விநாயக புராணம்
4. விநாயகமான்ம்யஸாரம்
முப்பத்திரண்டாவது- ஜனகனுபாசித்தது
கிஞ்சறிவினொருஜனகணான்பரமெனச்சொலக்கேட்டநாரதனுமேதிக்
கேடிலேரம்பர்சனதியின்மகதியைத்தடவிகீர்த்தித்தபின்விநயமாய்
விஞ்சரவரசன்கருத்தோதலுந்தொழுநோய்மிகுஞ்சிறியவேதியோனாய்
மேவிவெம்பசிதணியவமுதுகேட்டளவின்றிமிசையவவன்மாட்டாமையா
யஞ்சவேநீகொலோபிரமமென்றேசிமீண்டயன்மனையமர்ந்துபலவா
மற்புதங்காட்டவவனீண்டிகழறாழ்ந்துவேண்டற்கருள்சுரந்தவமலன்
பஞ்சக்கரத்தடைவின்முப்பொருட்டிறமும்பகர்ந்திடவுனர்ந்துமிதுலைப்
பதிபுரந்தொருஜீவன்முத்தனாய்வாழ்ந்தசீர்ப்பகர்வதெவனோவுலகினே
இதன் சரித்திர சங்கிரகம்
மிதுலாபுரியில் ஜனகராஜன் தானே பரமென்னும் எண்ணமுடையவனா அரசியற்று நாளில், அங்கு நாரத முனிவர் வர அவர்க்கு வழிபாடு செய்யாதிருந்தானாக, அதற்கவர் உனது நன்னடைக்கான செல்வம் கடவுள் அளித்தருள்வரென, கடவுள்தானல்லது வேறோதெனச்சொல்ல, அது கேட்ட நாரத முனிவரும் கடவுளுண்டென்பதை c நாணங்கொள்ள உன்னெதிரிற்றானே காண்பாயென்று அவணீங்கி கவுண்டின்யமுனிவர் ஆச்சிரமஞ் சேர்ந்து அவர் பூஜிக்கின்ற கணேசர் சன்னிதியடைந்து, அக்கடவுட்டிருவுளங்களிகூர நரம்புகளைத் தடவி யாழிசைகூட்டிப்பாடித்துதித்த பின், ஜனகன். தேவரீர் பரத்துவமாவது நினையாமல், அகம்பிரமமென்று மதித்து பெரியோர்களை மதியாதிருக்கின்றானென விண்ணப்பஞ்செய்து சென்றனர், பின்னர் கணேசரும் தொழுநோய் கொண்ட வோரந்தணராக அவனிடஞ் சென்று பசிதணியவமுதுபடைக்கவேண்டுமென, அவ்வரசனும் அவனாற்கூடிய வுணவுகளைப்படைத்தும் சற்றும் பசிதணிந்திலராசக்கூற, அது கேட்டு அக்குறைவையினி நீக்கத் தக்கவரிடத் தெழுந்தருளலாமென்றரசன்கூற, பசியை நீக்க வல்லபமில்லாத நீயோ பிரமமென்று கோபித்து அவ்விடம் விட்டு நீங்கிப்போனவுடன் ஜனகராஜன் பலவற்புதங்கள் நடக்கக் கண்டு ஆச்சரியமடைந்து, வந்தவர், கடவுளாமென நிச்சயித்து அக்கணமே விரைதெழுந்து போய் திரிசிரனெனும் பிராமணன் கிரகத்திலிருக்கக்கண்டு சாஷ்டாங்கமாகப்பணிந்தெழுந்து எனதறியாமையால் அகம்பிரமமென்று கர்வப்பட்டகுற்றத்தை க்ஷமித்து, இனிதேவரீர் நின்மலஞானத்தையடியேன் தெளியுமாறனுக் கிரகிக்கவேண்டுமெனப் பிரார்த்திக்க கணேசர் அவன் சித்தபரிபாகத்தையறிந்து, மீட்டும் ஜெனனமெடாத விதமாய் ஆகம விதிப்படி தீ¬க்ஷ செய்து, ஞானபோதத்தை சாங்கியமா அவனுக்குபதேசித்தருளலும், ஜனகராஜன் அவ்வுபதேசமார்க்கத்தினின்று நிஷ்டைகூடி யாவருமெஞ்ஞானியென்று சொல்லும் படியாக உலகில் நெடுங்காலவரையில் அரசாட்சியுஞ் செய்து கொண்டு ஜீவன் முக்தனாயிருந்தனன்.
***********************************************************************