விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 10 தூமகேது ஐயுறுநுணிடைசுமுதைசெய்தவத்திற்குமகவருளவைங்கரராகிவந் தவள்வயிற்றச்சுதனைசெலவுய்ப்பவக்கருவினவிழிவ

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

10. தூமகேது

ஐயுறுநுணிடைசுமுதைசெய்தவத்திற்குமகவருளவைங்கரராகிவந்

தவள்வயிற்றச்சுதனைசெலவுய்ப்பவக்கருவினவிழிவென்றவம்பரச்சொல்

வெய்யதூமாசுரனுணர்ந்தவரசியையிரவில்வீட்டவேவினவவுணரம்

மெல்லியறனாதனொடுதுயில்போதமஞ்சத்தைவிபினத்திடலும்விழித்துக்

கையைப்பிசைந்தோலமிடுபுசூழ்கொலைஞரைக்காதிதேறுதலோதியோர்

கவின்குழவியாய்ச்சுமுதைமடியுற்றுமுலையுணக்கண்டவசுரர்க்கோன்சமர்

செய்யவரவனிகத்தொடொழியவாய்த்தூமந்துரப்பியச்சேரலானைச்

செற்றருட்மேகேதுப்பெயர்படைத்துவளர்சீர்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

விந்திய தேசத்தைச் சார்ந்த மகிபாதினி நகரத்தில்-செங்கோற் செலுத்தியிருந்த தூமாசுரன்-சகல நற்குணங்களோடுங் கூடி சிவபக்தியிற் சிறந்தவனா இருக்கையில்-அவனைக் காணும்படி பிருகு முனிவர் வர-அவரை அவ்வரசனுபசரித்தான் பின்னர்-தாழ்வாகவுரைக்கும் அசுரகணத்தில் ஜனித்ததுணர தனது பூர்வ வரலாற்றை விசாரிக்க-அதற்கம்முனிவர்-முன் விகுதியென்னு மரசனாய்பிறந்து-அச்சுவமேதயாகம் தொண்ணூற்றொன்பது முடித்து-நூறாவது வேள்வி தொடங்குகையில்-அஃதறிந்து மனக்கலக்கமுற்ற இந்திரன் புணர்ப்பினால்-நாரத முனிவர்-சிவஜன்மனெனும் விருத்தவேதியனாக-அவ்வரசனிடஞ் சென்றவன் மனைவியைக் கேட்க-கொடாதகாரணத்தால்-அவனையரக்கனாகச்சபித்தன்றியும்-அம்மகத்தையுமழித்துச் செல்ல-அச்சாப்சேடத்தா லிப்போ தசுரனாகப் பிறந்தனை யென்று சொல்லிப் போயினர். சிலநாட்பின் அந்நகரத்தை யடுத்து வசித்திருந்த மாதவராஜன்-நெடுநாள் புத்திரப் பேறில்லாமையால் மனம் வருந்தி-மனைவியான சுமுதையை வெறுத்துக்கூற அவளதற் காற்றாது காட்டிச்சென்று-விஷ்ணுவை நோக்கித் தவஞ்செய்கையில்-அவ்விஷ்ணு வடிவாய் விநாயகர் எழுந்தருளி-தாமே புத்திரராக வருவதாயனுக் கிரகித்து மறைந்தருள -அவள் மீண்டுதன் பதியையடைந்து-களிப்போடும் கருப்ப முற்றுவாழ்கையில் அத்தூமாசுரன் கால வேற்றுமையினால்-பரராஜர்கள் மீது வெளிக்கொண்டு போர்க்குச் செல்கையில்-அசரீரி-நீ-செங்கோன்முறைமைக்குத் தவறாக நடப்பதால்-உன்னைக் கொல்ல சுமுதை வயிற்றில் விஷ்ணு வோர்பிள்ளையாக வளர்கின்றார் என்று கூறக் கேட்டஞ்சி மீண்டபின்-மந்திரிகள் புணர்ப்பினால்-அக்கருவோட தன்றாய் தந்தையரையும் அழிக்கும்படி-

வித்துருமனெனும் சேனைத்தலைவனை ஏவ-அவன் ஐந்நூறு வீரரோடும் சென்று அரண்மனையில் மாதவன் சுமுதை எனு இருவரும் நித்திரை செய்கையில்-மஞ்சத்தோடெடுத்துச் சென்றோர் வனத்திலிட-அவளுணர்ந்தெழுந்து கடவுளை பிரார்த்திக்க-அவரருளால் தெய்வப்படை வீரர்கள் தோன்றி-அவ்வைஞ்நூற்றுவரையழிக்க அது கண்டஞ்சியோடின அச்சேனைத்தலைவன்-தூமனுக்கவ் வரலாற்றை யுணர்ந்த அவனவனைச்சீறி உடைவாளான் மாய்த்து வேறு சிலரை பதிவிருந்து பிரசவித்தவுடன் அச்சிசுவைக் கொல்லும்படி ஏவ-அவர்களும் அவ்வாறே சென்று பதிவிருக்கையில் ஓர் நாள் அச்சுமுதைகவலைகெட விநாயகமூர்த்தி-பாலசந்திரரென்னு நாம தேயத்தோடு ஓர் குழந்தை வடிவமாகத் தோன்றி யவர்களச்சத்தை யழித்து-சுமுதையை நோக்கி-நீ முன் தவஞ் செய்கையில்-விஷ்ணுவாக வந்தயாமே-பின் ஐஞ்நூற்று வரைத் தொலைப்பித்தோம்-இப்போதுன் வயிற்றிற் கருவாகி யிருக்கும் விஷ்ணு பிள்ளையாகப்பிறந்தவுடன்-அதைக் கொல்லும்படி-தூமனேவலாற் சிலரிவிடத்தில் வந்து பதிவிருக்கின்றாகளாதலால் அவ்வபாயத்தைத் தடுக்கவும்-உங்கள் கலிதீர்க்கவும் நாமுன் பிள்ளையாக வந்தோமென்று கூறி தமதுண்மையத் தெரிவித்தருள-அது கேட்டவுடனே சுமுதை பேரானந்தத்தோடு மக்குழந்தையை வாழ்த்தி எடுத்து தனது கொங்கையினின்றும் சுரந்தபாலை ஊட்டி மடிமீது வைத்திருக்கையில்-அவ்வற்புதத்தையங்கு பதிவிருந்தவர்கள் கண்டு விரைந்தோடி தூமனுக்குத் தெரிவிக்க-அவனுமப்பொழுதே நால்வகைப்படையோடும் போர்க்குறித்து அவ்வனத்திற்கு வந்து-சுமுதை மடிமீதிருக்கும் அத்தெய்வகுழவிமீது பாணங்களைச் சொரிய அதுகண்ட தாய்தந்தையர்கள் மனம் வருந்த-அவர்களை யஞ்சலிரென்று திடங்கூறி-குழந்தைப் பெருமானரும்-தமது திருவாய் மலர்ந்தா வலிக்க-அதினின்றும்-கொண்டல் கொண்டலாயெழும்பி-எங்குமிருண் மயமாகமூடிக்கொண்ட புகைப்படலத்தால் தூமனுமவன் படைகளும் பாதலத்துள் வீழ்ந்தக் கணமேயழிந்தனர்-அதனால்-பாலசந்திரமூர்த்தியாகிய பிள்ளைப் பெருமானும்-தூமகேது- வென்னுநாமரா-யாவராலும் துதிக்கப்பட்டு மாதவன் சுமுதைக்குப் பேரருள் வழங்கி தமது திருவுருத்தைக் கரந்தருளினார்.

பின்னரம் மாதவராஜனும் சுமுதையும் தூமகேதுப்பெருமான் கட்டளைப்படி அந்த தூமனது நகரமாகிய மகிபாதினியை அடைந்து அரசு செலுத்தி-கர்ப்பத்திருந்த முகந்தனைப் பெற்று பெருங்களி கூர்ந்து நெடுநாள் வாழ்ந்திருந்து அப்புத்திரனுக்கு மகுடாபிஷேக முதலாகச் செய்து முடித்து அத்தம்பதிகள் மீளாக்கதியடைந்தனர்.

***********************************************************************