விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்தைந்தாவது- பரசிராமனுபாசித்தது நன்றாகவாச்ரமந்-தனிலிரேணுகைப்ராண-நாதனாஞ்சமதக்னியா னடத்தியவிருந்துண்

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்தைந்தாவது- பரசிராமனுபாசித்தது

நன்றாகவாச்ரமந்-தனிலிரேணுகைப்ராண-நாதனாஞ்சமதக்னியா

னடத்தியவிருந்துண்டமைத்தகடவுட்பசுவைநனிகவரவெணிமுயன்ற

தன்றாற்பர்யத்தமா-தவனுமதைபற்றிடுந்-தாக்குமுதவாமையின்மேற்

சலங்கொண்டகார்த்தவீரியனும்பினோர்நாட்டனித்தவத்தம்பதிகளைக்

கொன்றானதோர்ந்துவருமைந்தனுரிமைக்கடன்குறைவறுத்துக்கைலைவாழ்

குருவருண்மனுவினைமயூரேசமதனிற்குறித்துஞற்றிதவத்திற்

கன்றார்வமொடுகஜானனவரதனுதவுபடையாற்பரசிராமனாகி

யம்மன்னனைப்பொடித்தினமுஞ்சிரஞ்சீவியாயிருக்கின்றனனரோ

இதன் சரித்திர சங்கிரகம்

பொழில்களாலும் பொய்கைகளாலுஞ் சூழப்பட்டிருக்கின்றசையவரைச் சாரலில் - தவஞ் செய்து கொண்டிருந்த இரேணுகா தேவி நாதனான, ஜமதக்கினி முனிவர்க்கு (விஷ்ணு, பிருகுமுனி சாபத்தால்) இராமனெனும் நாமனாய் புத்திரனாகவுதித்து-தனது தாய் தந்தையரிடத்தில் இவனின்மிக்கா ரொருவருமில்லையென்று சொல்லும் படி மெய்யன் புவைத்து-சகல முனிவர்களுங் கொண்டாடத்தக்க அவர்கட்குப் பணி செய்திருக்கையில் - ஓர் நாளவன்-நைமிசாரண்யத்திற்குச் சென்று அங்குள்ள முனிவருடன் சின்னாள் வசித்திருக்கையில்-அரசர்களெல்லாங் கொண்டாடத்தக்க பராக்கிரமத்தோடு-உலக முழுவதையுந்ந தனது ஆக்கியா சக்கரத்துளடக்கி-அடங்காரையெல்லாம்-ஐஞ்நூறு பாணங்களால் விசும்பேறறி-இந்திரனங் கண்டு நடுங்கும் படியாகவும் கவிவாணர்களெல்லாம் புகழும் படியாகவும் அளவற்ற போகங்களோடும்-தேவர்களெல்லாம் ஏவல் கேழ்க்கும் படி அரசாண்டிருந்த-காத்தவீரியன்-பல படைகளோடும்-பரிஜனங்களோடுஞ் சென்று-வன வேட்டையாடி மீண்டு-ஜமதக்னி முனிவராச்சிமரத்திற்கு வரலும்-கண்ட அம்முனிவரவனுடன் சில நேரம் சம்பாஷணஞ் செய்திருந்த பின்-காமதேனு வைத்தியானித் தழைத்து அதைப் பூசித்து அவனுக்கும் அவனுடன் வந்தவர்கட்கும் அறுசுவையுண்டியளித்துபசரிக்கும் படி பிரார்த்திக்க-அக்காமதேனுவும் அவ்வாறு நடத்த, யாவருமுண்டுகளித்திருக்கும் சமயத்தில்-அவ்வரசன்-அக்காமதேனுவைக் கொண்டு போகுமாறு அம்முனிவரைக் கேட்டதற்க வரிணங்காமையின் மேல்-பலாற்காரமாயவ்கை முடிப்பதற்கதனை நெருங்கலும்-அதுகண்டத் தெய்வப்பசு-மிகவும் சினந்தெதிர்த்து-அவர்களை முறிந்தோடச் செய்து விட்டுச் சென்றது-பின்பது காரணமாகவே வயிரங்கொண்டிருந்த அக்கார்த்தவீரியன்-சில நாட்பின்-பவ்விடஞ் சென்று தவஞ்செய்துக் கொண்டிருந்த அவ்விருடியை-யோர்பாணத்தான் மாய்த்து விடலும்-அது கண்டாற்றாமன்மன நொந்துவைத-அவர் பத்தினியார் மீதினும் இருபத்தோரம்புகளையேவி-உயிர் சோர்ந்து விழச்செய்தவன் தன்னகர்க்குச் சென்றபின்-நைசமிசவனத்தினின்றும் வந்த இராமனோடவள்-குற்றுயிருட்னிருந்து நடந்ததனைத்து முணர்ந்தி உயிரை விட்டனளாக-குமாரனான இராமன்-மிகவுமனம் வருந்தினவனாகி-யம்மாதா பிதாவிற்குரிய கடைமையை-தத்தாத்திரய முனிவரைக் கொண்டு முடித்த பின்-போர்நாள்-

நினைத்தவுடன் தெய்வவுருக் கொண்டு வந்த தன்றாய் வாக்கியப் பிரகாரம்-கைலாயவரையையடைந்து-பல முறை வணங்கி-துதி செய்ததற்கிரங்கி-காட்சி தந்த பரமசிவத்தால்-சடக்ஷர மந்திரத்தை யுபதேசிக்கப் பெற்று மயூரத்தலத்தெழுந்தருளிய கணேசர் திருவருடியைப் பூஜித்து-அம்மனுவையுச்சரித்து-அரிய தவங்களைச் செய்ய-பிரசன்னமான வக்கடவுளால்-சத்துருகண்டகனென்ன மாறாத வலிமையும், பரசாயுதமும், பரசிராமனென்னுந் திருநாமமுடன், சிரஞ்சீவப்பதமுமளிக்கப் பெற்றவனாய்-மீண்டு-தன் பழம் பகையாகிய கார்த்த வீரியனையும்-அவன் வம்ச பரம்பரை யோரையும்-அறக் களைந்து-மற்று- மெதிர்த்தவரசர்களையும் சங்கரித்து அவர்களரசர் சாட்சியையந்தணர்கட்கு வழங்கி அது முதல் யோகசமாதியனாய் வசித்திருக்கின்றனன்.

***********************************************************************