விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்தொன்பதாவது- காசிபர்முதலாயினோருபாசித்தது ஏற்கும்பிதாமகன்பரிவாலுணர்த்திடுமேகாக்கரத்தையுன்னி யீண

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்தொன்பதாவது- காசிபர்முதலாயினோருபாசித்தது

ஏற்கும்பிதாமகன்பரிவாலுணர்த்திடுமேகாக்கரத்தையுன்னி

யீண்டிடுகணேசரால்வேண்டுவரமெய்துகாசிபன்மருவுமீழுவராஞ்

சேற்கணாயகியர்கர்ப்பத்துதித்திடுமக்கடேவர்முதலோர்க்கவனவிற்

சீர்மல்கெழுவகைமனுவினைக்கணித்தவணவர்கள்செய்தவத்திற்குவந்து

மேற்கொள்பல்வாகனஞ்சொருபமொடுமுன்னின்றுவேண்டினவரங்களருள்பின்

விதிபீடரத்தவகைதிருவுருக்கண்டுபாசித்துமெய்யன்பினோடு

நாற்கதியுமெளிதின்வழங்குமான்மியமிகுமுநான்குநாமங்களாலந்

நமதனைப்போற்றிதத்தம்பதந்தவரவர்கணண்ணினர்தம்பெருகுவே

இதன் சரித்திர சங்கிரகம்

பிரம்மன் மனத்திலுதித்த புதல்வழுவருளருவரும் -அறிவு ஒழுக்க முதலிய மேன்மையிற் சிறந்தவருமான காசிபர்-பிதாவாலுபதேசிக்கப்பெற்ற ஏகாட்சரமந்திரத்தை ஜபித்து-ஆயிரவருட வரையில் தபஞ் செய்து-பிரத்தியக்ஷமான கணேசரிடத்தில்-உயிர்த்தொகைகளை-சிருஷ்டிசெய்வதற்கும்-மற்றக்கடவுளே-தனக்கு-கசியபநதரெனப் பேர் கொண்டு புத்திரனாய் வரும்படியாகவும்-வரம் அருளப்பெற்று-தமது பத்தினிகள் பதினால்வரோடுங்கூடி-யாச்சிரமத்தில் சுகித்திருக்கையில்-அவர்கள் கர்ப்பத்தினிடமாக-தேவர் முதலிய அளவற்ற சராசரங்களு-முற்பத்தியாயின.

அத்தேவர்கண் முதலிய யாவரும்-ஒன்று-நான்கு-ஐந்து-எட்டு-பன்னிரண்டு-பதினாறு -பத்தொன்பது எனும் அக்ஷரங்களையுடைய விநாயகமூர்த்தி மந்திரங்களை தங்கள் பிதாவாலுபதேசிக்கப் பெற்று-அவ்வவர்களும்-வேறுவேறாகத்தியானித்து ஆயிரவருடம் தவஞ்செய்யும்போது-அவரவர்கள் பாவனைப்படி-வந்து தரிசனை கொடுத்த-கணேசமூர்த்தியால்-சம்பத்து-அதிகாரம்-செல்வம்-வாகன முதலியனவும்-வேண்டின வரங்களையும்-தரத்திற்குத் தக்கபடி-அருளப்பெற்றனர்கள்.

******** உபாசனாகாண்டம் முற்றிற்று *******