விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்துமூன்றாவது- சூரசேனனுபாசித்தது தடக்கடுங்கதிதாழ்ந்திறங்கிடுவிமானமதுதனிலுற்றதேவேந்திரன் சதுர்த்த

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்துமூன்றாவது- சூரசேனனுபாசித்தது

தடக்கடுங்கதிதாழ்ந்திறங்கிடுவிமானமதுதனிலுற்றதேவேந்திரன்

சதுர்த்திநோன்பதன்மான்மியஞ்சொலக்கேட்டுமற்றதுதன்னையன்பினோற்றுழ்

படக்கணேசர்ப்பதங்குறுகுசற்சனர்தமைப்பார்த்துமகிழ்வுறுசகஸ்திர

பதியரசனெனுமெழிற்சூரசேனன்மாகமதியபரபக்கமதனிற்

றொடக்கமாய்க்குசவாரம்விரவுசங்கடசதுர்த்தியெனுநோன்பைச்சுகநயந்

துனவசிட்டாதினிமுனிவரர்கற்பித்தவாதுரிசறவனுட்டிக்குநாள்

இடர்த்தெறூஉமெம்பிரானருளுக்கிலக்கனாயெய்தியவிமானமிசையே

யினத்தர்பரிசனர்கள்சாலோகத்திருவேந்தெய்தினன்சாயுஜ்யமே

இதன் சரித்திர சங்கிரகம்

மத்தியதேயத்தைச் சார்ந்த சகத்திரபுரிக்கரசனான சூரசேனராஜன் புண்ணிய சீலையெனும் நாயகியுடன் வாழ்ந்து அரசு செய்து வருநாளில் விமானரூடனாய் பூலோகத்திற்கு வந்து மீளும் தேவந்திரனைச் சந்தித்து அவனால் கணேசரது விரத மகிமையினையும், மானிடர் தேவர் முதலாயதை அனுஷ்டித்துப் பேறடைந்த வரலாற்றினையும், சொல்லக் கேட்டவுடன்-கணேசருலகத்திற்குச் செல்லும் புண்ணியான் மாக்களையும் அவர்களாரோகணித்த விமானத்தையுந் தரிசித்து பிரம்மானந்தமாகி வசிஷ்ட முனிவர் முன்னிலையில் மாசிமாத அபரபக்ஷ அங்காரக வாரத்தில் நேர்ந்த சங்கடஹரசதுர்த்தி விரதத்தை வேதாகம முறைப்படி யன்பாயனுட்டித்துக் கணேசமூர்த்தியைத் தியானித்து பூஜித்து அது முதலாய் மாதமாதம் சதுர்த்திதோறுமிடைவிடாமலாராதித்து வருகையில்-அக்கடவுட் கிருபையால் வந்த விமானத்தில்-தன்பிரிவிற் காற்றாராய் வருந்தி நின்ற சுற்றத்தார்-நகரத்தார்-பரிசனங்களுடனாரோகணித்து அவர்களனை வரும் கணேசர்ச்சாலோகத்தமர-அரசன்சாயுச்சியபதத்தடைந்தனன்.

***********************************************************************