விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்திரண்டாவது- புலைச்சி-தெய்வவுருப்பெற்று-பரலோகமடைந்தது பதித்தொளிருமணிமகுடசித்திரநரேந்திரன்பாரிசுந்

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்திரண்டாவது- புலைச்சி-தெய்வவுருப்பெற்று-பரலோகமடைந்தது

பதித்தொளிருமணிமகுடசித்திரநரேந்திரன்பாரிசுந்தரிகணவனைப்

பாபுருடவிச்சையான்மாய்த்ததிபர்தண்டனைப்பட்டிறந்தெமபுரத்தும்

விதித்தநிரயத்துளாழ்ந்தப்பாற்புலைச்சியாய்மேதினியில்வந்தமுதலாய்

வேண்டியோர்புணியமுஞ்செய்திலாளாயும்வியன்சங்கடச்சதுர்த்தி

துதித்தநோன்பினர்நிவேதித்துண்டுவீசிலையிறுன்னுசேடந்நுகர்ந்தத்

தூயோர்பராவியகணேசநாமஞ்செவித்தோய்ந்துபுனிதையளாகியே

கதித்தப்பியவணின்றவிந்திரவிமானமவள்கண்ணோக்கின்விண்ணேறிடக்

கவின்றேவகணமுய்த்தவூர்திமேன்மகிழ்வாய்க்கணேசபதமுற்றனளரால்

இதன் சரித்திர சங்கிரகம்

பூர்வ ஜென்மத்தில் வங்காளதேயத்தரசனான சாரங்கதரன் குமாரியாகிய சுந்திரி என்பவள் தன்னியற்பெயர்க்கேற்பவனப்பிற் சிறந்து இசைவல்லபமு முடையவளாய் சித்திரனென்னும் இராஜனை மணந்து வாழுநாளில் புருஷன் காவற்குளடங்காமல் தன்னை விழைந்தோரையெல்லாம் தானும் விழைந்து கடை முறையில் பரபுருஷ விருப்பத்தால் தன் புருஷனை நித்திரையில் வாளான்மாய்த்து அரசனாக்கினையால் சேதிக்கப்பட்டிறந்து யமபுரத்திலும் அருநரகங்களையனுபவித்து மறு ஜனனத்தில் புலைச்சியாய்ப் பிறந்தது முதலோர் புண்ணியமுஞ் செய்தறியாளாயிருந்தும்-விநாயக சதுர்த்தி தினத்தில் அவ்விரத மனுஷ்டித்தவர்கள் கணேசருக்கு நிவேதித்தப் தார்த்தங்களில் தாங்கள் புசித்துத் தெருவிலெறிந்தவிலையிற் கிடைத்தசேடத்தைப் புஜித்தானவுடன் அவர்கள் துதி செயக் கேட்டு அவளும் கணபதியென்றவ் விசேஷதினத்தில் முக்காற் கூறின தன்மேல் விநாயகக்கடவுள் கிருபையால் தெய்வவுருப்பெற்று அவண் வந்த விமானத்தாரோ கணித்து அக்கடவுட் சாலோகபதவியையடைந்தனள்.

இங்ஙனம்-முன்னிட்டோர் திருட்டிதோஷத்தினால் கதிதப்பிநிலத்திறங்கின இந்திரவிமானம்-தெய்வவுருப்பெற்றுச் சென்ற மேற்படி புலைச்சி நோக்கால் உடனே ஆகாயமார்க்கத் தெழும்பிச் சென்றதென்பதனால்-விநாயக சதுர்த்திதினப் பெருமையையும், அதையனுஷ்டிக்கும் விரதசீலர்ப் பல விசேடத்தையும், உலகில் யாவராலும் அளவிட்டுரைத்தற்கரிதேயாம்.

***********************************************************************