விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 3 விக்கினராஜர்- ஆரணத்துறைநாடிபோகிபதநச்சியாற்றபிநந்தனன்வேள்வியை யடற்காலரூபியிந்திரனேவலாற்சென்றழித்துவேறு

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

3. விக்கினராஜர்- ஆரணத்துறைநாடிபோகிபதநச்சியாற்றபிநந்தனன்வேள்வியை

யடற்காலரூபியிந்திரனேவலாற்சென்றழித்துவேறுகிலிடர்செய்

காரணத்தால்வரேணியன்மனைவிபுட்பகைகனிவினீன்றிட்டமகவைக்

கணத்தினின்மறைத்தவண்சேயாய்விளங்கவக்கங்குலிற்கண்டுவெருவி

வாரணமுகத்ததென்றோர்மடுக்கரைவைக்கவந்தெடுததிடுபார்சுவ

மாமுனிவளர்க்குநாட்கிரவுஞ்சசனாகுவாய்வரவூர்ந்துகூற்றின்மேலா

மாரணனெனச்சொலவ்விக்னனையடக்கியருளினவாற்றினவனாமமு

மரீஇவிக்னராஜரென்றுலகெலாமினிதேத்தவருபிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

ஏமவதியெனு நகரத்ததிபனான அபிநந்தன மஹாராஜான்-ஸ்வர்க்காதி போகங்களைநாடி யாகம் நடத்தி வருவதை-நாரதராலுணர்ந்து மனக்கலக்கமுற்ற இந்திரன்-அதையழிக்கும் படி காலரூபியெனும் விக்கினனையேவ-அவன் சென்று-அவ்வரசன் செய்கின்ற வேள்விமட்டில் விடாமல்-உலகெங்கணும் உலாவி ஆங்காங்கு நடத்தும் தலைவருடன் வேள்விகளை யழித்து வருங்கால்-அவன் கொடுமைக்காறறாது தேவர் முதலானோர் வேண்டுதலால்-கணேசர்-அரிய தவங்களைச் செய்தவரேண்யராஜனுக்குப் பிராணநாயகியெனும் புஷ்பகையீன்ற புத்திரனை-தற்சணமே மறைத்து வேழமுகத்துடனோர் குழந்தையாக வெழுந்தருளலும்-அது கண்ட தாயும் தந்தையும் வெருவினவர்களா யாக்கியாபித்தவாறேவலாளர்-தோளிலேந்தி மார்போடணைத்தன் றிரவிற்றானேயந்நகர்க்கடுத்தமடுக்கையிற் றழையின் மீதேகிடத்திச் சென்ற பின்பு-அங்கு பிராதசந்தியை நடத்த வந்த பார்சுவ முனிவர்-

அத்தெய்வீகக் குழவியைக் கண்டு-அகமகிழ் வாயெடுத்து-வீரியவற்சலையெனுந் தமது தேவிகையிற் கொடுக்க-ஏந்தின அவ்வுத்தமியுங்கொங் கைகளிற் சுரந்தபாலூட்டி யன்போடு வளர்க்க-வளர்ந்து வருநாளில்-சவுபரிமுனிவர் பத்தினியாகிய மனோமயையைக் கிரவுஞ்சனென்னுங்காந்தருவராஜன்-கண்டு மோகித்து வந்து கரத்தைப் பற்றி நிற்குஞ்சமயத்தில்-ஸ்நானமாடி ஆச்சிரமமடைந்த அம்முனிவர் சினந்து-அவனை மூடிகமாகச்சபிக்க-அவனும் அவ்வாறே மூடிகமாகி உலகமெங்குந்திரிந்து-கடையிற்-குழந்தை கணேசர் வீற்றிருந்தருளும் பார்சுவமுனி யாச்சிரமத்திற் பிரவேசித்து-வேதிகைக்குண்ட முதலானவைகளைத் தோண்டிப் பறிக்கக்கண்டு-அம்மூடிகத்தைப் பாசத்தை வீசிப்பற்றி யூர்தியாகக் கொண்டருளினர்-அவண் சின்னாளில் வந்த இந்திரனாதிதேவ முனிகணங்களுக்கு-பிரகாசத்திருமேனியும்-மிகவும் சுந்தரமான வேழமுகமும்-நீண்ட துதிக்கரமும்-பாசம்-அங்குசம்-தாமரை-மழு-இவைகளையேந்திய சதுர்ப்புஜங்களும்-நுதல் விழியும்-இரத்தின கிரீடம் குண்டலம்-வாகுவலயமணிந்து மார்பிற் சர்வாபரணமும்-தாமரை போன்ற உபயதிருவடியும் விளங்க தரிசனந் தந்தவுடன்-அவர்களும் பணிந்து பலவாறேத்தி தங்களுக்குற்ற விடுக்கண் சகித்து முடியாமையை-விண்ணப்பஞ் செய்துக் கொண்டதன் மேல்-கிருபைசுரந்து-உடனே தமது மூடிகமீதூர்ந்து-ஆகாயத்தையளாவிய ஜடைமுடியும்-கடைவாயிற்கோரைப்பற்களும், பார்க்க பயங்கரமான ஏனைய வடிவங்களுடன் மஹாபராக்கிரமனாயுலவும் விக்கினனை நாடிச்சென்று-தமதங்குசத்தையேவியவனைத் தருவித்தவுடன்-அவன் பற்பலவிதமான ஜாலங்களாற் றெடுத்த போரனைத்து மொழித்து-ஓர்வேலெடுத்தேவ-அது கண்டவனஞ்சி சரண்புக-அவனுக்கு இரங்கி-சர்ச்சனாளிடத்தணுகா திருக்கக் கட்டளையிட்டு-அவனைவிட்டு -உடன் வந்திருந்த-தேவ-ரிஷிகணங்கட்கருள் வழங்கி-மேற்குறித்த தமது தாய் தந்தையருக்கும்-வேண்டினவரங்களை நல்கி-சிவபுரத்திருக்குந் தமதுலகையடைந்தனர்.

விக்கினன்-கடவுட்டிரு நாமத்தோடு-தன் பெயருமொன்றி வழங்கும்படி பிரார்த்தித்தவாற்றால்-விக்கினராஜ விநாயகரெனத் திருநாமம் வழங்கலாயின.

***********************************************************************