பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 119 ஜெயந்தி மஹோத்சவ விழா
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் முன்னிலையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி பூஜ்யஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 119 ஜெயந்தி மஹோத்சவ விழா ஸ்ரீமடம் காஞ்சிபுரத்தில் மிக விசேஷமாக கொண்டாடப்பட்டது.
இந்த முன்று நாள் விழா ஜூன் 2 அன்று தொடங்கியது. வேத பண்டிதர்கள் சதுர் வேத பாராயணம் செய்தார்கள். ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டுவித்வத் சதஸ் நடைபெற்றது. ஆன்மீகச் சொற்பொழிவுகள் நித்யம் நடைபெற்றன.
.jpg)
His Holiness at the Adhistanam of
HH Pujyasri Chandrasekharendra Saraswathi Shankaracharya Swamiji
.jpg)
Vidvat Sadas taking place in the presence of His Holiness Pujyasri Sankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji
.jpg)
Vidwans being honoured in the presence of His Holiness Pujyasri Sankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji
.jpg)
Veda Pandits performing Maharudram
.jpg)
Abhishekam to His Holiness with Sanctified Water
.jpg)
His Holiness performing Deeparadhana
.jpg)
His Holiness offering Flower Kreetam
ஜெயந்தி தினமான ஜூன் 4 அன்று இந்த மஹோத்சவம் அதிகாலை ஸ்ரீமடத்தில் மங்கள வாத்யத்துடன் துவங்கிற்று. ஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானதிற்க்குபூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விசேஷ பூஜைகள், அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்தார்கள்.
சதுர்வேத பாராயணம் மற்றும் மஹாருத்ரம், பூர்ணாஹுதி செய்யப்பட்டது. ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் ஹோமம் செய்த புனித நீர் கொண்டுஅதிஷ்டானத்திற்க்கு கலசாபிஷேகம் செய்தார்கள்.
நூருவருடமாகும் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் வருடாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. ஸம்ஸ்க்ருத பண்டிதர் ஸ்ரீ ஸ்ரீநிவாச ஷர்மா இந்த சொற்பொழிவை ஆற்றினார்கள். ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் ஜெயந்தி தினத்தன்று இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
.jpg)
Annual Endowment Lecture by Shri Shrinivasa Sharma
ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயாவின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாலை வேளையில்பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஓரிருக்கை மணி மண்டபத்திற்கு விஜயம் செய்தார்கள். அங்கு பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் மூர்த்திக்கு பூஜை மற்றும்தீபாராதனை செய்தார்கள். பின்னர்மஹாஸ்வாமிகளின் ஓவியம் மற்றும் பாதுகை ஓரிருக்கை மண்டபத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் எடுத்து வரப்பட்டது.
.jpg)
Traditional welcome to His Holiness with Poornakumbham
.jpg)
Veda Vidyarthis with His Holiness
.jpg)
His Holiness performing Alankaram
.jpg)
His Holiness performing Deeparadhana
.jpg)
His Holiness blessing the Veda Vidyarthis with fruits
.jpg)
Golden Chariot being drawn in the presence of His Holiness
மஹோத்சவ நாட்களில் மாலை வேலையில் இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. ஸ்ரீ ஜெயந்தி தினத்தன்று வயலின் கச்சேரி நடைபெற்றது. ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் பங்கு பெற்ற எல்லா இசைக் கலைஞர்களையும் ஆசீர்வதித்தார்.
.jpg)
Violin Recital
.jpg)
His Holiness blessing the artists
கச்சி மூதூர்அறக்கட்டளை- வெகுமானம் விநியோகம்
கச்சி மூதூர்அறக்கட்டளைசார்பாக கிராமத்துப் பூசாரிகளுக்கு, குருக்களுக்கு மற்றும்அர்ச்சகர்களுக்கும் வெகுமானம் வழங்கப்பட்டது. 1986ஆம் ஆண்டுபூஜ்யஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசியுடன் மிகவும் ஏழ்மையாக இருக்கும்அர்ச்சகர்களுக்கு மாதாந்தர நிதி உதவி செய்யஇந்தஅறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்தஅறக்கட்டளை மறைந்த நீதிபதி ஸ்ரீ. ந. கிருஷ்ணசுவாமி ரெட்டியாரின் தலைமையில், உறுப்பினர்களாக மறைந்த மன்னார்குடிஸ்ரீ. அ. ஸ்ரீநிவாச ஐயங்கார், டாக்டர். இராமலிங்க பட் (நிறுவனசெயலாளர், பொருளாளர்) மற்றும் ஸ்ரீ. லோகவிநாயகம் அவர்களால்தொடங்கப்பட்டது. ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆணைப்படி வாய்மொழி பரீட்சையில் தேர்ச்சி பெற்றமற்றும்மாதாந்தர வருமானம் ரூபாய் 1500க்கும் குறைவாக இருக்கும்அர்ச்சகர்களுக்கு(பட்டாச்சார்யா, சிவாச்சாரியா, பூசாரிகள்) இந்தவெகுமானம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு மாதம் ரூபாய் 1000வழங்கப்பட்டுவருகிறது. இந்தஅறக்கட்டளை பொது மக்களின் நன்கொடை மற்றும் ஹிந்து குரூப் வெளியீடு அமைப்பு மற்று சிட்டி யூனியன் வங்கியிடம் இருந்து நன்கொடை பெற்று இயங்கி வருகிறது.
.jpg)
His Holiness interacting with the Trustees and beneficiaries of the Kacchi Modoor Trust
.jpg)
A Poojari receiving honorarium blessed by His Holiness
.jpg)
His Holiness interacting with a senior Archaka
எராளமான பக்தர்கள் ஸ்ரீ ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.