விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 11 உடுண்டி விநாயகர் ஒளிர்மணிமுடித்துராசதனரன்பாவென்றுமுலைவறும்வரமதுற்றிவ் வுலகெலாந்தன்னொருகுடைக்கீழ்தாக்க

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

11. உடுண்டி விநாயகர்

ஒளிர்மணிமுடித்துராசதனரன்பாவென்றுமுலைவறும்வரமதுற்றிவ்

வுலகெலாந்தன்னொருகுடைக்கீழ்தாக்கிமாலாதியும்பரையலைத்து

நளிர்புனற்றண்காசிமேவியிறைகேதாரண்ணவாழ்நாளினம்மை

நன்னுதலினின்றைமாமுகராயுதித்தைம்பதோடைந்தினணுகுருக்கொண்

டெளிதினடர்படையெலாம்நூறிவிச்சுவவுருவினேத்தலானைக்கழற்கீ

ழிட்டுடுண்டிப்பெயர்வகித்ததாஅன்றயன்வரத்தீசனோர்கற்பத்தினவ்

வளமைபெறுமவிமுத்தம்விட்டுமந்தரமடையவாழ்திவோதாதன்வீடு

மருவநகரரனமரவெழிறுண்டிராஜராய்வருபிரணவச்சோதியே.

இதன் சரித்திர சங்கிரகம்

கைவர்த்த மென்னுந் தேசத்தில் சிறந்திருந்த பன்மகமென்னும் பட்டணத்தில் பிரமசுரனென்னு மோரசுரனிருந்தான்-அவன்பரமசிவனை நோக்கித் தவஞ் செய்து-யாவர் முடியிற்றன் கையை வைத்தாலும் அவர்கள் சாகும்படி வரத்தைப் பெற்று-அதைச் சோதிக்க-ஸ்வாமிகளையே தொடச் செல்லுகையில்-ஸ்வாமிகள் புன்னகை செய்து கரந்தருளினர். அவரை அவனுலகெங்கும் தேடிக்கொண்டிருக்கக்கண்ட விஷ்ணுவானவர்-அதிரூப செனந்தரிய மோகினிப் பெண்ணா எதிர்வர அப்பிரமசுரன் கண்டு மோகங் கொண்டு தொடர்ந்திங்கிதவார்த்தை கூறி-தனது காமநோயைத் தீர்க்கும்படி பிரார்த்திக்க விஷ்ணுவாகிய மோகினிப்பெண் அதற்கொருவாறரிதி லிணங்கினவரைப்போற் காட்டி-என்னோடொத்துப்பரத நாடகஞ் செய்வையாகி லுன்னைக் கூடுவேனென-அதற்கவனிசைந்து-ஆடத்தொடங்கினானாக-அத்தியிலம் மோகினிப் பெண்-அந்நாட்டியத்தில்-பூப்பிரஸ்தார சாரிகை-யுள்ளாள வட்டத் தபிநயமாகத்-தனதோர்கையை யுச்சியில் வைக்கக் கண்ட அவ்வரசுனும்-அவளிடத்து வைத்த மோகத்தால்-தன்னையும்-தான் பெற்ற வரத்தின் திறத்தையு மறந்து-தானுமப்பெண்போல-தன் கையைத் தன் முடிமீதில் வைக்க-அக்கணத்திற்றானேவெந்து சாம்பராய் மடிந்தனன்-அப்போது விஷ்ணுகளித்து-பன்மக நகரத்திற்றானே வதிந்திருந்தனர். அதனாலது முகந்தை எனும் பெயர் பெற்றது-பின்னரிச்செய்தி-அவன் மகனான துராசதன் கேட்டு-மனம் புழுங்கி-அவ்விஷ்ணு முதலான தேவர்கள் பகையைக் களைய வேண்டுமென்றெண்ணி தன் குலகுருவாகிய சுக்கிரனிடஞ் சென்று முறையிட-அவன் கூறிபடியே-நெடுநாள் சிவபெருமானை நோக்கி யரிய தவஞ் செய்கையில்-ஸ்வாமிகள் பிரத்தியக்ஷமாய் தரிசனை கொடுத்தருளக் கண்டு அவன் வணங்கி-ஒரு வராலுமிறவா வரமும்-மூன்று உலகத்தும் தன்னாணை செல்லவும்-அனுக்கிரகிக்கும் படி பிரார்த்திக்க-அவ்வாறே கொடுத் தெழுந்தருளினர்-பின்-அசுரப்படைகளைக் கூட்டிக்கொண்டு-சென்ற திசையெல்லாம் வெற்றி கொண்டு மூவுலகத்திலும் தன் கொடுங்கோலாணை செலுத்தி வருகையில்-ஓர் நாள்-தன்னமைச்சரோடு-தன்னாணைக்குளடங்காத வுலகமில்லையே என-அது கேட்ட மந்திரிகள்-ஐயா-பிரமன்-விஷ்ணு-இந்திரன் முதலான சமஸ்ததேவ கணங்களு முனிவர்களும் புடைசூழ-சிவபெருமான் காசிப்பதியிலிறை கொண்டெழுந் தருளியி- ருக்கின்றனர்-அஃதொன்றும் தமதாணைக்குளடங்க வில்லையேயெனக்-கேட்ட துராசதன்-மானமீதூர்ந்து-படையெடுத்துக் காசிப்பதியை நோக்கிச் செல்ல-அதனை சிவபெருமா னுணர்ந்து காலத்தை நோக்கி-தேவர்களோடு-காசி நகர் விட்டுக் கேதாரஞ் சென்றனராக-துராசதனப்பதியில் தன்னரசாக்ஷியை நிலை நாட்டினன்- அங்ஙனமாக-பின்னெடுங் காலபரியந்தம்-அவனது கொடுங்கோலால் வருந்திய தேவர்

முதலியோர் பிரமன் கூறின விதமே-உலகமாதாவாகிய மஹாதேவியார் சன்னிதியடைந்து- துராசதனால் தாங்கள் வருந்தா நிற்குங் குறைகளைச் சொல்லக்கேட்டு-அவ்வசுரன் மேற்பிராட்டியார் மனங்கொதித்து விழிகள் சிவப்பவெழுந்த வக்கோபசத்தியே அவர் திருமுகத்தினின்றும் ஐந்து திருமுகமும்-பத்து திருக்கரங்களோடும் வக்கிரதுண்டரெனத் திருவவதாரம் செய்து-அம்மை திருவுள்ளக் குறிப்பின்படி-பூதகணங்களுடன் காசிப்பதியடைந்து-அத்துராசதனோடு இரண்டு நாள்வரையில் பெரும்போராற்றி-அவன் சேனைகளியாவையும்-ஐம்பத்தைந்து திருமூர்த்தமாய்க் கோலங்கொண்டழித்தபின்-அவன் மறைந்தோட வெண்ணுவதைக் கண்டு-விஸ்வரூபங் கொண்டு அவன் முடியி- லொருபாதமு-மக்காசிப் பட்டணத்தி லொரு பாதமுமாக வைத்து-அவனைத் திருவடிக்கீழடக்கி-ஓ-துராசதனே-நீ-நமது பிதாவாகிய சிவபெருமானிடத்தில் என்று மிறவாவரமும்-மாறாப்பத்தியும் பெற்றுள்ளாயாதலால்-நமது திருவடிக்கீழ் அப்படியே என்று மிருந்து-இங்கு வருகின்றவர்களுடைய எல்லாப் பழிபாதகங்ளையும்-போக்கிக் கொண்டிருக்கக் கடவையென்றனுக்கிரகித் தருளினர்-அப்போது உலகமெல்லாம்-அவ்வக்கிரதுண்டரை-உடுண்டி எனும் திருநாமத்தினைச் சாற்றிப் புகழ்ந்து துதித்துய்ந்தன-பின் சிவபெருமான் சமஸ்ததேவகணங்களுடனக்காசிப்பதிக் கெழுந்தருளினர்.

***********************************************************************