விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பத்தொன்பதாவது- வன்னி-மந்தார-வுற்பத்தி பிராமணர்களானவவுரவசெனனகப்பெரியர்பேசுமகள்சீடனென்னப் பேர்கொள்சமி

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பத்தொன்பதாவது- வன்னி-மந்தார-வுற்பத்தி

பிராமணர்களானவவுரவசெனனகப்பெரியர்பேசுமகள்சீடனென்னப்

பேர்கொள்சமிமந்தாரனெனுமெவனவதுராள்பெருவனத்தேகவெதிரே

வராநின்றபுருசுண்டிகரதொந்திநோக்கியேவறுநகைசெயச்சூளினால்

வன்னிமந்தாரமரமாகவவர்கட்குரியமாதவர்கணெடிதுநோற்றுப் பராவவருள்கூர்ந்தைங்கரப்பிரானவர்முனம்பரிவினிற்பிரசன்னமாய்ப்

பல்சிறப்போடுமத்தம்பதிகளம்மரப்பரிசாயிருந்தெய்திட

விராவற்றின்றழைநன்மலர்கொடர்ச்சிப்பவர்வினைத்தொடரெலாந்தவிர்த்து

வேண்டுவரமருள்வமென்றோதியந்நீழலின்விருப்பினொடமர்ந்தானரோ

இதன் சரித்திர சங்கிரகம்

நந்திகோத்திரமுனி புத்திரனாயும் சுமேதை என்பவள் நாதனுமான அவுரவமுனிவரடைய- ஏகபுத்திரியாகய சமியென்பவளை, தவுமியமுனிவர்ப் புத்திரனும் செனனகரிஷியனுமான மந்தாரனுக்கு- விவாஹஞ் செய்துக்கொடுத்த சின்னாட் பின்பு அவர் மனைவியை யழைத்துக் கொண்டு தன்பிதாவாச்சிரமத்தை நாடிவனத்திற் செல்கையில் துதிக்கையுடன் தொந்தி வயிற்றையு முடையவரா யெதிராகவந்த புருசுண்டி முனிவரை நோக்கி யிருவருமாக நகைக்க அம்முனிவர்கண்டு சினங்கொண்டு மந்தாரனை மந்தார விருக்ஷமும் சமியென்பவளை வன்னி விருக்ஷமுமாக சபிக்க - இவ்வரலாற்றையுணர்ந்த மந்தாரனுடைய குருவும் சமியின் பிதாவும் அத்தம்பதிகள் பொருட்டாகக் கணேசரை நோக்கி பன்னிரண்டு வருடந் தவஞ் செய்கையில் கணேசர் பிரத்தியக்ஷமாகி அவர்களம்மரமாகவே யிருந்து சகல சிறப்புகளை எய்துமாறு அப்பத்திரபுஷ்பங்கண்டு தம்மை வழிபடுவோர்க்குச் சகல துன்பங்களையும் நீக்கி இஷ்டகாமிய ஸித்திகளையளித்தருள்வாய்த் திருவாய்மலர்ந்து அவ்வுபயவிருக்ஷ நிழலின்கணெழுந்தருளினர்.

அதுமுதலறுகில்லாக் குறையை மந்தாரமலர் நிரப்புவதாலும் அறுகு மந்தாரமுமில்லார்க் குறையை வன்னிபத்திரம் நிரப்புவதாலும்-யாகாக்கினி அவ்வன்யில்சார்வதாவாசமாயிருத்தலானும் உலகின்கணுள்ள வெல்லாப் பத்திரங்களிலும் வன்னிப்பத்திரம் விசேடமெனச் சிவபிரானுமுடிமேற் சூட்டினர்-ஆதலால்-வன்னியென்று வாக்காலுரைத்தாலும்-அதை நினைத்தாலும் வலம் வந்தாலும்-தரிசித்தாலும்-தொழுதாலும்-தவம் தானத்திலும் சிறந்த பலனுண்டாகுமென்பதனால்-அறுகு, மந்தாரை, வன்னி, இம்மூன்றுமொன்றற்கொன்று குறையாத தன்மையனவாம்.

இஃது-வன்னிமான்மியத்தை வினவினகீர்த்தியெனும் அரசிக்கு-கிருச்சமத முனிவர் கட்டுரைத்தது.

**********************************************************************