விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பத்தாறாவது-விண்டு, இரண்ணிய கசிபவனைச் சங்கரிக்க உபாசித்தது மாதவத்தவிரணியகசிபனிருதிணையானுமரணமில்லாதவிதமாய்

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பத்தாறாவது-விண்டு, இரண்ணிய கசிபவனைச் சங்கரிக்க உபாசித்தது

மாதவத்தவிரணியகசிபனிருதிணையானுமரணமில்லாதவிதமாய்

வரம்பெற்றவிறுமாப்பினான்மறையழுக்கம்வழீஇக்கோனடாஅத்துநாளிற்

பூதலத்தவன்மாளவன்னிநீழவில்விண்டுபுகர்முகத்திறையநிறீஇப்

பூஜைசெய்தவனருளினிரணியாக்கனைமுன்பொடித்தசீரதினும்விஞ்ச

வோதெழின்மாலைநேரத்தெழுத்தூணினிடையுக்ரமிகுநரசிங்கமா

யுதித்தவசுரன்றனைப்பற்றிவாயிற்கண்டிமீதிட்டொளிர்க்கையுகி

ரேதியாற்கீறிப்பிளந்துதிரமோர்திவலையேனும்வெளிர்க்கையுகி

லிகதுடன்வாயாலுறிந்துமாய்த்தனனமரரேத்திமலர்மழைபொழியவே

இதன் சரித்திர சங்கிரகம்

காசிபமுனிவர்ப்பத்தினியரிருவரில் அதிதி என்பவள், தனது புத்திரளாகிய இந்திரன் முதலிய தேவர்கட்குதவியாக விஷ்ணு தனக்குப் புத்திரனாய் வரவேண்டுமென்று அரிய தவங்களைச் செய்து கொண்டிருக்கையில், அதனையவள் மாற்றாளான திதியென்பவளறிந்து திரிலோகங்களையுங் காக்கவல்லதிறமும் தேவர்களினுஞ் சிறந்த மேன்மையு முடைய புத்திரர்களைத்தானும் பெறுதற்கு யோசித்து அந்திவேளையில் தனது நாதனைமருவி இரண்யகசிபன் இரண்யாக்கனென விரண்டு புத்திரர்களைப் பெற, அவரில் இரணியகசிபன் தபஞ்செய்து தனக்கு மரணமுண்டாகாதிருத்தன் முதலிய வரங்களைப் பெற்று வேதவொழுக்கதினைக் கடந்து திரிலோகங்களையும் அரசாண்டிருக்கு நாளில் அவ்வவுணனைச் சங்கரிக்கவெண்ணங்கொண்ட விஷ்ணுவானவர் பூமியின் கணெழுந்தருளியோர் வன்னி விருக்ஷத்தடியில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜனை புரிந்து சடாக்ஷர மந்திரத்தை ஜபித்துத் தவஞ் செய்து வருகையில் கணேசமூர்த்தி பிரத்தியக்ஷமாக வந்தளித்த வரபலத்தால் (வராகாவதாரங்கொண்டு இரணியாக்ஷனை முன்னமிதித்துக் கொன்ற விதமே) இரணியகசிபனையும் நாரசிங்கமாய் நகப்படை கொண்டுகிழித்துச் சங்கரித்து உதிரபானஞ் செய்து தேவர்கள் குறைமுடித்தார்.

விண்டுவால் வன்னி விருக்ஷத்தடியில் பூஜிக்கப் பெற்றதாலும் அவ்விண்டுவுக்கு வரங்களை யளித்தமையானும் விண்டு விநாயகர் வன்னி விநாயகரெனவும் வழங்குகின்றன.

மேற்கூறின இரணியகசிபன் இரண்யாக்ஷதன் இவாள்சம்மாரம் முன்னடைந்து பின்னெனவும் பின்னடந்தது முன்னெனவுமாக சிலதேச இதிகாசங்களில் வித்தியாசமாகக் கூறப்பட்டிருப்பது-கற்ப பேதத்தால் வந்தது.

***********************************************************************