விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்தெட்டாவது-அகத்தியருபாசித்தது வினோதமிகுசையவரையிற்கும்பமுனிகமண்டலமதன்மேற்காகமாய் மேவிக்கவிழ்த்திட

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்தெட்டாவது-அகத்தியருபாசித்தது

வினோதமிகுசையவரையிற்கும்பமுனிகமண்டலமதன்மேற்காகமாய்

மேவிக்கவிழ்த்திடுகணேசரவ்வுருவொரீஇவேதியனெனத்தோற்றலு

முனீசன்வெகுண்டுகுட்டத்தொடரவதுபோதவன்முழங்காற்றளரவே

முதியபுவனமதெங்குமோடியபினெழில்வேழமுகனானெனக்காட்டலும்

அனாதநாதாவெனறியாமைப்பொறுத்தருடியென்றன்புமச்சமுமிகுத்

தையனையிலக்காக்குவித்தவங்குலிகொடுதனவிர்முடியில்குட்டிக்கொள

மனோரதபலன்வழங்கிடுமெந்தைதிருவுளமகிழ்ந்தமாதவனேற்றவா

மலயத்துமுதவவிரிநீர்குண்டிகைப்பெய்துமாறிலருள்செய்தானரோ.

இதன் சரித்திர சங்கிரகம்

அருமையா-அகத்திய முனிவர்-கைலையிற் பெற்ற-காவிரி நதியைக் கொண்டிருந்த கமண்டலத்தைக் கவிழ்த்தவுடன்-கணேசர்-அக்காகவுருமாறி-பிராமணப்பிள்ளை வடிவங் கொண்ட வரேதியுலாவ-அகத்தியர் கண்டு சினந்து-அவரைக்குட்டுமாறு தொடர-அம்முனிவருள்ளமுங் காலகளுந்தளர்வெய்த-உலகமெல்லாஞ் சுற்றி-யோட்டங் காட்டின பின்னர்-யானை முகத்துடன் பிரத்தியக்ஷமாகலும்-அது கண்டு-முன்குட்டுதற் கோங்கினகரத்தாற்-தமது சிரத்திற்றாமே குட்டிக் கொண்டு-சாஷ்டாங்கமாகப் பணிந்தெழுந்து-பலவாகத்துதி செய்த அன்பிற்கு-கணேசர் மிகவும் கிருபை சுரந்து-அம்முனிவன் வேண்டின வகையே பொதிய மலையில்-சிவபிரானையபிடேகிக்குமாறு-அவண்பரவியோடுகின்ற அக்காவிரிஜலத்தை தமது கரத்தாலள்ளியக்கமண்டலத்தில் வழியும் படியாக விடுத்துக் கொடுத்ததன்றியும்-அளவற்ற வரங்களையும் நல்கலும் அவரதைப் பெற்றகக்களிப்பாகி பொதியமடைந்தனர்.

***********************************************************************