில் தேவர் ரிஷிகள் முதலானவர்கள் கூடி ஓராலயஞ்சமைத்து அதிற்கணேசமூர்த்தப் பிரதிஷ்டை செய்து காலன் வீர்யத்துதித்த அனலாசுரனை விழுங்கின காரணத்தால் காலானப்பிரசம என்றும், அக்கினியுமஞ்சத்தக்க வசுரனை விழுங்கி சந்திரனையப்ப வெல்லாவுயிர்கட்குங் குளிர்ச்சி தந்தமையால் பாலசந்திர என்றும், திருநாமமிட்டு அபிஷேக முடித்து அறுகினைச்சாத்தி அது முதல் அவ்வறுகினையேசிரேஷ்டமாகக் கொண்டு அவர்களெல்லோரும் அர்ச்சித்து வந்தனர்.

***********************************************************************