விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பதாவது- வன்னியர்ச்சனைமகிமை இரதமிகுமறையோதுநான்முகன்முனோர்மகமெந்தையைங்கரனையேத்தா திமையவருடன்முயலவில

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பதாவது- வன்னியர்ச்சனைமகிமை

இரதமிகுமறையோதுநான்முகன்முனோர்மகமெந்தையைங்கரனையேத்தா

திமையவருடன்முயலவில்லத்திருத்துசாவித்ரியோர்ந்தவணீண்டிய

வரதவான்சுரரெலாநீர்வடிவமாகெனவழுத்துசூளான்வருந்த

வந்தவர்கடேவிமார்வக்ரதுண்டரைமிகவும்வாழ்த்திப்பனாணோற்றுமோர்

சரதமுறுபயனின்மையாய்மனந்தளர்வுறுந்ததிதன்னிலெழில்கொள்வன்னித்

தளமொடர்ச்சிக்கும்வகையசரீரிகூறவவர்தாமுமவ்வாறுஞற்றுக்

கரதலாமலகமெனவன்பருக்கருள்செயுங்கருணையானருளினவர்முன்

கவின்றவடிவுற்றபினுபாசித்தவேள்வியைக்கமலனுமுடித்தனனரோ.

இதன் சரித்திர சங்கிரகம்

பிரமன் தன்மனைவியரிருவருள் காயத்திரி தேவியை மாத்திரமழைத்துக் கொண்டு சையாத்திரிசாரலிற்சென்று வேள்வியைச் செய்கையில் வீட்டிலிருத்தநின்ற சாவித்திரி தேவியது செய்தியறிந்து யாகசலையை அடைந்து தனது நாயகன் தன்னை நீக்கி நடத்துங் காரியத்திற்கு எவ்வாறுடன் பட்டனரெனக் கோபித்து அவண்வந்திருந்த திருமால் இந்திரன் முதலானவர்களை ஜலவுருவாகச்சபிக்க அதுகண்டு பிரமன் வருந்தித்துதித்த சமயத்தில் பிரத்தியக்ஷமான சிவபெருமானால் அவ்விடையூறுகள் கணேசரை முதலில் வழிபடாமையால் நேர்ந்ததெனத் திருவுளம்பற்றத் தெளிந்து அவண்-தத்தங்காதலர்கட்குற்றவிபத்தை உணர்ந்து வந்து வருந்திநின்ற அத்தேவர்களின் தேவிமார்கள் மனந்தேறப் பிரமன் கூறின விதமே யவர்களும் கருநாடதேயத்தில் மந்தாரமர நிழலில் முன்னொரு காலத்தில் அரக்கர் குறும்பினை யடக்குமாறு விஷ்ணுவினால் ஸ்தாபித்து பூஜிக்கப்பட்டிருக்கும் வக்கிரதுண்ட விநாயகரை நெடுநாள் வரையில் துதித்தும் பூசித்தும் அருட்கிடனாகாமையாய்ப் பின்ன ராகாயத்தெழுந்த அசரீரிவாக்கின் பிரகாரம் வன்னிப்பத்திரத்தால் அர்ச்சித்தற்குவந்து பிரத்தியக்ஷமான கணேசர்ப் பேரருளால் அச்சாபம் நிவர்த்தியாகப்பட்டெழுந்த இந்திரன் முதலான தேவர்களியாவரும் மற்றோர்மந்தாரத்தடியில் ஏரம்பவிநாயகரெனப் பிரதிஷ்டை செய்து அவ்வன்னிப்பத்திரத்தாலர்ச்சித்து சகல நன்மைகளு மடைந்தனர். அது கண்டு பிரமனும் தனது வாசஸ்தானத்தில் மந்தாரவிருக்ஷத்தையுண்டாக்கியதனடியிற் கணேசரை ஸ்தாபித்து தனதுபய தேவியருடன் பன்னிரண்டு வருடவரையில் வன்னிப்பத்திரங் கொண்டு அர்ச்சித்து வந்த நலத்தால் மேற்படி யாகத்தை மீட்டுந் தொடங்கி நிறைவேற்றி மகிழ்ந்தனன்.

இதுவும்-கீர்த்தியெனும் இராஜபத்தினுக்கு கிருச்சமத முனிவர் திருவுளங்கூர்ந்துரைத்தது.

***********************************************************************