விநாயக புராணம்
4. விநாயகமான்ம்யஸாரம்
முப்பத்துமூன்றாவது- தூர்வையாசகம்
தளர்வறத்திரிசிரன்மனையிலான்மார்த்தமாய்த்தமதுமூர்த்தத்தைநிறுவி
சந்தம்பூசித்துவந்தமெய்யன்பினாற்றயைமிகுந்திடுகணேசன்
கிளர்விப்ரனாய்வந்துபசிதணித்தியெனக்கெழூஉம்பத்தியோடமறையோன்
கீர்த்தித்துநிற்கையில்விரோசனையெனூஉமவன்கேண்மைமிகுதேவியிற்றை
யுளபடிக்கெங்குந்திரிந்துங்கிடைத்ததொன்றின்றெனினுமெந்தாயிவ
ணுதயமாராதித்துமிக்கதோரறுகுண்டெனக்கொணர்ந்துதவவேற்றுப்
புளகிதத்தொடுகிருதகுளபாளிதத்தினப்புன்னுகர்ந்தளவில்செல்வம்
பூண்டுபின்பதமருவநிஜசொரூபனாகியப்புனிதர்கட்கருளினானால்
இதன் சரித்திர சங்கிரகம்
மிதுலாபுரியில் திரிசிரனென்னு ஓர் ஏழைப் பிராமணன் கணபதி மூர்த்தத்தை யாத்மார்த்தமாக வைத்துப் பூஜித்திருக்கு நாளில், அவன் வீட்டிற்குக் கணேசர் தொழுநோய்க் கொண்ட ஒர் அந்தணராகவர, கண்ட அவ்வேதியன் எதிர்கொண்டு வந்து சாஷ்டாங்கமாகப் பணிந்தெழுந்து உபசரித்து நிற்க, தாம் பசியாக வந்ததாய்க்கூறலும், அதுகேட்டவ் வந்தணன்றேவியான விரோசனை யாசகஞ் செய்தும் இன்றைய தினமெங்கு மொன்றுங் கிடையாமலிருக்கின்றது, ஆயினுங் கணேச மூர்த்தியைப் பூஜித்து மீதியானவோரறுகுமாத்திரமிருக்கின்றதென்ன, அதுவே நமக்கு மேலானதென்றதன்மேல், அப்பிராமணோத்தமியன்புடனதைக் கொண்டுவந்தளிக்க, தமது திருக்கரத்தினால் வாங்கி வாய்மடுத்துமென்றுதின் றேப்பமிட்ட வெல்லையில், நிஜசொரூபத்துடன் அக்கடவுள் பிரத்தியக்ஷமாகி நிகரற்றபாக்கியங்களையும் தமது திருவடிப்பேறுமுண்டாக அவர்கட்கனுக்கிரகித்தனர்.
***********************************************************************